IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 1 November 2018

CIRCLE SECRETARY'S MESSAGE THROUGH WHATSAPP

மாநில செயலரின்  வணக்கம். நமது  பொதுச்செயலர்  தோழர் கங்கா தரராவ்  ஆலோசனை யின் படி  நமது மாநிலதிற்கு  சிஇ சி  டிஎன்  என்ற புதிய  வாட்ஸாப்ப்  உருவாக்க பட்டுள்ளது. 26 10 18அன்று  நடை பெற்ற மாநில செயலக முடிவின் படி இதன் பொறுப்பாளராக (அட்மின் ) மாநில உதவி செயலாளர் தோழர் சுந்தர கிருஷ்ணன் இருப்பார். இதில்  மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட  செயலாளர் கள், தமிழ் மாநிலதில்  உள்ள  மத்திய சங்க நிர்வாகிகள் உள்ளடக்கம். இதே போன்று மாவட்ட மட்டத்தில் ளும் மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநில செயலாளர், உங்கள் மாவட்டத்தில் உள்ள மாநில சங்க பொறுப்பளர்கள் உள்ளடக்கிய ஒரு புது வாட்ஸாப்ப் உருவாக்க வேண்டும். மத்திய சங்க மற்றும் மாநில சங்க செய்திகள் தவிர மற்றவை இடம் பெறாது.

மாநில செயலக முடிவுகள்:

1. 22.11.18 அன்று 7வது  ஊதிய குழு பரிந்துரை துறைத்த பென்ஷன் பலன்கள் நமக்கும் வழங்கப் பட வேண்டும் என்பதை வலியுருத்தி சென்னை  எத்திராஜ் சாலை யில்  உள்ள  சி சி ஏ அலுவலக  வளாகத்தில் சென்னை  தொலை பேசி மாநில சங்க தோடு இணைந்து சரியாக காலை  10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம்  நடைபெறும். உண்ணா விரதத்தை அ. இந்திய துணை பொது செயலாளர் தோழர் முத்தியாளு துவங்கி வைப்பார். அகில இந்திய பென்ஷனர் சம்மேளனத்தின் (எ ஐ எப் பி எ ) பொதுச்செயலாளர் தோழர் பால சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி முடித்து வைப்பார். நமது தலைவர்கள் டி ஜி, ஜி. நடராஜன், விட்டோபன், மற்றும் இரண்டு மாநில சங்க நிர்வாகிகள் உரையாற்றுவர். போராட்டம் பற்றிய தட்டிகள் தமிழ் நாடு, சென்னை தொலை பேசி தலைமை பொதுமேலாளர் அலுவலங்கங்கள், சி சி ஏ, ஆர் கே நகர் பி சி சி ஏ  அலுவலகங்கள், பூக்கடை தொலைபேசி நிலைய வளாகங்களில் வைக்க படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இதே போன்று  ஏற்பாடுகளை செய்ய ஆயத்தம் ஆவீர். மாநில சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பயன் படுத்தி கொள்வீர். 

2.17.12.18 "பென்ஷநர் தினத்தை "எல்லா இடங்களிலும் சிறப்பாக   கொண்டாடுங்கள்

3. 2019 மார்ச் 15,16 தேதிகளில் மாநில செயற் குழுவை சிறப்பாக நடத்த குடந்தை மாவட்ட சங்கம்  ஏற்று கொண்டுள்ளது. 

4.ஓய்வூதியர்கள் அனைவரும் இம் மாதம் லைப் செர்டிபிகேட் வங்கியில், அஞ்சலங்களில் தவறாமல் தர  வேண்டும். 

5.அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.  

--------------ஆர். வீ. மாநில செயலாளர். 1 11.18

No comments:

Post a Comment