IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 0.6% FROM 1-7-2025 - TOTAL 227.1%

Wednesday, 16 July 2025

 மனிதச்சங்கிலி இயக்கம் 25.7.2025 அன்று சென்னையில்! 


மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி கேட்கும் பொறுப்பை AIPRPA மாநில உதவிச் செயலர் தோழர் M. நாராயணன் ஏற்றுக் கொண்டு, இன்று (16.7.2025) பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்றார். 


Chief PMG அலுவலகம், சித்ரா சாலையிலிருந்து...., மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடற்கரை என நாம் முன்மொழிந்த இடங்களை காவல்துறை ஒவ்வொன்றாக  நிராகரித்தது.


கடும் போராட்டத்திற்குப் பிறகு, எழும்பூர் 

 இராஜரத்தினம் ஸ்டேடியம் எதிரில் 


 25.7.2025 மாலை 3 மணி முதல் 4 மணி வரை

 மனிதச் சங்கிலி இயக்கம் நடத்திட காவல் துறை அனுமதியளித்துள்ளது.


இந்த அனுமதியை பெறுவதற்காக அரை நாள் கடுமையாக போராடிய தோழர் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!


 *அனைத்து சங்க பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்: 


ஆலோசனைக் கூட்டத்தில் உறுதியளித்த எண்ணிக்கையில் ஓய்வூதியர்களை போராட்டத்திற்கு திரட்டிட முழு சக்தியையும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 C.K. நரசிம்மன் 

கன்வீனர்

கூட்டுப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு


 தோழர்களே தோழியர்களே வணக்கம்.

 16-07-2025 முதல் 20-07-2025  வரையில் 5 நாட்கள் மாவட்ட செயலாளர் விடுமுறையில் செல்வதால்  தோழர் S. நரசிம்மன் அவர்கள் பொறுப்பு செயலராக செயல்படுவார்.

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.


Tuesday, 15 July 2025

 STR Division 

July 2025 Meeting. Flower Bazaar 

 Fifth Floor , Chennai - 1 .



தோழர்களே தோழியர்களே,

வணக்கம்.

 08-07-2025, இரண்டாவது செவ்வாய் கிழமை நமது மாதாந்திர கூட்டம் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகம் 5 வது தளத்தில் மாலை 03.15 மணிக்கு தோழர் N. K. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த தலைவர் 

S. C. Maheshwari, Bharat Pensioner Samaj, G. S, அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

வரவேற்புரையில், மாவட்ட செயலாளர், 16-06-2025 அன்று மாநில செயலாளருடன் திரு. G. K. வாசன் M. P. அவர்களை சந்தித்ததையும், 18-06-2025 அன்று கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு  Special Officer ஐ நியமித்து நமது உறுப்பினர்களுக்கு சேரவேண்டிய சொசைட்டி நிலுவைத் தொகையினை Special Officer  மூலமாக இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்,என்றும் கூறினார்.

26-06-2025  அன்று  சென்னையில் நடைபெற்ற, CCA TN

Adalat மற்றும் CGHS Panchayat  ஆகியவற்றில் தானும், தோழர் 

D. Victorraj, பொறுப்பு செயலாளர் அவர்களும்  கலந்து கொண்டதையும்  விளக்கி பேசினார்.

இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற புதிய உறுப்பினர் சேகர் அவர்களுக்கு டர்கி டவல் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டார். மூன்று புதிய உறுப்பினர்களையும் சேர்த்து நமது உறுப்பினர் எண்ணிக்கை1815 ஆகும்.

 12-07-2025  அன்று  தனது பிறந்தநாளை  முன்னிட்டு இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  SKC கொடுத்து நமது அ. இ. துணைத் தலைவர்

தோழர் முத்தியாலு அவர்கள் கொண்டாடினார். அவருக்கு நமது வாழ்த்துக்களையும், டர்கி டவல் போர்த்தி தெரிவித்துக்கொண்டோம்.

நமது உறுப்பினர் தோழர் சத்தியமூர்த்தி P. S. DGM STP அவர்கள் ஜூன் மாதத்தில் நடைபெற்ற தனது மகள் சௌ. ரஞ்ஜனி, சிரஞ்சீவி. வெங்கடேஷ் திருமண நிகழ்வினை நம்முடன் பகிர்ந்து கொண்டு அடுத்த மாதக் கூட்டத்திற்கு  தான் SKC வழங்குவதாக தெரிவித்து ரூபாய் ஐந்தாயிரம் நமது பொருளாளரிடம் வழங்கினார். நமது ஆசிகளை மணமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைவர் அனுமதியுடன்

தோழர்கள்,

சுப்பா ராவ்

சிவ சங்கரன்,

விக்டர்ராஜ்

பாஸ்கர்

கிரி 

ராமகிருஷ்ணன்  ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

மாநில செயலாளர் தோழர் 

S. சுந்தரகிருஷ்ணன் அவர்கள் 23-06-2025 அன்று காணொளி  வாயிலாக நடைபெற்ற  அ. இ. செயற்குழுவில் தான் பங்கேற்றதையும்,  S-30 பிரச்சனை என்ன என்பதை விளக்கிக் கூறினார்.

அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.

 78.2%  நிலுவைத் தொகையினை CCA நிர்வாகத்துடன் பேசி நமது உறுப்பினர்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறோம். மேலும் LPD பிரச்சனையையும் 

CCA நிர்வாகத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம். 9-7-2025 நாடு  தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு நமது அ. இ. சங்கத்திடமிருந்து அறிவிப்பு ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

இறுதியாக தோழர் K. முத்தியாலு அவர்கள், 23-06-2025 அ. இ. செயற்குழுவில் தான் கலந்து கொண்டதையும் நாம்  மத்திய அரசு பொதுத்துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், மத்திய அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகையால் நாம்  Validation Act 25 எதிர்த்து நீதி மன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை. மேலும் ஒத்துழைப்பு நல்கும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் மட்டும் நீதிமன்ற செலவுக்காக அளிப்பது போதுமானது, நான்கு லட்சம் ரூபாய் தேவையில்லை

என்றும், மேலும் நாளை 09-07-2025 அன்று நடைபெறவுள்ள அ. இ. பொது வேலை நிறுத்தத்தில் நாம் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டும் என்றும்

 தெரிவித்தார்.  தோழர் N.K., மாவட்ட தலைவர் அவர்கள், அனைவரும் ஒன்றினைந்து நமது பிரச்சனை களுக்கு தீர்வு காண்போம் என்றார்.

பொருளாளர் தோழர் C. B. சுந்தரபாபு அவர்கள் நன்றி கூறி நிறைவு செய்தார். தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்.

Wednesday, 9 July 2025

 இன்று நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் பொது வேலை நிறுத்தம் மற்றும் அதற்காதரவாக கிண்டியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நமது அமைப்பைச் சார்ந்த தோழர்கள் க. முத்தியாலு, என். எஸ். தீனதயாளன், எஸ். சிவசங்கரன், வி.கே.கோபாலன் மற்றும் ராம்குமார் கலந்துகொண்டனர். இதில் தோழர் க. முத்தியாலு கைது செய்யப்பட்டு மடுவங்கரை சமுதாயக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.









Tuesday, 8 July 2025