IDA INCREASE FROM 1-1-2023

IDA DECREASED 0.2% FROM 1-1-2024 - TOTAL 215.4%

Monday 12 November 2018

 
Sri Ananthkumar in our 78.2% VICTORY CONFERENCE AT BANGALORE in 12.11.2016
பெங்களுர்: மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) நேற்று நள்ளிரவில் காலமானார் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்து அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார். பாஜக கட்சியை சேர்ந்த இவர் 1996ல் இருந்து பெங்களூர் தெற்கு லோக் சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். அதன்பின் 6 முறை அதே தொகுதியில் வெற்றிபெற்றார். ஒருமுறை கூட தேர்தலில் தோல்வி அடையாத இவர் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார்.
இரண்டு மாதம் முன் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதன் காரணமாக அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அதன்பின் இவர் உடல் நிலை தேறி இந்தியா வந்து தனது பணிகளை தொடங்கினார். கடந்த அக்டோபர் 20ம் தேதிதான் சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பினார்.
இந்த நிலையில் சில வாரம் முன் மீண்டும் இவருக்கு உடலில் பாதிப்பு ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ராஜ்நாத் உள்ளிட்ட சில தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்து வந்தனர்.

நேற்று அவருக்கு உடல்நிலை மிகவும் மோசம் ஆனது. அவருக்கு அளித்து சிகிச்சைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்னும் பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அனந்தகுமாரின் உடல் பெங்களூரு தேசிய கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment