IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 29 September 2023

 தோழர்களே, வருகிற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க தூய்மை பணி ஆற்ற வேண்டும் என்று நமது பாரத பிரதமர் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் CGHS அலுவலகம் சார்பாக நம் பெரம்பூர் பகுதி CGHS டாக்டர்களும், அலுவலக ஊழியர்களும் அன்று திருவிக நகர் ரோட்சைட் பார்க், திருவிக பஸ் நிலையம் அருகே தூய்மைப்பணி ஆற்ற இருக்கிறார்கள். இந்த தூய்மைப் பணியில் நம்மையும் கலந்து கொள்ளுமாறு CMO டாக்டர் ரேவதி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். ஆகையால் பெரம்பூர் CGHS பயணாளிகள், மற்றும் தோழர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டு அந்த தூய்மை பணி செயல்பாட்டை வெற்றிகரமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தோழர்கள் அனைவரும் 1-10-23 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திரு.வி.க. நகர் ரோட்சைட் பார்க், திருவிக பஸ் நிலையம் அருகில் தவறாமல் வருகை தந்து திரளாக கலந்து கொண்டு தூய்மைப்பணி ஆற்ற வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்.  S. நரசிம்ஹன், பெரம்பூர் CGHS ஆலோசனைக்குழு உறுப்பினர். மொபைல் நம்பர் 9444415150



No comments:

Post a Comment