AIBSNLPWA..
பாராட்டுக்கள்
BSNL ஓய்வூதியர்களில் ஒரு அட்வான்ஸ் இன்கிரீமெண்ட் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர மற்ற பெரும்பாலானவர்கள் 78.2 இணைப்பு பலனை பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்று பலனடைந்து வருகிறோம்.
இந்த நிலையில் ஒரு இன்கிரீமெண்ட் வழக்கு காரணமாக சுமார் 400/500 ஓய்வூதியர்கள் 78.2. பலனைப் பெற முடியவில்லை. அவர்களில் பலர் இறந்தும் விட்டனர்.
ஒரு அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் வழக்கு எப்போது முடியும், எப்படி முடியும் என்பது குறித்து எதுவும் தெளிவாகச் சொல்ல முடியாது.
எனவே இந்த வழக்கு காரணமாக ஒரு பெரும் நிதி நிலுவையை, உயர் ஓய்வூதியத்தை பெற முடியாது அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றவர்களின் இடத்தில் நம்மை வைத்து பார்த்தோமானால், கூடுதல் இன்கிரீமெண்ட் வழக்கு தீர்ப்பு வருகிறபடி வரட்டும். அதற்காக நாங்கள் எங்கள் வாழ்நாளில் ஏன் 78.2 பணப்பலனை இழந்து கஷ்டப்பட வேண்டும் என்கிற ஆதங்கம் மிக நியாயமான ஒன்றே.
என்னிடம் இது பற்றி பலர் பேசி இருக்கிறார்கள்.
இப்போது அவர்களின் நியாயமான துயரம் நீக்க ஒரு இடைக்கால தீர்வு
AIBSNLPWA தமிழ் மாநிலச் சங்கத்தால் காட்டப்பட்டிருக்கிறது.
காணப்பட்ட தீர்வு பற்றி நாம் என்ன பேசினாலும், 78.2 இணைப்பு பணப்பலன் பெறாதவர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது நூறு சத உண்மை.
எனவேதான் இதற்கு முயற்சி எடுத்து தொடர்ந்து செயல்பட்டு தீர்வு கண்ட AIBSNLPWA தமிழ்மாநில சங்கத்திற்கும், குறிப்பாக பொதுச்செயலர்
தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்களுக்கும்,
மேலும் இதற்கான முயற்சியை வேறு யாரேனும் எடுத்திருந்தால் அவர்களுக்கும்
எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
78.2 இணைப்பின் பலனை நிலுவையுடன் பெற இருக்கும் அத்தனை ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
யார் மூலமாக , யார் முயற்சியின் காரணமாக இந்த 78.2 இணைப்பு பலன் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால தீர்வு பெறப்பட்டி ருந்தாலும் இது நமது AIBSNLPWA
மாநில சங்கத்திற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியே!
மீண்டும் தீர்வைப் பெற்றுத்தந்த, தீர்வு மூலம் பலனடைய இருக்கிற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
ஆர்.கே.
DEAR FRIENDS...
As NK, I think and it is prudent to leave the issue of Interim Settlement of One Increment to the The Circle Secretary Sundarakrishnan and follow his advice/suggestion AS HE HAS ONLY brought about the Settlement. Unnecessary Intervention/Advice, by whomsoever, it may be, may please be not taken into account. The Circle Secretary, I Hope, will take all steps to see that The Benefit reach the Affected. May I request all those from Top to Bottom to allow the Circle Secretary Sundarakrishnan to proceed without creating obstacles on his way. There is also A Feeling amongst A Section, including me that some Veterans feel The Credit of Each & Every Settlement are due to them Only. Maturity is all that I wish to prevail amongst ALL as We are All Seniors ...Friendly... NK