IDA INCREASE FROM 1-1-2025
Monday, 23 October 2023
Friday, 20 October 2023
Wednesday, 18 October 2023
Monday, 16 October 2023
LIFE CERTIFICATE SUBMISSION FOR NON SAMPANN PENSIONERS. ;-
Comrades, Good Morning, No. of Non migrated Pensioners who receive pension from CPPC of Banks as on 30th Sep 2023 are 3100. Out of which, 2300 are clear cases. 800 are disputed cases like outstanding loan, other problems etc.
1 During the month of Oct 2023, 2300 pensioners will be migrated to SAMPANN. For them LC validity will be extended by 9 months as default. Their LC WILL be valid upto 31.07.2024. They need not worry about submission of LC during Nov 2023. Bank will not accept LC even if they want to submit to Bank.
2. Left out 800 Pensioners will be migrated to SAMPANN during NOV.2023.The decision regarding recovery of outstanding loan etc has been discussed with BANK authorities by Dept.of Telecom. During Migration, their LC validity will be extended upto AUGUST 2024 by default. If they are interested to submit LC to respective bank, they can submit.Thereby, validity will be extended upto Nov 2024 by default.Bank authorities will transfer the updated LC to CCA. In the above two cases, Pension will be continued to draw from NOV 2023 onwards even if LC is not submitted by the above non migrated pensioners. This information is posted after discussion with JOINT CCA PVA.
3.CCA Office is arranging LC Camp Mela at Coimbatore, Trichy, Chennai and Madurai etc., date will be intimated later.
Thank you.
S.Sundarakrishnan CS AIBSNLPWA TN CIRCLE CHENNAI
SAMPANN மாற்றம்...
சென்னை Joint CCA
அவர்களிடம் SAMPANN மாற்றத்தில் விடுபட்டவர்கள் குறித்து விவாதிக்கபட்டது.
வங்கியில் இருந்து ஓய்வூதியம் பெறும் 3100 ஓய்வூதியர்கள்
இதுநாள்வரை SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை.
இம்மாதம்...
அக்டோபரில் 2300 பேர்
மாற்றம் செய்யப்படவுள்ளனர்.
அவர்களுக்கான...
வாழ்வு சான்றிதழ்
31/07/2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வங்கிக்கு சென்று வாழ்வு சான்றிதழ் கொடுத்தால் வங்கி ஏற்றுக்கொள்ளாது.
மிச்சமுள்ள 800 ஓய்வூதியர்கள் வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்னும் SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை.
அவர்கள்...
நவம்பர் மாதம் SAMPANN இணையத்திற்கு
மாற்றப்படுவார்கள்.
அவர்களுக்கு வாழ்வு சான்றிதழ் 31/08/2024 வரை நீட்டிக்கப்படும்.
அவர்கள் நவம்பர் மாதம் வங்கியில் சென்று வழக்கம் போல் கொடுத்தாலும் அவர்களுடைய வாழ்வு சான்றிதழ் SAMPANN இணையத்தில் பதிவேற்றம் செய்து நவம்பர் 2024 வரை நீட்டிக்கப்படும்.
இதுவரை...
மாற்றம் ஆகாத ஓய்வூதியர்களுக்கு அவர்கள் வாழ்வு சான்றிதழ் வழங்காவிட்டாலும் கூட
நவம்பர் 2023 முதல் ஓய்வூதியம் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படும்.
மதுரை...கோவை...
திருச்சி... சென்னை
ஆகிய இடங்களில்
வாழ்வு சான்றிதழ் முகாம்கள் நடத்த சென்னை CCA அலுவலகம் உரிய ஏற்பாடுகள் செய்து வருகின்றது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தோழமையுடன்...
S.சுந்தர கிருஷ்ணன்
மாநிலச் செயலர்.
Thursday, 12 October 2023
தோழர்க ளே வணக்கம். 10-10-2023- செவ்வாய்க்கிழமை மாலை 0315 மணிக்கு பூக்கடை தொலைபேசி நிலையம் 5 வது மாடியில் தோழர் N.K. தலைமையில் நமது STR Division கூட்டம் நடைபெற்றது.
வேளாண் விஞ்ஞானி M.S. Swaminathan அவர்களின் மறைவிற்கும் மற்றும் மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது மாவட்ட செயலாளர் தனது வரவேற்ப்புரையில்அக்டோபர் முதல் பஞ்சப்படி உயர்வு 10% அதாவது 215.6% மற்றும் அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில் CCA அலுவலகத்தில் உயிர் வாழ் சான்றிதழ் பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் மாதம் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டினார். மேலும் 20-09-2023அன்று PB CAT Delhi நீதி மன்றத்தில் செப்டம்பர் 2020ல் நாம் தொடுத்த வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.மேலும் நமது அ.இ. தலைமை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நீதி மன்றத்தில் மேல் முறையீடு தவிர்த்து தேவைப் பட்டால் அனைத்து ஓய்வூதிய சங்கங்களையும் இணைத்து நமது கோரிக்கையில் காலதாமதம் தவிர்த்து ஓய்வூதிய மாற்றம் விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார். அடுத்து நமது உறுப்பினர் மற்றும் முன்னாள் AIBSNLEA அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் சிவகுமார் நமது கௌரவ தலைவர் தோழர் சுகுமாரன் தோழர்கள் சுப்பாராவ் சிவசங்கரன் மூத்த தோழர் கோவிந்தராஜன் மற்றும் விக்டர் ராஜ் ஆகியோர் நீதி மன்ற தீர்ப்பு குறித்து தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர். அ.இ.து.தலைவர் முத்தியாலு மற்றும் நமது மாநில செயலாளர் சுந்தரகிருஷ்ணன் ஆகியோர் அகமதாபாத்தில் நடைபெற்ற அ.இ. செயற்குழு முடிவுகள் பற்றி விரிவாக பேசினர்.அ. இ.செயற்குழுவின் தீர்மானம் உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று நமது மாநில செயலாளர் தெரிவித்தார். நமது பொருளாளர் தோழர் ராம்குமார் அவர்கள் தான் நவம்பர் முதல் ஆறு மாதங்கள் வெளிநாடு செல்வதாக அறிவித்தார்.உதவி பொருளாளர் தோழர் கஜேந்திரன் அவர்கள் மாவட்ட செயலருடன் இணைந்து பணியாற்றுவார் என்று தலைவர் N.K அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் நம்முடன் இணைந்த தோழர் சுப்ரமண்யம் ராஜூ MD STP அவர்களுடன் சேர்ந்து நமது உறுப்பினர் எண்ணிக்கை 1686 என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 91. தோழர் ராம்குமார் அவர்கள் நன்றி தெரிவித்து நிறைவு செய்தார். தோழமை வாழ்த்துக்களுடன் உங்களின் N.S.Deenadayalan DS STR Chennai 9444979576.