தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
நமது STR Division மாதாந்திர கூட்டம் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகம் 5வது தளத்தில் 09-09-2025, 2- வது செவ்வாய்க்கிழமைஅன்று மாலை 0315மணி முதல் 0545 மணி வரையில் நடைபெற்றது.
அஞ்சலி, குடும்ப நிகழ்வுகள் மற்றும் சென்ற மாத கூட்ட நிகழ்வுகளை மாவட்ட செயலாளர், எடுத்துரைத்தார். வேலூர்மாநில மாநாட்டிற்கான சார்பாளர் தேர்வும் அதனைத் தொடர்ந்து எர்ணாகுளம் அ. இ. மாநாட்டுக்கான சார்பாளர் தேர்வும் நடைபெற்றது.
வேலூர் மாநில மாநாட்டிற்க்கு 36 சார்பாளர்களும், 10 பார்வையாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
அ. இ. மாநாட்டிற்க்கு 18 சார்பாளர்களும், 10 பார்வையாளர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நமது மாநிலச் செயலாளர் அவர்கள், அ. இ. மாநாட்டிற்க்கு பார்வையாளர்கள் கலந்து கொள்ள முயற்சி செய்வதாகக் கூறினார்..
தீர்மானங்கள்
1) தமிழ் மாநில தஞ்சாவூர் மற்றும் சேலம் செயற்குழுவின் ஒருமித்த தீர்மானம், அரசாங்கத்துடன் நமது மத்திய சங்கம்உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி ஓய்வூதிய மாற்றத்தை பெற வேண்டும்.
பாட்டியாலா CWCலும் தமிழ் மாநில செயலரால் வலியுறுத்தப்பட்டது.
ஊதிய மாற்றம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் நாமும் பேச்சு வார்த்தை மூலம்
3rd PRC அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றம் பெற மத்திய சங்கம் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை
மாநிலசங்கம் எடுக்க வேண்டும் என STR மாவட்ட பொதுக்குழு வலியுறுத்துகிறது.
2) சென்னை சொசைட்டி பிரச்சனையில்
நமது அ. இ. சங்கம் பாடியாலா மத்திய செயற்குழுவின் முடிவின்படி, தமிழ் மாநில செயலாளர், டெல்லியிலுள்ள மத்திய கூட்டுறவு சங்க பதிவாளரை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை
மத்திய சங்கம் செய்து, சொசைட்டி பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு மாநிலச் செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நமது பொதுச் செயலாளர் அவர்கள் கூட்டுறவு பதிவாளர் அவர்களுக்கு 8-9-2025 அன்று கடிதம் எழுதியிருப்பதை STR மாவட்ட சங்கம் வரவேற்கிறது. பாராட்டுகிறது.
அதே சமயத்தில் பிரச்சனையின் தீவிரத்தையும், ஊழியர்களை பாதிக்கின்ற காலதாமதத்தையும் கணக்கில் கொண்டு, நீதிமன்ற தீர்ப்புகள், சொசைட்டிஆவணங்களை பரிசீலனை செய்தல், உரிய Audit போன்ற நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க அவற்றின் குறுக்கீடில்லாமல் உடனடியாக
Special Officer with Full / Sufficient Powers, நியமனம் செய்யப்பட்டு உறுப்பினர்களின் நிலுவைத் தொகையினை விரைவில் பெற்றுத்தர STR மாவட்ட சங்கம் மாநில சங்கத்தை கேட்டுக்கொள்கிறது.
மாவட்ட தலைவர் தோழர் N. K. அவர்கள் மாநிலச் செயலாளர் தோழர்
S. சுந்தரகிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றியினையும் மீண்டும் அவரே மாநில செயலராக தொடர நமது ஒத்துழைப்பினை நல்குவோம் என்றும் கூறினார்.
மாவட்ட செயலாளர்
தோழர்ன N. S. தீனதயாளன் அவர்கள், மாநில மாநாடு மற்றும் அ. இ. மாநாடு செலவிற்க்காக, நமது வேண்டுகோளுக்கிணங்க நிதி உதவி செய்த அனைத்து தோழர் தோழியர்களுக்கும்
நன்றி கூறினார். நன்றியுறையுடன்
மாவட்ட பொருளாளர் தோழர் சுந்தரபாபு அவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழமையுடன்
உங்களின்
N. Sl. தீனதயாளன்.
DS STR Chennai.