IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 6 November 2021

 SBI பென்ஷனர்கள் வீடியோ காலில் லைஃப் சர்டிபிகேட் கொடுப்பது எப்படி??

பென்சன் வாங்குபவர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க புதிய முறை ஒன்றை SBI  அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பென்சன் வாங்குபவர்கள் வங்கிக்கு செல்லாமல் வீடியோ கால் மூலமாக சமர்ப்பித்துவிடலாம் என கூறப்பட்டுள்ளது.

பென்ஷனர்கள்  https://www.pensionseva.sbi என்ற இணையத்தளத்தில் உள்நுழையவேண்டும். அதனை தொடர்ந்து அதில் ‘Video LC’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் அதில் SBI பென்ஷன் கணக்கு எண்ணை டைப் செய்ய வேண்டும். அதன்பின் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி நம்பரை டைப் செய்ய வேண்டும். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படித்து விட்டு, ‘Start Journey’ என்பதை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து வாடிக்கையாளர் I am ready என்பதை கிளிக் செய்து வீடியோ அழைப்பை தொடங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உடனடியாக உங்களுக்கு கனக்ஷன் கிடைக்கலாம்  (அல்லது அதில் உங்களுக்கான நேரத்தை நீங்கள் தேர்வு செய்து பதிவு செய்து கொள்ளலாம். உதாரணமாக 11.00 AM TO 11.15 AM  என்று பதிவு செய்து கொள்ளவேண்டும். உடனே உங்களுக்கு ஒரு செய்தி வரும். அதில் உங்கள் அப்பாயின்ட்மென்ட் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வரும்.) அந்த நேரத்தில் நாம் மறுபடியும் பென்ஷன் சேவா வெப்சைட்டிற்கு சென்று VLC க்கு சென்று லாகின் செய்தால் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.  கனக்ஷன் கிடைத்தவுடன் உங்களுடைய கேமரா, ஸ்பீக்கர், மைக் உபயோகப்படுத்த அனுமதி கேட்கப்படும். நாம் அனுமதி கொடுக்கவேண்டும். அதன்பிறகு  SBI CPPC  விருகம்பாக்கத்திலிருந்து  ஒரு அதிகாரி  தமிழில் உங்களிடம் ஆடியோ காலில் பேசுவார். திரையில் உங்கள் உருவம் தெரியும். அவர் உருவம் மறைக்கப்பட்டிருக்கும். SBI அதிகாரி திரையில் தெரியும் நான்கு நம்பர்கள் என்ன என்று கூறுமாறு கேட்பார்கள். அதை நாம் சரியாக அவரிடம் சொல்ல வேண்டும்.  பிறகு நமது பான் கார்டை அவருக்கு காட்ட சொல்வார்கள். அதன்படி செய்யவேண்டும்,. எல்லாம் சரியாக நடந்து முடிந்தால் அவர் நமது டிஜிடல் ஸ்ர்டிபிகேட ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்று சொல்வார். அவ்வளவுதான் வேலை. இன்று இம்முறையில்தான் நான் என்னுடைய டிஜிடல் லைஃப் சர்டிபிகேட்டை இன்று மாலை கொடுத்தேன். ரொம்ப ரொம்ப சுலபம். கிடைக்கவில்லை என்றால் தளர்ந்து விடாதீர்கள். முயற்சித்துப் பாருங்கள். நமது உறுப்பினர் தோழர் R.  கணேசன்  SDE, QA, CNI க்கும் இந்த வசதியைப் பயன்படுத்துமாறு சொன்னோம். அவரும் இப்போது இதன்மூலம் வெற்றிகரமாக இதை ஐந்து நிமிடத்தில் செய்து முடித்து உள்ளார். வெளிநாட்டில் உள்ளவர்களும் இந்த முறையை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு கண்டிஷன். அவருடைய REGISTERED MOBILE க்கு வரும் SMS ஐ இங்கு உள்ள அவர்களது உறவினர்களிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. தொடர்பு எண்:  9444415150*.










No comments:

Post a Comment