IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 27 January 2025

 STR DN JANUARY 25 MONTHLY MTG MINUTES 

தோழர்களே

தோழியர்களே

வணக்கம் 

 STR DN Chennai, ஜனவரி மாத கூட்டம் புதன்கிழமை 22-01-2025 மாலை 03.10 முதல் 05-30 மணிவரையில் பூக்கடை வளாகம்

 5-  வது தளத்தில் தோழர் 

N. K அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 மாவட்ட செயலாளர் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.


மறைந்த தோழர்களுக்கு ஒரு நிமிடம் மவுனம் கடைபிடிக்கப்பட்டது.


மாவட்ட செயலாளர் அவர்கள் தனது வரவேற்புறையில்

அனைவருக்கும்  புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


சென்ற மாத கூட்ட நிகழ்வுகளை தெரிவித்தார்.

நமது உறுப்பினர்களின் குடும்ப நிகழ்வுகளையும் அறிவித்தார்.

4.3% IDA உயர்வு மற்றும்  31-01-2020ல் விருப்ப ஓய்வில் சென்றவர்கள், Gratuity மற்றும் Commutation பணப்பலன்களை பெற 01-02-2025 க்கு பிறகு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அடுத்து STR DN CHENNAI Exe Whatsapp Group  அமைப்பது ஏற்கப்பட்டது. 

அதுபோலவே தமிழ் மாநில செயற்குழு கூட்டம், மாநிலச்சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, சென்னையில் STR DN நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் மாநில சங்கம் ரூபாய் 50,000/= நிதி உதவிஅளிப்பதாக மாநிலச்செயலாளர் அறிவித்தார்.

இந்த ஆண்டில் நடைபெற இருக்கின்ற மாநில மற்றும் அகில இந்திய மாநாடு செலவுகளை எதிர்கொள்ள நமது உறுப்பினர்களிடம் குறைந்த பட்சம் ரூபாய் 300/=நன்கோடை வேண்டி பெருவது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது..


நமது செயற்குழுவின் ஒப்புதல் பெற்று  WhatsApp மூலமாகவும் U-tube மூலமாகவும் நமது உறுப்பினர்களுக்கு உங்களுக்கு தெரியுமா கானொளி காட்சி மூலம் Life Certificate கொடுக்கும் வழி முறைகள், (குறிப்பாக வெளிநாடு சென்றுள்ள நமது உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..) அதுமட்டுமன்றி CGHS Online Appointment பெருவது போன்ற பல நல்ல தகவல்களுக்காக நமது பாராட்டுக்களை Webmastet தோழர் நரசிம்மனுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் Life Certificate கொடுக்க முடியாமல் சிரமப்படுவதாக நமக்கு தெரிவித்த மூத்ததோழர் 84 வயது பெர்க்ஸ்மேன்  அவரகளது இல்லம் சென்று Face Authantication மூலம் DLC எடுத்துக் கொடுத்த நமது தோழர் ராஜன் அவரகளுக்கு நமது வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


அ. இ. துணைத்தலைவர் தோழர் முத்தியாலு அவர்கள்  மத்திய அரசு அறிவித்துள்ள 8 - வது ஊதியக்குழுவில்  Terms of Referance ல் BSNL ஓய்வூதியர்களையும் சேர்க்க வேண்டும் என்பதையும், 7 -வது ஊதியக்குழுவில் நமது முயற்சி ஏற்க்கப்படவில்லை என்பதனையும் விவரித்தார்.

அடுத்து நமது கௌரவத்தலைவர் சுகுமாரன் அவர்கள் சொசைட்டி குறித்து நமது வேண்டுகோள் Special Officer நியமிக்கப்பட வேண்டும். அதற்கான செயலில் நமது மாநிலச்சங்கம் முயற்சி மேற்க்கொணடு வருவதையும் எடுத்துக் கூறினார்.

நமது மாநில செயலாளர், 4.3% IDA உத்திரவு இதுவரையில் வரவில்லை, அதற்காகவும் மற்றும் CCA TN அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள் எண்ணிக்கை  போதுமானதாக இல்லாததன் காரணமாக குடும்ப ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்தவர்கள் முதல் பல்வேறு குறைபாடுகளும் தீர்த்து வைப்பதில் கால தாமதம் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமையின்  காரணமாகவும் நிலவும்  சூழலை களைய முயற்சி மேற்கொள்ள பொதுச் செயலாலருக்கு தெரிவித்துள்ளது மற்றும் பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு பிறகு Gratuty மற்றும் Commutation பெற BSNL மூலமாகவும், நேரடியாக CCA அலுவலகத்திலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, V.R.S. ல் ஓய்வு பெற்றுள்ள 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கு அறிவுறுத்தினார்.


தோழர் ராம்குமார் முன்னாள் பொருளாளர் Notional Increment குறித்து தனது கருத்தை முன்வைத்தார்.

 தோழர் நரசிம்மன் அவர்கள் Notional Increment குறித்து DOT   Order சில நிமிடங்களுக்கு முன்னர் வெளிவந்துள்ள தகவலை சுட்டிக்காட்டினார். தோழர்  சுந்தரபாபு பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை 80.

மொத்த உறுப்பினர்கள் 1787.

தோழமையுடன் 

உங்களின்,

N. S. தீனதயாளன்.

No comments:

Post a Comment