FORMATION DAY CELEBRATION AT STR DIVISION
நமது அகில இந்திய சங்கத்தின் அமைப்பு தினம் STR DIVISIONல் இன்று சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
தோழர் D. கோபாலகிருஷ்ணன் பேசுகையில் நமது தமிழ் மாநில சங்கம் கடலூரில்
JULY 2007ல் எப்படி துவக்கப்பட்டது என்றும், அதேபோல் அகில இந்திய சங்கம்
சென்னையில் 20 ஆகஸ்ட் 2009ல் எப்படி துவக்கினோம் என்ற வரலாறையும் விவரித்து
எடுத்துக் கூறினார். அகில இந்திய சங்கத்திற்கு தோழர் முத்தியாலுவையும்,
பொதுச்செயலாளராக் தோழர் ராமன் குட்டியையும் தேர்ந்த்தெடுத்து ஒற்றுமையைக் கட்டி
ஒன்றுபட்டு நின்றோம் என்றார். நமது சங்கம் துவங்கியது முதல் நாம் பெற்ற வெற்றிகளை
பட்டியலிட்டுக் கூறினார். 68.8% பென்ஷன் ரிவிஷன் வாங்கியது, பின் 78.2% பென்ஷன்
ரிவிஷன் பெற்றது, 60:40 என்கிற கண்டிஷனை வாபஸ் பெற வைத்தது, மெடிகல் அலவன்ஸ்
WITHOUT VOUCHER மூலம் பெற்றது, இரவு நேர
இலவச தொலைபேசி அழைப்புகள் பெற்றது என்று குறிப்பிட்டுக் கூறினார். நமது அடுத்த
இலக்கு 1.1.2007 முதல் 78.2 பென்ஷன் ரிவிஷன் அரியர்ஸ் பெறுவது தான், அதற்காக
நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என்று கூறினார்.
நமது அகில இந்திய சங்கத்தின் அமைப்பு தினம் STR DIVISIONல் இன்று சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
இந்த மாத மாதாந்திரக்
கூட்டத்திற்கு தோழர் A. சுகுமாரன் தலைமை வகித்தார். தோழர் N. மோகன் சென்ற மாதக்
கூட்ட அறிக்கையை வாசித்து அவையின் ஒப்புதலைப் பெற்றார்.
தோழர் S. நரசிம்மன் இந்த
மாதம் பிறந்தநாள் வரும் உறுப்பினர்களளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத்
தெரிவித்தார். STR DIVISION குடும்ப நல நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். அதில்
நமது மாநில செயலர் தோழர் முத்தியாலுவின் உடல்நிலைப் பற்றி விரிவாகக்கூறி அவர் உடல்
நலம் தேறி வருவதாகக்கூறினார். அவர் பூரண குணமடைய நமது வேண்டுதல்களை தெரிவித்துக்
கொள்கிறோம் என்று கூறினார். நமது கோட்டத்தில் சேர்ந்துள்ள 8 புதிய உறுப்பினர்களை
அவையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தோழர் D.S. ராமலிங்கம் பேசுகையில் CCA அலுவலக வாயிலில் நடைபெற்ற
தர்ணா போராட்டத்தில் நமது கிளையிலிருந்து 65 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று
கூறினார். Dy. CCA Dr. V. பாலசுப்ரமணியனுடன் நமது ஊறுப்பினர்கள் பிரச்னைகள் சில
பற்றி விவாதித்ததாகக் கூறினார். நமது கிளையின் செயற்குழுக் கூட்டத்தை விரைவில்
கூட்ட இருப்பதாகக் கூறினார்.
தோழர் விக்டர் ராஜு STR DN. WHATSAPP GROUP பற்றி விவாதிக்க வேண்டும்
என்றார். தலைவர் விரைவில் கூட உள்ள செயற்குழுவில் இது பற்றி விவாதித்துக்
கொள்ளலாம் என்றார்.
தோழர் R. கோவிந்தராஜன் பேசுகையில் நமது சங்கம் 8 ஆண்டுகளாக மிக
சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். பென்ஷனர் அமைப்பின் ஒரே குறிக்கோள்
பென்ஷனர்கள் நலன் பற்றி செயல்படுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதுபடி நமது சங்கம்
செயல்பட்டு வருவதாக கூறினார். கோவையில் நடைபெற்ற தகிழ் மாநில மாநாடு மிக சிறப்பாக
நடைபெற்றதாகக் கூறினார்.
நமது தலைவர் A. சுகுமாரன் தோழர் D. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு
சால்வை அணிவித்து கவுரவித்தார்.
EXTRA INCREMENT பிடித்தம் பற்றிய CCA
உத்தரவை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்தோம். நீதிமன்றம் இன்று (8-8-17) CCAவின் உத்தரவிற்கு
இடைக்கால தடை வழங்கி உள்ளது என்கிற மகிழ்ச்சியான செய்தியையும் அவை
உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார். உறுப்பினர்கள் வழங்கும் நன்கொடையில் நீதிமன்ற
செலவிகளை மாநில சங்கமும், மத்திய சங்கமும் செய்து வருவதாகக் கூறினார். பென்ஷன்
பற்றிய 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் நமக்கும் பென்ஷன் ரிவிஷன்
மாற்றிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது சங்கத்தின் நிலை என்று கூறி நமது
சங்கம் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் திரு
அனந்தகுமார் அவர்களை விரைவில் சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார். கடந்த இரண்டு
மூன்று ஆண்டுகளாக STR DIVISION மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அதற்குக் காரணம்
அது சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிற WEBSITEம் ஒரு காரணம் என்று கூறினார்.
தோழர் S. சுந்தரகிருஷ்ணன் தமிழ் மாநில CGM அலுவலக பென்ஷனர்கள் சிலரது பிரச்னைகளை அவர் தீர்த்து
வைத்த விவரங்களை அவையில் தெரிவித்தார். பின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட
தோழர்
D. கோபாலகிருஷ்ணனுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி கூறி கூட்டத்தை இனிதே
முடித்து வைத்தார். இந்தக் கூட்டத்திற்கு 150 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment