IDA INCREASE FROM 1-10-2024

IDA INCREASED 6.4% FROM 1-10-2024 - TOTAL 224.2%

Thursday, 1 August 2024

CIRCLE SECRETARY'S MESSAGE 


APPEAL :

அன்புக்குரிய தோழர்களே, வணக்கம். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் கனமழை காரணமாக அடுத்தடுத்து ஏற்பட்ட  நிலச்சரிவில் முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை தேடும் பணியின்  300 க்கும் மேற்பட்டோர் இதுவரை  பலியாகி உள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 

ஒரே நாளில் 57 செமீ க்கும் மேலான மழை கொட்டித்தீர்த்ததால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியிலும்   நிவாரண பொருட்கள் சேகரித்து வழங்கும் நடவடிக்கையிலும் நமது கேரள தோழர்களும்  முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். 

பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது நமக்கும் கடமையாகும். நமது அகில இந்திய செயலாளர் நன்கொடை கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மல்லபுரம், கோழிகோடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள துயர் மனதால் தாங்க இயலாது. Paramilitary forces  இடைவெளி இல்லாமல், இரவு, பகல் இல்லாமல், மண்ணில் புதைந்து,காணாமல் போனவர்கள் உடல்களை தேடிக்கொண்டிருகின்றனர். இது ஒரு பேரிடர் நிகழ்வு. கேரள மக்களின் துயர் தீர்ப்பதில் நமது சங்க உறுப்பினர்கள் தாராளமாக,நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறே ன். மாவட்ட செயலர்கள் கொடுக்கின்ற வங்கி கணக்கு விவரத்தி ற்கு நன்கொடை தொகையை அனுப்பி வைக்கவும்.             நன்றி            தோழமையுடன், S. சுந்தரகிருஷ்ணன் மா. செ                      முதல் தவணை ஆகஸ்ட் 6 தேதிக்குள், பின்னர் ஆகஸ்ட் 15 வருவதை 16 தேதி அன்றும் மாவட்ட செயலாளர் நேரடியாக CM கேரளா FUND க்கு அனுப்பவேண்டும்.

மாவட்ட செயலாளர் கள் 

கீழ்க்கண்ட வங்கி  கேரள மாநில முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி வங்கி கணக்கில் செலுத்தி  மாநிலசங்கத்திற்கு தகவல் தர வேண்டுகிறோம். 


Account Number: 67319948232

Bank: State Bank of India

Name: Chief Minister's Distress Relief Fund Branch: City Branch, Thiruvananthapuram IFSC: SBIN0070028 

SWIFT CODE: SBININBBT08 

Account Type: Savings 

PAN: AAAGD0584M

No comments:

Post a Comment