IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 17 March 2023

 STR DN WOMENSDAY MTG MINUTES

தோழர்களே தோழியர்களே வணக்கம். 14-03-2023 செவ்வாய் கிழமை மதியம் 

02 50 மணியளவில் மகளிர் தின சிறப்பு கூட்டத்தை தலைவர்  தோழர் N.K.அவர்கள் துவக்கி வைத்தார். சமீபத்தில் மறைந்த நமது உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களின் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர்  தோழர் N.S.தீனதயாளன் அவர்கள்  வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும்  சென்ற மாதத்திற்கும் இந்த மாத மகளிர் தின சிறப்பு கூட்டத்திற்கும் இடைப்பட்ட  காலத்தில் நமது உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 உயர்ந்து மொத்தம்1645 என்று தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற அதலத் மற்றும் செயற்குழு பற்றிய செய்திகளை தெரிவித்தார் . அதன் பிறகு  தோழியர் H.S.சுதா மற்றும் T.கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை ஏற்கவும் பெண்களின் சிறப்பு பற்றி பேச வருகை  புரிந்துள்ள தோழியர்கள் ரத்னா லதா அனுராதா குணசுந்தரி ரங்கனாதன் மற்றும் மலர்விழி ஆகியோரை  தலைவர் N.K.அவர்கள் வரவேற்று  மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியினை நடத்திக் கொடுக்க வேண்டினார்.அது போலவே நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து கொடுக்குமாறு நமது கௌரவ தலைவர் தோழர் சுகுமாரன் அவர்களையும் கேட்டுக் கொண்டார்.

நமது மதிப்பிற்கும் மரியாதைக்குமுறிய மறைந்த தலைவர் தோழர் ஜகன் அவர்களின் துணைவியார் திருமதி பரிமளா ஜகன் அவர்கள் முன்னாள் மகளிரணி தலைவர் நமது அழைப்பினை ஏற்று கலந்து கொண்டது மிகவும் சிறப்பாக அமைந்தது.              தோழியர்கள் ஐவருமே மிக சிறப்பாக   தங்களின் கருத்துகளை எடுத்துரைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.   தலைமை ஏற்று நடத்திக் கொடுத்த  தோழியர் சுதா மற்றும் கிருஷ்ணவேணி மேலும்   சிறந்த பேச்சாளர்களுக்கும் திருமதி பரிமளா ஜகன் அவர்களுக்கும் தோழர்கள் சுந்தர கிருஷ்ணன் மற்றும் முத்தியாலூ சிறப்பு செய்தனர்.நமது உறுப்பினர் கஜேந்திரன் கவிதையும் அவரது மகள் ஹேமலதா பாடிய பாடலும் அனைவரின் பாராட்டையும் பெற்றது.நிறைவாக மாநில செயலாளர் தோழர் S. சுந்தர கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். இந்த மகளிர் தின சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது நன்றி மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் நமது Webmaster  நரசிம்மன் அவர்கள் அவையில் இருந்த அனைவரையும் நிழல் படமெடுத்து வெளியிட்டுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.நமது தோழர் C. B.சம்பத் குமார் அவர்கள் இனிப்பு போண்டா மற்றும் காஃபி வழக்கம்போல் ஏற்ப்பாடு செய்தமைக்கு அவருக்கும் நமது பாராட்டுக்களை தெரிவித்துக்  கொள்கிறோம்.  

N.S.தீனதயாளன் 

மாவட்ட செயலாளர் STR Division Chennai.

No comments:

Post a Comment