IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 3 November 2023

 தோழர்களே, 

வங்கி / அஞ்சல் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த

 நமது ஓய்வூதியர்களின் ஓய்வூதியப் பணிகள் 99.90 சதவீதம் சம்பான் சிஸ்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இன்னமும்  வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒரு சிலரின் பணிகள் மட்டும் மாற்றப்படவில்லை.


2022 ஜுன் மாதம் முதல் வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்றவர்கள் சம்பானுக்கு மாற்றப்பட்டு வந்தனர். சுமார் 3500 ஓய்வூதியர்கள் தவிர மற்றவர்கள் ஏப்ரல் 2023க்குள் சம்ப்பானுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

அதன் பிறகு அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம் பெற்றவர்களை சம்ப்பானுக்கு மாற்றும் பணி தொடங்கி செப்டம்பர் 2023 நிறைவு பெற்றது.

அக்டோபர் 2023ல்  விடுபட்ட வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் 2360 ஓய்வூதியர்கள் சம்பானுக்கு மாற்றப்பட்டார்கள். இன்னும் ஒரு சிலரே மாற்றப்பட வேண்டும். அந்தப் பணி நவம்பர் மாதம் நடைபெறும் என்று CCA அலுவலகத்தினர்  தெரிவித்து உள்ளார்கள்.


சம்ப்பானுக்கு மாற்றப்பட்டவர்களுக்கு புதிய PPO எண் வழங்கப்பட்டு SMS மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மாற்றப்பட்டவர்களின் வாழ்நாள் சான்றிதழ் எந்த மாதத்தில் காலாவதி ஆகிறது என்ற தகவலும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த மாதம் 20ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை வழங்கிட வேண்டும். மாதாமாதம் வாழ்நாள் சான்றிதழ் காலாவதி ஆகிறவர்களின் பட்டியலை CCA அலுவலகம் வெளியிடுகிறது. இதுகுறித்து CCA அலுவலகத்தில் இருந்து தனிப்பட்ட முறையிலும் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.

 

சம்பானில் மொபைல் எண் இணைக்கப்படாதவர்களுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, குழப்பம் ஏற்படுகிறது.


மேலும் இதுவரை சம்பானில் இணைக்கப்படாதவர்கள் வங்கியில் இம்மாதம் வாழ்நாள் சான்றிதழ் தரவேண்டியது இல்லை என்று CCA நிர்வாகம் தெரிவித்துள்ளது.


SMS  மூலம் புதிய PPO எண் பெறாதவர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக் கிளை  அல்லது அஞ்சல் அலுவலகம் சென்று அவருடைய Passbookக்கில் latest entryயை பதிவு செய்து பார்க்கவும். அக்டோபர் மாத பென்ஷன் NFFT மூலம் பதிவாகி இருந்தால் அவர்கள் சம்ப்பானுக்கு மாற்றப்பட்டு உள்ளார்கள் என்பது உறுதி ஆகும். அவர்கள்  நமது மாவட்ட சங்கங்களை அணுகி  எப்பொழுது வாழ்நாள் சான்றிதழ் தர வேண்டும் என்ற தகவலை CPMS  மூலம் உறுதி செய்து குறிப்பிட்ட காலத்தில் வாழ்நாள் சான்றிதழ் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.


 தோழமையுடன்,

S.சுந்தர கிருஷ்ணன், 

மாநிலச் 

செயலாளர்.

Dear comrades,

Good evening. Migration works  of Pensioners receiving from CPPC of respective banks commenced from June 2022 (except 3500 cases)completed by April 2023. Subsequently Migration works of Pension paid by GM Postal Accounts was taken up and completed during SEP 2023. During Oct 2360  pensioners were migrated. During Nov left out pensioners are being migrated. Cca office told that pension will be drawn by CCA TN for the month Nov 2023 pension including to those who will be migrated this month. So, no necessity of submission of LC in bank or PO.Migration will be over by 20th Nov and messages will be sent. But some of the Post office pensioners have not received status of migration due to non updation of mobile no.  Only way to confirm is  making entry in the Passbook. If the credit is as "Pension", pension is paid by bank/po. If pension is paid by CCA OFFICE as SAMPANN, then credit entry will be as "NEFT PAYMENT". Accordingly one can decide whether their pension is migrated.  

S.Sundarakrishnan,

 Circle Secretary TN


No comments:

Post a Comment