IDA INCREASE FROM 1-1-2023

IDA DECREASED 0.2% FROM 1-1-2024 - TOTAL 215.4%

Monday 30 March 2020

முதலமைச்சர் நன்கொடை
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா நச்சுக் கிருமி தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள மத்திய /மாநில அரசுகள் 144 தடை உத்திரவை அனைத்திந்திய அளவில் அமுல்படுத்தியுள்ளன . வீட்டுக்குள்ளேயே பூட்டப்பட்டுள்ளது போல நாம் உணருகிறோம். உள்நாட்டிலும் , வெளிநாடுகளிலும் உள்ள நம் தோழர்கள் தங்கள் வீடுகளில் நலமாக இருப்பதாக நம்புகிறோம். அவர்களின் குழந்தைகளும் வெவேறு நாடுகளில்  நல்ல உடல் நலத்துடன் இருப்பார்கள் என எண்ணுகிறோம். நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சூழலில் இருந்து வருகிறோம். அரசுகள் விடுத்துள்ள கட்டுப்பாடுகள் நம்முடைய நலனுக்காகவே உள்ளன. எனவே தயவு செய்து மதித்து நடக்கவும்.

நம் மாநில செயலர் நாம்  எல்லோரும்  இந்த கொடிய கொரோனா தொற்று நோயை  (covid  19) ஒழிக்க தமிழக முதல்வர் நல நிதிக்கு நன்கொடை தாராளமாக வழங்கிட  ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார் . 144  உத்தரவு அமலில் இருக்கும் போது , வீட்டை விட்டு வெளியே வந்து வங்கிகளுக்கு சென்று வந்தால் தொற்று நோய் பரவக்கூடிய அபாயமிருக்கிறது . எனவே  நெட் பாங்கிங் வசதி உள்ளவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே தமிழ் மாநில வங்கி கணக்கில் பணத்தை அனுப்பிவிட முடியும். அவ்வாறு பணம் அனுப்புபவர்கள், பணம் அனுப்பிய விபரங்களை STR வாட்சப் குரூப்பில் பதிவிடவும். நெட் பாங்கிங் வசதி இல்லாதவர்கள் 144 தடை உத்தரவு நீக்கிய பின் வங்கி மூலமாக பணம் அனுப்ப வேண்டுகிறோம்.  
நீங்கள் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண் , வங்கியின் பெயர் முதலிய விபரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நம்முடைய எதிர்கால நலனுக்காக , நாட்டின் நலனுக்காக நிதியுதவியை தாராளமாக அளிக்கும் படி மிக மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பணம் அனுப்பிய தகவல்களை வாட்சப்பில் உடனே பதிவிட STR DIVN  5 வாட்சப் குரூப்களிலும் வசதியை ஏற்படுத்தித் தர வாட்சப் அட்மின் இடம் கூறியுள்ளோம்.
தயவு செய்து மற்ற தகவல் எதையும் வாட்சப்பில்  பதிவிட வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் நலத்தையும், உங்கள் இல்லத்தர்களின் நலன்களையும் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும்.
நன்றி, வணக்கம் .
தங்கள் தோழமையுள்ள 
A .சுகுமாரன்,                               
கோட்டத் தலைவர்.
S.சுந்தரகிருஷ்ணன் ,
கோட்டச் செயலர்.
N .மோகன்,
கோட்டப் பொருளாளர்.

காம்ரேட்ஸ்,  நமது அனைத்திந்திய சங்கமும், மாநில சங்கமும் விடுத்த அறைகூவலுக்கு ஏற்ப நமது உறுப்பினர்கள் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கும், மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் நன்கொடை அனுப்ப தொடங்கி உள்ளார்கள்.    அவர்கள் தாங்கள் அனுப்பிய விவரத்தை தெரிவிப்பதற்காக மட்டும் நமது வாட்ஸப் குரூப் அனைத்தையும் (மொத்தம் 5)  தோழர்கள் வசதிக்காக திறந்து வைத்திருக்கிறோம். வேறு எந்த செய்திகளையும், photo, video உட்பட இவைகளில் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment