IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 12 October 2023

தோழர்க ளே வணக்கம்.  10-10-2023- செவ்வாய்க்கிழமை  மாலை 0315 மணிக்கு பூக்கடை தொலைபேசி நிலையம் 5 வது  மாடியில் தோழர் N.K. தலைமையில் நமது STR Division கூட்டம் நடைபெற்றது.

வேளாண் விஞ்ஞானி M.S. Swaminathan அவர்களின் மறைவிற்கும் மற்றும் மழை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது மாவட்ட செயலாளர் தனது வரவேற்ப்புரையில்அக்டோபர் முதல் பஞ்சப்படி உயர்வு 10% அதாவது 215.6% மற்றும் அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில் CCA அலுவலகத்தில் உயிர் வாழ் சான்றிதழ் பணி நடைபெற உள்ளதால்  அக்டோபர் மாதம் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டியவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டினார். மேலும் 20-09-2023அன்று   PB CAT Delhi நீதி மன்றத்தில் செப்டம்பர் 2020ல் நாம் தொடுத்த வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.மேலும் நமது அ.இ. தலைமை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நீதி மன்றத்தில் மேல் முறையீடு தவிர்த்து தேவைப் பட்டால் அனைத்து ஓய்வூதிய சங்கங்களையும் இணைத்து நமது கோரிக்கையில் காலதாமதம் தவிர்த்து ஓய்வூதிய மாற்றம் விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார். அடுத்து நமது உறுப்பினர் மற்றும் முன்னாள் AIBSNLEA அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் சிவகுமார் நமது கௌரவ தலைவர் தோழர் சுகுமாரன் தோழர்கள் சுப்பாராவ் சிவசங்கரன் மூத்த தோழர் கோவிந்தராஜன் மற்றும் விக்டர் ராஜ் ஆகியோர் நீதி மன்ற தீர்ப்பு குறித்து தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.            அ.இ.து.தலைவர் முத்தியாலு மற்றும் நமது மாநில செயலாளர் சுந்தரகிருஷ்ணன் ஆகியோர் அகமதாபாத்தில் நடைபெற்ற  அ.இ. செயற்குழு முடிவுகள் பற்றி விரிவாக பேசினர்.அ. இ.செயற்குழுவின் தீர்மானம் உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று நமது மாநில செயலாளர் தெரிவித்தார். நமது பொருளாளர் தோழர் ராம்குமார் அவர்கள் தான் நவம்பர் முதல் ஆறு மாதங்கள் வெளிநாடு செல்வதாக அறிவித்தார்.உதவி பொருளாளர் தோழர் கஜேந்திரன் அவர்கள் மாவட்ட செயலருடன்  இணைந்து பணியாற்றுவார் என்று தலைவர் N.K அறிவித்தார். இன்றைய கூட்டத்தில் நம்முடன் இணைந்த தோழர் சுப்ரமண்யம் ராஜூ MD STP அவர்களுடன் சேர்ந்து நமது உறுப்பினர் எண்ணிக்கை 1686 என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 91. தோழர் ராம்குமார் அவர்கள் நன்றி தெரிவித்து நிறைவு செய்தார். தோழமை வாழ்த்துக்களுடன் உங்களின் N.S.Deenadayalan DS STR Chennai 9444979576.

No comments:

Post a Comment