IDA INCREASE FROM 1-4-2026

IDA FROM 1-4-2026 - 238.3%

Thursday, 11 June 2026

தோழர்களே தோழர்களே வணக்கம் 

நமது STR Division  ஜூன் மாதக் கூட்டம் 9 6 2026 செவ்வாய்க்கிழமை அன்று  STR CGM Guindy அலுவலகம் அருகில் உள்ள IEMA, RV Towers,  கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் கேவிகே  ஏசி  ஹாலில் தோழர் என் கே அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அஞ்சலி உரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து சென்ற மாத கூட்ட நிகழ்வுகளை வாசித்தார் மேலும் குடும்ப நிகழ்வுகளையும் எடுத்துக் கூறினார் இடைப்பட்ட காலத்தில் ஐந்து புதிய உறுப்பினர்கள் நமது எஸ்டிஆர் டிவிஷனில் இணைந்துள்ளனர் NFTE முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் G. யூசுப் பாட்சா  அவர்களும் இந்த ஐவரில் ஒருவர். ஆக இன்று அளவில் நமது எஸ் டி ஆர் 

டிவிஷன் உறுப்பினர் எண்ணிக்கை 1844 என்று தெரிவித்தார்.

 நிதி துறையின் கீழ் உள்ள DPE, 27.02.2026 இல் நிதி நிலையை பொறுத்து அந்தந்த இலாகாக்கள் IDA உத்தரவை வெளியிடலாம் என்ற  நிபந்தனையுடன் வெளியிட்டது.

இதன் காரணமாக நமக்கு ஜனவரி முதல் வரவேண்டிய ஐடிஏ தாமதமாகியது. இந்த உத்தரவை விளக்கிக் கொள்ள வேண்டி 16 4 2026 அன்று இந்தியா முழுவதும்  12 ஓய்வூதியர் சங்கங்கள்,கமிட்டி ஆப் பிஎஸ்என்எல் எம் டி என் எல் பென்சனர் அசோசியேஷன் ஆர்ப்பாட்ட அறைக்கூவலை வெளியிட்டது அதனைத் தொடர்ந்து 27 4 2026 அன்று DPE அந்த ஐந்தாவது நிபந்தனையை விலக்கிக் கொண்டு 16-04-2006 அன்று 01-04-2026 முதல் வழங்க வேண்டிய 1.6 சதவீத ஐடிஏ வையும் சேர்த்து ஆக மொத்தம் 5.1% IDA  உத்தரவை வெளியிட்டது.

 இது நமக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதன் பின்னர்  04_05_2026 அன்று ஓய்வூதியர்கள் அனைவரும், Secretary DOT அவர்களுக்கு 01-01-2026 முதல் வழங்க வேண்டிய ஐடிஏ வை உடனடியாக வழங்க உத்தரவிட ஈமெயில் கொடுக்க சிபிஎம்பிஏ வலியுறுத்தியது அதனைத் தொடர்ந்து 20 5 2026 அன்று நாம் சென்னையில் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அகில இந்திய முழுவதுமே 20 5 2026 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தின்  பலனாக, 21-05-2026 அன்று ஜனவரி முதல் வழங்க வேண்டிய மூன்று புள்ளி ஐந்து சதவீத IDA உத்தரவினை DOT வெளியிட்டது. இது 12 ஓய்வூதியர் சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்..

CGHS clarification received.

During January 14th 2026 launch of Paripoorna Medi claim Ayush Bhima, introduced by 

The New India Assurance Company Limited 

 CGHS is safe and should continue.

 Government officially denied any plan to replace CGHS with insurance or shutdown Insurance Scheme is only optional addition. Not substitute.

மேலும் சி ஜிஎச்எஸ் ல் மியாட் மருத்துவமனை மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஹாஸ்பிடல் எம்பேனனில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட செயலாளர் எடுத்துரைத்தார். அடுத்து மூத்ததோழர் M. கோவிந்தராஜன் அவர்கள் அதிகாரிகளுக்காக போராடி சலுகைகளை பெற்று தந்த தலைவர் தோழர் சேஷகிரிராவ்

அவர்கள் மற்றும்  அதுபோலவே தோழர் ஓ பி குப்தா அவர்கள் போராட்டத்தின் வாயிலாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வுதியத்தை பெற்று தந்தவர் என்றும் அதன் விளைவாகத்தான் நாம் இன்று அனைவரும் ஓய்வூதியம் பெற்று வருகிறோம் என்றும் எடுத்துரைத்தார் மேலும் அன்றைய தலைவர்கள் போராட்டத்தின் முடிவில் போராட்ட கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தை சிறப்பான முறையில் முடிக்கும் திறமையை பெற்றிருந்தனர் என்றும் கூறினார் தோழர் சுகுமாரன் அவர்கள் SNEA வின் மாநில செயலாளர் ஆகவும் அகில இந்திய பொறுப்பாளராகவும் செயல்பட்டவர் என்றும்  தோழர் K. முத்தியாலு அவர்கள் மாநில செயலாளர் ஆகவும் அகில இந்திய பொறுப்பாளராகவும் செயல்பட்டவர் என்றும் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். தான் அதிகாரியாக பணி செய்த  காலத்தில் நமது மாநில செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்களும் அவருடன் பணி செய்ததாகவும் தெரிவித்தார். அடுத்து தோழர்களே சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் IT Exemption சாதகமான தீர்ப்பை பெற்ற நமது உறுப்பினர்  தோழியர் ஹேமலதா  அவர்களிடம், நான் இன்றைய கூட்டத்தில் நமது உறுப்பினர்களுக்கு அவர்களுடைய ஆலோசனையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர்களும் வருவதாக உறுதி கூறினார்கள் ஆனால் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வர இயலவில்லை என்பதை தெரிவித்து நமது உறுப்பினர் தோழர் k.பழனியப்பன்  அவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார் அவருக்கும் சாதகமான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறார்.

அவர் நமது வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஆலோசனையை நமது உறுப்பினர்களுக்கு இந்தக் கூட்டத்தில் வழங்கினார். மேலும் தனி ஒருவராக சென்று நீதிமன்றத்தை நாடினால் ஒழிய நமக்கு இன்கம் டேக்ஸ் எக்ஸெம்ப்ஷன் கிடைக்காது என்ற தகவலையும் தெரிவித்தார் அதே நேரத்தில் தன்னுடைய கைபேசி எண்ணையும் தோழியர் ஹேமலதா அவர்களின் கைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு விருப்பமுள்ளவர்கள் முறையீடு செய்ய விரும்புபவர்கள் தங்களை அணுகலாம் என்றும் அறிவித்தார் தோழர் K.பழனியப்பன்

Rd AGM TN Circle +919486103181.  தோழியர் ஹேமலதா Rd AGM  TN Circle  +919444444884. கொடுத்துள்ளோம் நமது உறுப்பினர்கள் அவர்களை அணுகி தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். அடுத்ததாக தோழர் பாஸ்கரன் அவர்கள் ஜனவரி மாத போராட்டத்திற்கு பிறகு சொசைட்டி பிரச்சனையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்தார். தோழர் கிரி அவர்கள் மாநில செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடத்தப்பட  வேண்டும் என்றும் தெரிவித்தார் தோழர் ரஜினிகாந்த் அவர்களும் சொசைட்டியை நிலுவையினை விரைவில் பெற்றுத் தர மாநில சங்கத்தை வேண்டினார். அடுத்து தோழர் CTTC சீனுவாசன் அவர்கள்  வேலிடேஷன் ஆக்ட் நமக்கு சம்மந்தமில்லை. அதில் நாம் காலத்தையும் நிதியையும் செலவழிக்கத் தேவையில்லை என்று  கூறினார். அவரைத் தொடர்ந்து S.M.கோவிந்தராஜன் அவர்கள் CCA அலுவலகத்தில் Service Books  பாதுகாப்பாக வைக்கப்பட மாநிலச்சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார். தோழர்களே, மாநிலச் செயலாளர் அவர்கள் மற்றும் அவரது துணவியார் K. சுப்பலஷ்மி அவர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும், எஸ் கே சி  வழங்கி அவர்களது மகளின் திருமணத்தை முன்னிட்டு, அவர்களது மகிழ்ச்சியினை நம்முடன் பகிர்ந்து கொண்டனர் என்றும் அவர்களுக்கு  மாவட்ட சங்கத்தின் நன்றியினை மாவட்ட தலைவர் தோழர் N.K அவர்கள் தெரிவித்துக் கொண்டார். அதுபோலவே இடைப்பட்ட காலத்தில் மாநில செயலாளர் பொறுப்பேற்று சிறப்பாக மாநிலத்து போராட்டங்களை நடத்திய நமது மாநில உதவி மாநிலச் செயலாளர் தோழர்  D. விக்டர்ராஜ் அவர்களையும் பாராட்டினார். மேலும் மே மாதத்தில் அகவை 80 ஐ நிறைவுசெய்துள்ள நமது கௌரவத் தலைவர் A. சுகுமாரன் அவர்களுக்கும் நமது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அடுத்து நமது மாநில செயலாளர் S.சுந்தரகிருஷ்ணன்அவர்கள் தனது உரையில் மாநில செயற்குழு நடத்துவதற்கு ஒரு நாள் போதுமானது என்றும் இரண்டு நாட்கள் செயற்குழு நடத்த மாநில சங்கம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் செயற்குழுவுக்கு வந்து செல்பவர்கள் அனைவருமே வயது முதிர்ச்சி அடைந்தவர்கள் அவர்களது நலன் மீது நமக்கு மிகுந்த அக்கறை உள்ளதால் அவர்கள் வெளியில் தங்குவதை தவிர்க்கும் முயற்சியாகவும் மாநில சங்கத்தின் நிதிநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டியதும் மாநில சங்கத்தின் கடமையாகும் என்றும் கூறினார். மேலும் அ. இ. பொதுச் செயலாளர் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள்  ஏப்ரல் மாதம், ஐந்து நாட்கள் டெல்லி சென்று பல்வேறு அதிகாரிகளை சந்திக்க வேண்டியிருந்ததால்  கூட்டுறவு சங்க  பதிவாளரை சந்திக்கு முன் தன்னை தொடர்பு கொண்டுவிளக்கம் பெற்றனர் என்றும் கூறினார்.மாநிலச் சங்கத்திற்கு சொசைட்டி நிலுவைத் தொகையினை பெற்றுத் தர உளபூர்வமாக தனது முயற்சி தொடரும் என்றார். மேலும் Service Books, R. K Mutt Rdக்கு மாற்றப்படுவதை  தவிர்க்கும் வகையில் CCA அவர்களுக்கு மாநிலச் சங்கம் கடிதம் எழுதியள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இன்றுள்ள பிரச்சனைகளை மாநில செயற்குழு மாநில மட்டத்தில் தீர்த்து வைக்க ஒரு நாள் மாநில செயற்குழு போதுமானது என்றும் அகில இந்திய மட்டத்தில் உள்ள பிரச்சனைகளை மாநில செயற்குழுவில் அகில இந்திய சங்கத்திற்கு நாம் தெரிவிக்கலாம் என்றும் கூறி நிறைவு செய்தார். தோழர் சுகுமாரன் அவர்கள் வேலிடேஷன் ஆக்டை எதிர்த்து 36க்கும் மேற்பட்ட ஓய்வூதியர் சங்கங்கள்

 உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்க வேண்டும். தடையாக இருக்கக்கூடாது. ஓய்வூதியர்களை சமமாக மதித்து அவர்களை பராமரிக்க வேண்டியது அரசின் சமுதாய கடமை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் விரைவில் வழங்கும் என்ற நம்பிக்கையில் தான் ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். பென்சன் ரிவிஷனை பொருத்தவரையில் நல்ல தீர்ப்பு விரைவில் வரும் மேலும் உச்ச நீதி மன்றம்  வரையில் சென்று நமக்கு சாதகமான தீர்ப்பை பெற்றாலும் மத்திய அரசு நிதி நிலைமை கொள்கையை பொறுத்து ஏற்காமல் போக வாய்ப்பு உள்ளது. ஆகவே தான் வேலிடேஷன் ஆக்ட்டை எதிர்த்து  நாம் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளோம் நல்ல தீர்ப்பு விரைவில் கிடைக்கும் அதன் பிறகு நமக்கு ஓய்வூதிய மாற்றம் நிச்சயம் கிடைக்கும் ஆகவே அனைவரும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்து அகில இந்திய துணைத் தலைவர் தோழர் 

K. முத்தையாலு அவர்கள் எட்டாவது ஊதிய குழுவிற்கு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் ஊதிய நிர்ணயம் குறித்து விளக்கி பேசினார்.

மாவட்ட பொருளாளர் தோழர் C. B. சுந்தரபாபு அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறி நிறைவு செய்தார்

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்..

DS STR Chennai.

No comments:

Post a Comment