IDA INCREASE FROM 1-10-2024

IDA INCREASED 6.4% FROM 1-10-2024 - TOTAL 224.2%

Monday, 17 August 2020

ZOOM Cloud Meetings – Apps on Google Play

CHQ FORMATION DAY CELEBRATION 20-8-20

STR DIVISION ZOOM MEETING 

அன்பு தோழர்களே,

நமது அனைத்திந்திய சங்கத்தின் 11 வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் வருகிற 20-8-20 அன்று வருகிறது. நமது மத்திய சங்கம், அந்த நாளை எல்லா கோட்டங்களும் அவர்களுடைய உறுப்பினர்களோடு ZOOM MEETING வாயிலாக ஒரு கூட்டத்தைக் கூட்டி நமது சங்க செய்திகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்  என்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 எனவே நாமும்,  20-8-20 வியாழக்கிழமை மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரைக்கான  ஒரு ZOOM MEETING ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கூட்டத்திற்க்கு நமது உறுப்பினர்கள் அனைவரும் ZOOM MEETING வாயிலாக கலந்து கொள்ளலாம். ஆனால் ஒரு ZOOM MEETINGல் 100 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். நமது கிளையில் உள்ள 1378 உறுப்பினர்களில் 1069 உறுப்பினர்கள் SMART PHONE வைத்துள்ளார்கள். ஆகையால் முதலில் வரும் 100 உறுப்பினர்களுக்கே அங்கே இடம் கிடைக்கும். ZOOM APP இல்லாதவர்கள் GOOGLE PLAYSTORE சென்று அதை தரவிறக்கம் செய்து INSTALL செய்துகொண்டு, உங்களுக்கான user id and password ஏற்படுத்திக்கொண்டு தயார்நிலையில் இருக்கவேண்டும்.  

கூட்டம் முதலில் 40 நிமடங்களுக்கே அனுமதி கிடைக்கும். நாம் அதை பிறகு கூடுதலாய் 2 மணி நேரம் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.  தொடர்பு துண்டிக்கப்பட்டால் நாங்கள் அனுப்பியுள்ள USER ID     PASSWORD கொண்டு மறுபடி இணைந்து கொள்ளலாம். 

MOBILE PHONEல் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் HEADSET போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். முகத்தில் வெளிச்சம் படுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் MOBILEல் பளிச்சென்று உருவம் தெரியும்.

மீட்டிங்க்கிற்கான USER ID  AND  PASSWORD நமது STR DN WHATSAPP GROUP களில் தெரிவிக்கப்படும்.

தோழர் A. சுகுமாரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். தோழர்கள் A. சுகுமாரன், S. சுந்தரகிருஷ்ணன், K. முத்தியாலு, தமிழ் மாநில சங்க மாநில செயலர் R. வெங்கடாசலம்,  S. நரசிம்மன் ஆகியோர்கள் பேசுவார்கள். 

உறுப்பினர்களும் தங்களுடைய சந்தேகங்களுக்கு  விளக்கம் கேட்கலாம். 

இது நமது முதல் முயற்சி. நிறைய உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். அனைவரும் ஒத்துழைப்புத்தரவும் வேண்டுகிறோம் 


S. நரசிம்மன் இந்த ZOOM MEETING கிற்கு TECHNICAL HEAD ஆக இருந்து கவனித்துக் கொள்வார். இவைகளைப்பற்றி ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கங்கள் கேட்டுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment