IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 31 May 2023

 CCA TN அலுவலகத்தால் வருமானவரி பிடித்தம்:

CCA TN அலுவலகத்தால் இந்தமாதம் பெரும்பாலன பென்ஷனர்களுக்கு வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் தவறுகள் நடந்து உள்ளன. கீழ்கண்ட தவறுகளை JT.CCA விடம் சுற்றிக் காட்டினோம்.  

1. வருமானவரி பிடித்தம் பற்றி பென்ஷனர்கள் விருப்பம் தெரிவிக்க கடைசீ நாள் 31-5-23 என்று தெரிவித்துவிட்டு மே மாதமே வருமானவரி பிடித்தம் செய்தது.

2. OPTION  கொடுக்காதவர்கள் புதிய நிலையில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துவிட்டு, வருமானவரி வரம்புக்கள் வராதவர்களுக்கும் வருமானவரி பிடித்தம் செய்திருப்பது.

3. வருமானவரியின் பழைய திட்டத்தில் இணைந்தவர்களுக்கு எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அளவுக்கு அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்திருப்பது. 

ஆகையால் பிடித்த வருமானவரிகளை பென்ஷனர்களுக்கு திருப்பித் தரவேண்டும் என்று JT.CCA விடம் கோரிக்கை வைத்தோம். 

அதன் அடிப்படையில்  JT.CCA அவர்கள் கீழ்கண்ட முறையில் அதனை தீர்த்து வைப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். 

1. வருமானவரி வரம்புக்குள் (அதாவது புதிய திட்டத்தில் விருப்பம் கொடுத்த பென்ஷனர்களுக்கு)  7.5 லட்சத்திற்கு உட்பட்ட பென்ஷனர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட வருமானவரியை இந்த மாத இறுதிக்குள் திருப்பி கொடுத்து விடுவதாகவும்,

2. பழைய திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட அதிகப்படியான வருமானவரியை வரும் மாதம் பிடித்தங்களில் கணக்கிட்டு அட்ஜஸ்ட் செய்வதாகவும் உறுதி கூறி உள்ளார்கள். 


*ஆகையால் நமது பென்ஷனர் தோழர்கள் யாரும் CCA அலுவலத்திற்கு இது சம்பந்தமாக செல்லவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.*Circle Secretary AIBSNLPWA TN CIRCLE

No comments:

Post a Comment