14-10-25 STR DN MTG MINUTES
தோழர்களே
தோழியர்களே
வணக்கம்.
நமது மாதாந்திரக் கூட்டம் 14-10-2025
2 - வது செவ்வாய்க் கிழமை பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் 5-வது தளத்தில் மாலை 3.25 மணி முதல் 5.30 மணி வரையில்
தோழர் N. K.அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
அஞ்சலி, குடும்ப நிகழ்வுகள் சென்ற மாத கூட்ட நிகழ்வுகள் மற்றும் வரவேற்புரையை மாவட்ட செயலாளர்
தோழர் தீனதயாளன் அவர்கள் நிகழ்த்தினார்.
இந்த மாதம்
வேலூரில் 4, 5
தேதிகளில் நடைபெற்ற மாநில மாநாட்டின் சிறப்பினை மாவட்ட செயலாளர், மாநில துணைச் செயலாளர் தோழர் D. விக்டர்ராஜ் முன்னாள் பொருளாளர் தோழர் S. காளிதாஸ் மற்றும் அ. இ. துணத் தலைவர் தோழர்
K. முத்தியாலு ஆகியோர் எடுத்துரைத்தனர்.
வரவேற்புக்குழு தலைவர் தோழர் C.ஆறுமுகம்
போதுச் செயலாளர் தோழர் K.அல்லிராஜா,
பொருளாளர் தோழர் V. S. முத்துக்குமரன் மற்றும் வரவேற்புகுழு உறுப்பினர்கள் அனைவருக்கும் STR Division தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.
வேலூர் மாநாட்டில் ஒருமனதாக தோழர்கள்
R. வெங்டாசலம் அவர்கள் தலைவராகவும்
S. சுந்தர கிருஷ்ணன் அவர்கள் மீண்டும்
மாநிலச் செயலராகவும்
பெருமாள்ராஜ் நெல்லை பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது மாநில மாநாட்டின் சிறப்பு.
மாநில மாநாட்டில் நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள்
1) D. விக்டர்ராஜ்
2) H. S. சுதா
3) C. துரையரசன்
4) P. N. கிரி மற்றும்
5) K. ஆறுமுகம் ஆகியோர் மாநில சங்க பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு பதினெட்டுபேர் அடங்கிய அ. இ.மாநாட்டு சார்பாளர் பெயர் பட்டியல் பொதுக்குழுவின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட தலைவரும் நமது உறுப்பினருமான
தோழர் S.கனியப்பன் அவர்கள் வந்திருந்தார்.
அவர் நமது கிளையை வாழ்த்தி பேசினார்.
நமது உறுப்பினர் தோழர் சேகர் அவர்கள் இன்றைய கூட்டத்தின் SKC
செலவினை மகிழ்சியுடன், தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு, ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.( 24-10-2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெறும் திருமணம், அதனை தொடர்ந்து 25-10-2025 மாலை மகாவீர் ஜெயின் பவனில் நடைபெற உள்ள) திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்கள் அனுபிரபா, வித்யாசாகர் ஆகியோர்களை வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அ. இ. மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தீர்மானங்கள்
1) AIBSNLPWA பெயர் தொடர வேண்டும்
2) மாநில மாநாடு மற்றும் அ. இ. மாநாடு மூன்றாண்டுகளுக்கொரு முறையும்
மாவட்ட மாநாடுகள் இரண்டாண்டுகளுக்கொரு முறையும், நடைபெற வேண்டும்
அதுபோலவே மாநில மாநாட்டிற்கு 50 உறுப்பினர்களுக்கு ஒரு சார்பாளர், அ. இ. மாநாட்டிற்கு 100 உறுப்பினர்களுக்கு ஒரு சார்பாளர் என்ற நிலை தொடர வேண்டும்.
3) ஒரு உறுப்பினர் இரண்டு மாவட்டங்களில் அல்லது இரண்டு மாநிலங்களில் தொடர்வதை அ. இ. சங்கம் முறை படுத்தி வழிகட்ட வேண்டும்.
4) LPD பிரச்சனையை தீர்த்து வைக்க மாநில சங்கத்துடன் இணைந்து அ. இ. சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
5) சொசைடி நிலுவையினை உடனடியாக பெற்றுத்தர அ. இ. சங்கம், மாநில சங்கம் மற்றும் சமீபத்தில் வேலூர் மாநில மாநாட்டில் தேர்வுசெய்யப்பட்ட ஐவர்குழு, சிறப்பதிகாரியை நியமிக்க கூட்டுறவத்துறை ரெஜிஸ்ட்ரார் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
6) 31-01-2020 ல் விருப்ப ஓய்வில் சென்றவர்களின் வரி பிடித்தத்தை நிர்வாகத்துடன் பேசி சரிசெய்ய அ. இ. சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும், மற்றும் எர்ணாகுளம், கேரளாவில் நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெறவுள்ள
அ. இ. மாநாட்டில் பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்பதற்கு, நமது அதிருப்தியை ( Displeasurer ) STR Division தெரிவித்துக்கொள்கிறது.
இந்த தீர்மானங்கள்
அ. இ. சங்கத்திற்கு நமது STR Division சார்காக அனுப்பி வைக்கப்படும்.
மாவட்ட பொருளாளர் தோழர் C. B. சுந்தரபாபு அவர்கள்
நன்றிகூறி கூட்டத்தினை நிறைவுசெய்தார்
தோழமையுடன் உங்களின்,
N. S. தீனதயாளன்
மாவட் செயலாளர்
STR Division, Chennai.
No comments:
Post a Comment