IDA INCREASED 4.8% FROM 1-1-2022

Thursday, 19 December 2019

பென்ஷனர் தின சிறப்புக் கூட்டம் 16-12-19

STR DIVISION பென்ஷனர் தின சிறப்புக் கூட்டம் 16-12-19 அன்று கிண்டியில் உள்ள TANSTIA HALLல் மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் A. சுகுமாரன் அவர்கள் தலைமை தாங்கினார். சென்ற கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மறைந்த முன்னாள் T-3 (NFPTE) பொதுசெயலர் தோழர் ஹர்சுல்கர்  மற்றும் கீழ்கண்ட நமது உறுப்பினர்களுக்கும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

1.Com  S. Ramakrishnan, Retd. SDE, STSR, CNI & our ex treasurer 2. Com K. Madasamy, Retd. CTS, TVL SSA 3. Com N. Natesan, Retd DE, TN CNI  4. Com S. Rajagopal, Retd CSS, TN CNI. மற்றும் Com S. Arunachalam, DS TVL SSA
  
தோழர் N. மோகன் சென்ற கூட்ட அறிக்கையை அவையில் வாசித்தார். அதில் சென்றமாத கூட்டத்தில் தோழர் குருதாஸ் குப்தாவிற்கு அஞ்சலி செலுத்திய செய்தி விடுபட்டிருந்ததை தோழர் V. சுப்ரமணியன் சுட்டிக் காட்டினார். தலைவர் அதை ஏற்றுக்கொண்டு அதை அந்த கூட்ட அறிக்கையில் சேர்த்தபின் சென்ற மாத கூட்ட அறிக்கை அவையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

தோழர் S. நரசிம்மன் இந்தமாதம் பிறந்தநாள் வரும் உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சென்ற கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக இணந்த கீழ்கண்ட 6 புது உறுப்பினர்களை அவையில் அறிமுகம் செய்து வைத்தார்

1. Smt. D. Angeline, CAO STP CNI 2. Smt. R. Jayanthy, OS STP CNI 3. Sri A. Charles, OS TN CNI 4. Sri K. Senguttuvan, SDE CHTD CIVIL 5. Sri M. Elumalai, TT, STP CNI 6. Smt. S. Jeyalakshmi, SSS, CHTD CNI

மேலும் ஜனவரி 31ல் VRSல் செல்லவிருக்கும்  CGM TN CIRCLE OFFICEல் உள்ள கீழ்கண்ட 6 தோழர்கள் இப்போதே LIFE SUBSCRIPTION கொடுத்து உள்ளதாக தெரிவித்தார்

1. Smt. C. Kalyani JTO, TN CNI 2. Sri A. Ramakrishnan, AGM TN CNI 3. Smt. Merline Johndoss, SDE TN CNI 4. Smt. G. Lakshmibai, SDE, TN CNI 5. Sri Sriraman, AGM TN CNI 6. Smt S. Devikumari, AGM TN CNI.  

மேலும் CGM TN CIRCLE OFFICEல் VRSல் செல்ல இருக்கும்  சில தோழர்கள் அவர்களது MEMBERSHIP FORMகளை நமது தோழர்கள் N.S. தீனதயாளன் மற்றும் தோழர் ராம்குமார் அவர்களிடம் அளித்து உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். இத்துடன் நமது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1084 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். 

சென்ற கூட்டத்திற்கும், இந்த கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நமது உறுப்பினர்களின் குடும்ப நல நிகழ்ச்சிகளை தெரிவித்தார். மறைந்த தோழர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வு ஊதியம் பெற்றுதர அவர்களுக்கு உதவி செய்துவருவதாக கூறினார்
பின்னர் ஜனவரி 1ம்தேதிமுதல் நமக்கு 4.5% IDA (+ or – 0.5%) உயர்வு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார். நிறைய தோழர்கள் CGHSல் இணந்து வருவதாகவும், மற்றவர்களும் கண்டிப்பாக இணைய வேண்டும் என்றும், அப்படி இணைய விரும்புவர்களுக்கு வேண்டிய தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் கூறினார்

தோழர் A. சுகுமாரன் தனது உரையில் “பென்ஷனர் தின” முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் சரித்திரத்தைப் பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். சுப்ரீம் கோர்ட்டில் தோழர் D.S.  நகரா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் தற்போதை IDA பென்ஷன் ரிவிஷன் நிலமை பற்றியும் விளக்கி கூறினார்

தோழர் K. முத்தியாலு தனது உரையில் பென்ஷனர் தினம் ஏன் டிசம்பர் 17ல் கொண்டாடப்படுகிறது, அதன் முக்கியத்வம் என்ன என்பது பற்றி விளக்கி கூறினார். தோழர் D.S. நகரா சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கின் காரணமாகத்தான் மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பென்ஷ்ன் ரிவிஷன் கிடைத்து வருகிறது என்று கூறினார். பின்னர் தற்போதைய IDA பென்ஷன் ரிவிஷன் நிலைமை என்ன என்பதையும் விளக்கினார். BSNL ஊழியர்களின் ஊதிய மாற்றம் இல்லாமல் பென்ஷன் ரிவிஷன் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் ப்ரசாத் கூறிவிட்டார் என்பதால் நமக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்

70 வயது நிரம்பிய நமது 17 உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்
தோழர் S. சீதரன் பேசுகையில் 22ந்தேதி AIFPA சார்பில் மயிலை சண்முகானந்த ஹாலில் பென்ஷனர்தினம் கொண்டாடப்படுவதாகவும், அதில் தோழர் D. கோபாலகிருஷ்ணன் கலந்து கொள்ள இருப்பதாகவும், நமது உறுப்பினர்கள் அனைவரும் தவறாது வருகை தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

தோழர் R. கோவிந்தராஜன் நகரா உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசு ஊழியர்கள் பென்ஷன் ரிவிஷன், IDA பென்ஷன் ரிவிஷன் ஆகிய விஷயங்கள் பற்றி விளக்கி கூறினார்

நமது அடுத்த மாதாந்திரக்கூட்டம் ஜனவரி மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை 21ந்தேதி அன்று நடைபெறும் என உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது

இந்த மாத கூட்டத்திற்கு 146 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

தோழர் S.  சீதரன் நன்றிகூற கூட்டம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment