IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 23 October 2016

சென்னை தொலைபேசி சிறப்பு செய்திகள்

சென்னை தொலைபேசியில் 78.2% பென்ஷன் ரிவிஷன் பெற உள்ள மொத்த பென்ஷனர்களின் எண்ணிக்கை: 5110. இதில் PRE 2007 பென்ஷனர்களின்  எண்ணிக்கை: 2198.   POST 2007 பென்ஷனர்களின் எண்ணிக்கை: 2912 ஆகும். முதலில் CHTD நிர்வாகத்தால் ஒரு தெளிவான சிந்தனை, நடவடிக்கைகள் இல்லாமல், ஒரே குழப்பமாக நடந்து வந்த பென்ஷன் ரிவிஷன் வேலைகள் நமது தலைவர்கள் மேலிடத்து அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து கொடுத்துவந்த தலையீட்டினால் தற்போது சீராக, திருப்திகரமாக நடைபெற்று வருகிறது.

நிர்வாகம் பென்ஷன்-II SECTION ஐ 78.2% பென்ஷன் ரிவிஷன் வேலைக்குமட்டும் என ஒதுக்கித்தந்து வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பிரிவு PRE 2007 க்கு எனவும், மற்றொரு பிரிவு POST 2007 க்கு எனவும் பிரித்து பென்ஷன் ரிவிஷன் வேலைகளை செய்து வருகிறது.

நமது சங்க உறுப்பினர்களான 1. தோழர் அமர்நாத் ஷா 2. தோழர்   V. குப்புசாமி 3. தோழர் உதயகுமார் ஆகியோர் இதில் PRE 2007 பிரிவில் கௌரவ பணியாளர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.     1. தோழர் பாலசேகர் 2. தோழியர் சாராபாய் 3. தோழர் சேனாபதி ஆகியோர் POST 2007 பிரிவில் கௌரவ பணியாளர்களாக பணி புரிந்து வருகிறார்கள்.

இதனால் தற்போது  POST 2007 பிரிவில் 2007-2008, 2008-2009 ல் உள்ள சுமார் 500 பென்ஷன் ரிவிஷன் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது.  அதே போல் PRE 2007 பிரிவில் 2000-01 ல் 90 ம், 2001-02 ல் உள்ள சுமார் 108 பென்ஷன் ரிவிஷன் வேலைகள் முடிந்து உள்ளன. நமது சங்க உறுப்பினர்களும் பணி புரிந்து வருவதால் மேற்கொண்டும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த வேலையில் பங்கு கொண்ட நமது சங்க உறுப்பினர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா ZONE லும் 90% வேலைகள் முடிக்கப்பட்டு விட்டன. 100% சதவிகித வேலைகளை முதலில் முடித்த AO CENTRAL அவர்களுக்கு நமது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மெடிக்கல் பில் SECTION லும் நமது சங்க உறுப்பினர்கள் 1.தோழர் முனிவெங்கடசுப்ரமணியன்  2. தோழர் V. அசோக்குமார் 3. தோழர்         K.  வெங்கடரமணி ஆகியோர் கௌரவ பணியாளர்களாக பணி புரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஆகஸ்ட் மாத வரையிலான மெடிக்கல் பில்கள் CLEAR செய்யப்பட்டு பண பட்டுவாடாக்காக தயாராக காத்திருக்கின்றன. இந்த தோழர்களுக்கும் நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.


அண்ணாசாலை கிளை மறு சீரமைக்கப்பட்டு தோழர் M. ராஜா புதிய செயலராக பொறுப்பேற்றுள்ளார். இவரால் இந்த கிளையும் தற்போது சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டு வருகிறது.    

தகவல்: தோழர் M. KANNAPPAN, TREASURER, CHTD
                   தோழர்      VAITHYANATHAN 

No comments:

Post a Comment