IDA INCREASE FROM 1-1-2025
Friday, 30 September 2022
MESSAGE FROM Com S. Sundarakrishnan, CS, TN AIBSNLPWA
Dear Comrades, Vanakkam. Some of our comrades reported that they have not received Pension from INDIAN BANK, IOB etc. Some are of the opinion that this is due to BankMigration, Where as the some of the existing SAMPANN pensioners also have not received. Verified with CCA Office. Problem is not due to bank migration. They sent payment to SBI ADYAR. SBI Adyar also transferred to concerned bank.Due to some congestion in Hyderabad server there is a problem. It is intimated by concerned person that efforts are made to credit payment tonight. This is not only to pension paid by CCA, Postal and other department pensioners also facing the same.
--CS AIBSNLPWA TN CIRCLE
Wednesday, 28 September 2022
தோழர்களே வணக்கம். இன்று STR CGM அலுவலகம் சென்று DGM (F) அவர்களை சந்தித்து மூன்று ஆண்டுகளுக்கும் முன்னர் கொடுத்த Option அடிப்படையில் Medical Allowance வழங்க கடிதம் கொடுக்கப்பட்டது.
Allowance போடும் பணி நடைபெற்று கொண்டிருப்பதால் சில நாட்களுக்கு பிறகு பணம் கிடைக்கப்பெறாதவர்கள் இருந்தால் அது சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். ஆகவே தோழர்களே சில நாட்களில் அனைவருக்கும் பணம் கிடைக்கும் கிடைக்காதவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
உங்களின்
N S.தீனதயாளன்
மாவட்ட செயலாளர்
STR,சென்னை.
Tuesday, 27 September 2022
CGHS WELNESS CENTRES AT COIMBATORE AND TAMBARAM NEWS
Today I had a talk with the AD,CGHS, Chennai.
The CGHS wellness centre at Coimbatore has been approved. The AD is visiting Coimbatore this week to finalise the agreement with BSNL authorities and to order further civil works. I had requested the BSNLPWA leaders to ensure smooth inaguraraton of the Wellness centre, which the AD had promised to complete with in two months.
The AD had approved the location for the CGHS wellness centre, Tambaram, near Chrompet. Civil work are being commenced. As the AD has got powers to execute the shifting, the work also will be completed soon.
----GS, AIFPA Chennai.
Thursday, 15 September 2022
BRIEF REPORT ABOUT OUR STR DN MONTHLY MTG on 13/9/22:
The monthly meeting of our Division was held on 13/9/22 at Flower Bazaar Telephone House in which 110 members participated. After Anjali our District Secretary Com N.S. Deenadayalan in his address welcomed all the members and explained about the agenda of the day's meeting. Com S. Narasimhan introduced the new 10 members who have joined in the last one month and informed that the total strength of our members is 1588 now. He also informed the Family welfare News of our members. The agenda Pension Revision.. Migration to DOT Cell for disbursement of pension was approved and taken up. The President asked the members to present their views or doubts, if any. As the members were in the mood to know of the present status on issues, Our Circle Secretary Sundarakrishnan dwelt upon the issue of migration in detail. He told about bank-wise Migration and the medical bill clearance. Some questions raised by members were clarified by Circle Secretary. Then Our Hon. President Sugumaran spoke on the issue of Pension Revision. He gave the details of various stages of our approach to our demand for pension revision. He mentioned as of now, the exact correspondence between DOT & Pension Dept is not clearly known. However there is no escape for the Dot except to address the issue of revision of pension. He mentioned that 0 percent fitment is not beneficial and we have rejected it. Our CHQ has taken steps to approach the concerned authorities jointly with other Pensioners' Associations. Then the President put forth to the GB the proposal to interchange two of the Office-Bearers which was accepted. Accordingly Ramkumar/T.N. Circle(O) and G.Vasudevan have become our Treasurer & ADS respectively. In between light refreshment was served. Thereafter our member & Ex. Circle O/B S.Ramakrishnan spoke on Pension Revision. While appreciating the CHQ for all its efforts, He has referred to the inordinate delay which is the concern of the Pensioners. A brief on CGHS by Narasimhan and Insurance for Senior Citizens by Sugumaran was presented. Then Our Dy G/S Muthiyalu spoke on the issue of payments to Pensioners. He suggested that on CGHS, a detailed circular has to be issued by the Circle Secretary to help the divisions/branches in Tamilnadu. He detailed how we have come to put up our demand of pension revision as per the 7 th CPC and various stages of our approach since 2013. In his speech, He referred to the efforts taken by our Association & Leaders in meeting the Pay Commission Chairman, DOT and other Officers. He has given a resume of our approach/functioning till today. With Vote of Thanks by Treasurer Ramkumar the meeting ended by 1710Hrs.
N.S.Deenadayalan
Division Secretary
STR Division, Chennai.
நமது STR Division செப்டம்பர் மாத கூட்டம் 13-09-2022 அன்று மாலை N.S..C.Bose சாலை பூக்கடை தொலைபேசி நிலையத்தில் மாவட்டதலைவர் தோழர் N.Kothandaraman அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் மறைந்த உறுப்பினர் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மாவட்ட செயலாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று மெடிகல் பில் பேமெண்ட் பற்றியும், பென்ஷன் ரிவிஷன் செய்தி பற்றியும், சங்க செய்திகளையும் விளக்கிக் கூறினார். தோழர் நரசிம்மன் அவர்கள் உறுப்பினர்கள் குடும்ப நல நிகழ்வுகளை தெரிவித்தார். மற்றும் புதியதாக சேர்ந்துள்ள 10 உறுப்பினர்களை கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். இவர்களையும் சேர்த்து நமது உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 1588 என்றும் கூறினார். மாநில செயலாளர் தோழர் சுந்தரகிருஷ்ணன் அவர்கள் CCA, சென்னை ஓய்வூதியத்தை வங்கிகள் மூலம் வழங்கும் முறையை துவங்கி விட்டது. மேலும் தகவல்களை ஓய்வூதியர்களுக்கு (BOB,Canara Bank, Indian Bank,IOB, PNB, மற்றும் SBI) அனுப்பி வருவதாகவும் இதன் பின்னர் வாழ்நாள் சான்றிதழ் நவம்பர் மாதம் CCA TN க்குத்தான சமர்பிக்க வேண்டும், வங்கிகளில் அளிக்கக் கூடாது என்று கூறினார். கௌரவ தலைவர் சுகுமாரன் அவர்கள் ஓய்வூதிய மாற்றம் குறித்து நமது அகில இந்திய சங்கம் மற்ற சங்கங்களுடனும் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மீண்டும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தோழர் ராமகிருஷ்ணன் அவர்கள் அ.இ.தலைமையை பாராட்டியும் ஓய்வூதிய மாற்றம் காலதாமதத்தை தவிர்க்கவும் வேண்டினார். தலைவர் N. K.அவர்கள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு தோழர் S.ராம்குமார் அவர்களை பொருளாளராகவும் தோழர் G.வாசுதேவன் அவர்களை துணை செயலாளராகவும் செயல்பட வேண்டினார். பொதுக்குழுவால் அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்டட்டது. அனைவருக்கும் இனிப்பு, கார ம் மற்றும் காஃபி வழங்கப்பட்டது. அ.இ.து.தலைவர் தோழர் K.முத்தியாலு அவர்கள் 2013 முதல் ஓய்வூதிய மாற்றத்திற்கான முயற்சிகளை நமது அகில இந்திய சங்கம் மேற்கொண்டு வந்திருப்பதை விளக்கி பேசினார். மேலும் CGHS பற்றிய செய்திகளை நமது மாநில செயலாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் கிளைகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்று வேண்டினார். இறுதியாக பொருளாளர் தோழர் S.ராமகுமார் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். மாலை 0510மணிக்குக் கூட்டம் நிறைவடைந்தது.110 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
N.S.Deenadayalan.
மாவட்ட செயலாளர்
STR Division.சென்னை.
Wednesday, 14 September 2022
Tuesday, 13 September 2022
CGM STR CNI has made MEDICAL BILL PAYMENT to the following 151 pensioners today 13-9-22. CGM STSR PAYMENT WILL BE CREDITED IN A DAY OR TWO:
TO SEE THE LIST CLICK HERE
Friday, 9 September 2022
Thursday, 8 September 2022
CGHS க்கு மாறலாமா? வேண்டாமா??
தற்போது சென்னை, பாண்டி, திருநெல்வேலி, திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான பென்ஷனர்கள் CGHS க்கு மாறிவிட்டனர். எனினும் இன்னும் சிலர் இதற்கு மாறலாமா வேண்டாமா என்கிற தயக்கத்தில் இன்னும் உள்ளனர். சமீபத்தில் சம்பண் பென்ஷனர்கள், மற்றும் வங்கி மாற்றங்கள் (BANK MIGRATION) பற்றி ஒரு கட்டுரை தமிழில் வெளியிட்டு இருந்தோம். அதை பாராட்டிய தோழர்கள், அதே போல ஒரு தெளிவான விளக்கத்தை CGHS பற்றியும் ஒரு கட்டுரையை தமிழில் எழுதி தங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கோவையில் விரைவில் CGHS ன் புதிய வெல்னஸ் சென்டர் துவக்க இருக்கிறார்கள். கோவையில் உள்ள சில பென்ஷனர்களும், குறிப்பாக அங்கு உள்ள சில முன்னனி தொழிற்சங்க தலைவர்களும் நம்மிடம் இது பற்றி ஒரு விரிவான விளக்க கட்டுரை உடனே வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனவே CGHS பற்றிய விளக்கத்தை இங்கே கூறியுள்ளோம்.
CGHS க்கு நாம் ஏன் மாறவேண்டும், அதனால் என்ன என்ன பலன்கள் என்பதை முதலில் பார்க்கலாம்.
1. CGHS ஐ பொருத்தவரை புறநோயாளிகள் பிரிவு மிக சிறப்பாக செயல்படுகிறது. பென்ஷனர்களில் சிலர் சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், BP போன்ற நோய்களுக்காக மாதம் ரூ.2000/- முதல் ரூ 3000/- வரை மாத்திரைகள் வாங்க செலவு செய்கிறார்கள். CGHS ல் இவைகளை ஒரு செலவும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். வேறு நோய்களுக்கான மருந்துகளையும் பெற்றுக் கொள்ளலாம். அவர்களிடம் இல்லை என்றாலும் வாங்கித் தருவார்கள். மூன்று மாத மாத்திரைகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். சுகர் ப்ளட் டெஸ்ட், X RAY, MRI SCAN போன்றவைகளையும் அங்கீகரிக்கப்பட்ட LAB களில் சென்று செலவு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். (ஒரு SCAN எடுப்பதற்கு தற்போது ரூ 5000/- ரூ 10000/- வரை கூட செலவு ஆகும்.)
2. உள்நோயாளி பிரிவைப் பொருத்தவரை CGHS மூலமாக கடிதம் பெற்றுக் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் சேர்ந்து கொள்ளலாம்.
3. கேடராக்ட் கண் அறுவை சிகிச்சைக்கு அனுமதி உண்டு.
4. புற்றுநோய் மற்றும் டையலிஸிஸ் வைத்தியத்திற்கும் அனுமதி உண்டு. அதற்கான மருந்து மாத்திரைகளும் தொடர்ச்சியாக வாங்கிக் கொள்ளலாம். இன்சுலின் கூட தருகிறார்கள்.
5. முன்கூட்டியே திட்டமிடப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு CGHS இடம் இருந்து அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட மருத்துமனைகளில் அறுவை சிகிச்சைகளை செல்வு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.
6. HEART ATTACK, ROAD ACCIDENT போன்ற EMERGENCY நேரங்களில், நேரிடையாகஅங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்ளலாம். EMERGENCY காரணமாக மட்டும் மற்ற மருத்துவ மனைகளில் சேர்ந்து TREATMENT எடுத்தால் பணம் கட்டிவிட்டு பிறகு CLAIM செய்து கொள்ளலாம்.
7. சில அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் CGHS RATE ல் பணம் கட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள், பில் தருகிறோம், நீங்களே CLAIM செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படி பணம் கட்டி வைத்தியம் பார்த்துவிட்டு CGHS க்கு CLAIM பண்ணினால் பணம் கண்டிப்பாக திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.
8. இந்தியாவில் உள்ள எந்த CGHS லும் சென்று காண்பித்துக் கொள்ளலாம்.
9. ஊரு விட்டு ஊர் மாறி சென்றால் அந்த ஊருக்கு கார்டை மாற்றிக் கொள்ளலாம்.
10. கணவன், மனைவி, அம்மா, அப்பா மற்றும் DEPENDENT சகோதரிக்கும் இதில் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.
11. FAMILY PENSIONER களும் CGHS ல் சேரலாம்.
12. எந்த ஊரிலிருப்பவர்களும் எந்த ஊரிலுள்ள CGHS WELNESS CENTRE ல் சேரலாம். உதாரணமாக மதுரையில் உள்ளவர்கள் திருச்சி CGHSக்கோ, அல்லது திருநெல்வேலி CGHS க்கோ, ஈரோடு, திருப்பூரில் உள்ளவர்கள் கோவை CGHS லோ சேரலாம்.
13. ஒரே ஒரு முறை ஆயுட்கால உறுப்பினர்களுக்கான சந்தாவைக் கட்டிவிட்டு அதையும் BSNL ல் திருப்பி பெற்றுக் கொள்ளலாம்.
14. CGHS ஆயுட்கால சந்தா கீழ்வருமாறு:
LEVEL 1 TO 5 Rs.30,000/-
LEVEL 6 Rs.54,000/-
LEVEL 7 TO 11 Rs. 78,000/-
LEVEL 12 & ABOVE Rs. 1,20,000/-
15. BSNL மருத்துவக் திட்டத்தில் காசு கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்கி பில்களை கொடுத்தால் பணம் எப்போது வரும், வருமா, வராதா என்று ஏங்கி காத்திருக்க வேண்டியிருக்கிறது. CGHS ல் நிலைமை அப்படி அல்ல. மருந்து மாத்திரைகளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
16. FMA வாங்கிக் கொள்ளலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அவசர ஆபத்து காலங்களில் குடும்ப மருத்துவக் திட்டம் போல் இருக்கும் CGHS உதவுவது போல FMA பலன் தராது. நாம் தற்போது இருக்கும் ஆரோக்கியாமான நிலைமையை கருத்தில் கொண்டு எனக்கு CGHS தேவையில்லை என்று முடிவு எடுக்கக் கூடாது. 70 அல்லது 80 வயதுகளில் வரப்போகும் முதுமை நோய்களையும் மனதில் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
17. ஒரு ஆபத்து என்று வரும்போது CGHS கைகொடுப்பது போல் வேறு எதுவும் கைகொடுக்காது.
18. ஆகையால் BSNL பென்ஷனர்கள் அனைவரும் CGHS ல் சேர்ந்து பலனடைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
19. மதுரை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள், திநெல்வேலி CGHS அல்லது திருச்சி CGHS அல்லது சென்னைய CGHSல் கூட சேர்ந்து கொள்ளலாம். அதே போல கோவையில் வரவிருக்கும் CGHS ல் கோவையில் உள்ள அனைத்து பென்ஷனர்களும், மற்றும் ஈரோடு, திருப்பூர் பென்ஷனர்களும் சேர்ந்து கொள்ள வேண்டும். சென்ற மாத STR கிளைக் கூட்டத்தில் இதுபற்றி நாம் ஒரு விரிவான விளக்கம் அளித்திருந்தோம். அதன்பிறகு நமது கிளையை சேர்ந்த நிறைய தோழர்கள் CGHS ல் சேர்ந்து உள்ளார்கள். இது மிகவும் வரவேற்புக் குறிய விஷயம். சென்னையில் இன்னும் CGHS ல் சேராதவர்கள் உடனடியாக அதில் சேரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் மிக சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறி இந்த கட்டுரையை முடிக்கிறோம்.
20. இடம், நேரம் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு CGHS சேருவதற்கு வழிமுறைகள் எப்படி என்பதைப் பற்றி நமது அடுத்த கட்டுரையில் தெரிவிக்கிறோம். 21. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
S. நரசிம்மன்,
ADS,
STR DIVISION
MOB: 9444415150
இந்த நாள் மறக்க முடியாத நாள்.
பொதுத்துறையாக மாறிய போது அரசுத் துறையில் பெற்ற உரிமைகள் அனைத்தும் தொடரவும் குறிப்பாக அரசாங்க பென்ஷன். அரசாங்க நிதியிலிருந்து.DOT BSNL இரண்டு சேவையும் சேர்த்து பென்ஷன். 1.10.2000முதல் அனைவரும் நிரந்தர ஊழியர்கள் இன்னும் பல முக்கியமான பிரச்சினைகளில் அரசுக்கும் NFTE. FNTO. BTEF மூன்று சம்மேளனங்களுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தான நாள். போற்றுதலுக்குரிய நன்னாள். க.முத்தியா லு.
CIRCLE SECRETARY TN MESSAGE:
Dear Comrades,
Good afternoon. Throughout the Nation, Pension paid by CPPC of respective banks are being migrated to SAMPANN, means pension will be sent to respective bank accounts by CCA office. Approximately, 21000 Pensioners are getting Pension through Bank. As per the direction of CGCA NewDelhi, respective banks are taken for Migration. Bankwise Breakup details.
Phase I 1.Bank of Baroda. 118 approx 100 migrated.
Phase II. Canara bank 3558 out of which 2215 migrated during August. Rest during Sep
PHASE III. INDIAN BANK 4885, Out of which 50% likely to get migration during Sep.
Phase IV 1. IOB. 3319. 2.BOI 200 3.Central Bank 279. 4.UBI 70. 5.UCO 34.
PHASE V. SBI 8366. PNB. 88.
However, verification of data is in Process for SBI at Present. Canarabank not fully migrated. Indian bank migration during September/Oct. This is for kind information.Thank you.
CS AIBSNLPWA TNC
Monday, 5 September 2022
FOR MIGRATED SAMPANN PENSIONERS ONLY
TO KNOW YOUR NEW SAMPANN PPO:
For Migrated Pensioners Only
TO Know Your PPO No
Instructions for Pensioners:
1. To Know Your SAMPANN PPO Number, Please follow the below instructionsa. Please enter your Account number and Date of Birth, Enter Captcha and Click on Submit.
b. On clicking “Submit”, you will see your PPO number and Registered Mobile number.
c. If your Mobile Number is correct, please proceed to Pensioner Login Creationhttps://dotpension.gov.in/Login/CreatePensionerLogin
d. If your Mobile Number is Incorrect, Please contact concerned circle for updating the Mobile Number.
Details of CCAs: https://dotpension.gov.in/Home/BankDataMigration
STEPS TO BE TAKEN BY PENSIONERS AFTER MIGRATION
1. Login Creation
The first step that pensioners who have been migrated onto SAMPANN need to take is to create their
Login. The respective CCA offices will intimate the concerned pensioners who have been migrated via
SMS/Call/Letter. Thereafter, Pensioners should follow the process detailed Login Creation Video
(https://www.youtube.com/watch?v=SIYRJNAWlkc (English) &
https://www.youtube.com/watch?v=hU9899C-5FI (Hindi)) to create the login.
Mobile Number is mandatory for creation of Login. Please note that the department has tried to obtain
the Mobile Numbers of pensioners as per the data available with Banks. In case the mobile number is
not available or is incorrect, pensioner should get in touch with the concerned CCA immediately. The
contact details of CCA offices are mentioned below.
2. Life Certificate Submission:
Once Pensioners are migrated onto SAMPANN, Pension will be disbursed by respective CCA offices.
Therefore, Life Certificates have to be submitted to the concerned CCA office only.
a. Physical Submission of Life Certificate at CCA: Pensioner by physically going to concerned CCA, can
submit the LC. The addresses and contact details are mentioned below.
b. Digital Life Certificate Submission: The Digital Life Certificate would now be submitted to the
concerned CCA office. The PDA details while submitting DLC on JeevanPramaan would be:
1. Sanctioning Authority ◇ TELECOM
2. Disbursing Agency ◇ SAMPANN - Department of Telecommunications
3. Agency ◇ Concerned CCA Office
WEBSITE ADDRESS: https://dotpension.gov.in/Login/Index
சம்பண் பென்ஷன் மற்றும் வங்கி மாற்றங்கள் குறித்த சில விளக்கங்கள்:
தோழர்களே! சில உறுப்பினர்கள், சமீபத்தில் தங்களுக்கு CCA TN அலுவலகத்தில் இருந்து நீங்கள் CCA TN க்கு மைக்ரேட் ஆகி உள்ளீர்கள் என்ற SMS செய்தி வந்திருக்கிறது. அப்படி என்றால் என்ன? அதனால் எங்களுக்கு என்ன பாதிப்பு அல்லது நன்மை என்று தமிழில் விளக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால் அதற்கான விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.
அதற்குமுன் தற்போது நம்முடைய பென்ஷன் தொகை நமது கணக்கிற்கு எப்படி வந்து சேருகிறது என்று முதலில் பார்க்கவேண்டும்.
பென்ஷன் தொகை நமக்கு DOT யால் CCA TN வழியாக கிடைக்கிறது. தற்போது CCA TN, சம்பண் பென்ஷனர்களுக்கு மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் அவர்களே நேரிடையாக வரவு வைக்கிறார்கள்.
இதுவரை சம்பண் பென்ஷனர்களைத் தவிர வேறு யாருக்கும் CCA TN நேரிடையாக பென்ஷன் தொகையை நமது வங்கி கணக்கில் வரவு வைப்பது கிடையாது. அதற்கு பதிலாக SBI, IOB, IB, CANARA BANK, PNB, போன்ற வங்கிகளின் CPPC (CENTRALIZED PENSION PROCESSING CENTRE) இடம் அந்த பொறுப்புகளை அல்லது வேலையை கமிஷன் அல்லது கான்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைத்து ஊள்ளார்கள். எனவே அந்த அந்த வங்கிகளின் CPPC தான் நமது பென்ஷன் தொகைகயை நம்முடைய வங்கி கணக்கில் வரவு செய்து வருகிறது.
DOT நிர்வாகம் தற்போது அந்த முறையை ஒழித்து, அனைவருக்கும் பென்ஷன் தொகையை அவர்களின் வங்கி கணக்கில் CCA TN மூலமாகவே வழங்கவேண்டும் என்று முடிவு செய்து கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அந்த வேலையை செய்து வருகிறார்கள். அதனால்தான் மாற்றப்படும் அந்த பென்ஷனர்களுக்கு CCA TN இடமிருந்து அந்த செய்திகள் வருகின்றன. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் இனி இவர்களுக்கு பென்ஷன் CCA TN மூலமாக நேரிடையாக வழங்கப்படுகிறது. அவர்களுடைய வங்கிகளின் CPPC மூலமாக அல்ல என்பதுதான். தற்போது BANK OF BARODA, CANARA BANK, INDIAN BANK மாற்றப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற வங்கிகளும் இந்த வருட இறுதிக்குள் மாற்றப்படும். இதனால் உள்ள சாதக பாதங்களை இப்போது பார்க்கலாம்.
1. இனி இவர்கள் சம்பண் பென்ஷனர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.
2. இதில் மிக முக்கியமானது இவர்கள் இனி இவர்கள் LIFE CERTICATE ஐ அவர்களது வங்கிகளில் கொடுக்க கூடாது. CCA TN அலுவலகத்திலோ, அல்லது ஜீவன் ப்ரமான் மூலமாகவோ, போஸ்ட் ஆபிஸ் மூலமாக டிஜிடல் லைஃப் சர்டிஃபிகேட் CCA TN அலுவகத்துக்குதான் கொடுக்கவேண்டும். அதை நவம்பரில் கொடுப்பதில் எந்த மாற்றமும் இல்லை.
3. இவர்களுடைய ஃபேமிலி பென்ஷன் பற்றிய கடிதங்களை CCA TN க்குத்தான் அனுப்பவேண்டும். வங்கிகளுக்கு அல்ல.
4. இவர்கள் சம்பண் போர்டல் உபயோகப்படுத்துவதற்காக, இவர்களது மெயில் IDக்கு, CCA TN அலுவலகத்திலிருந்து USER ID & PASSWARD அனுப்படும்.
5. CPPC வங்கியில் உள்ள PPO COPY, CCA TN அலுவலகத்தால் திரும்பி பெறப்படும்.
6. அதே வங்கியில் அதே கணக்கில், மாதத்தின் கடைசீ நாளில்தான் CCA TN வினால் பென்ஷன் தொகை வரவு வைக்கப்படும்.
7. பழைய PPO புத்தகத்தை பென்ஷனர்களே வைத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய PPO SOFT COPY பென்ஷனர்களுக்கு கொடுக்கப்படும்.
8. புதிய PPO நம்பர் CCA TN ஆல் வழங்கப்படும். பழைய PPO வின் கடைசீ 5 நம்பர்கள் மட்டும் மாற்றம் இல்லாமல் புதிய நம்பர் வழங்கப்படும்.
9. CCA கையெழுத்திட்ட புதிய PPO வழங்கப்படவேண்டும் என்று CCA விடம் கேட்டிருக்கிறோம். மறுபடியும் நிர்பந்திப்போம்.
10. POST OFFICE பென்ஷனர்களின் மாற்றம் பற்றி CCA அலுவலகத்தால் எந்த முடிவும் இதுவரை எடுக்கப் படவில்லை. முடிவு தெரிந்ததும் தெரிவிக்கிறோம்.
11. இதில் சந்தேகம் ஏதும் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
S. Narasimhan
ADS
STR DIVISION
9444415150
Thursday, 1 September 2022
CCA TN has released a List of 311 Pensioners / Family Pensioners whose LC / DLC expired on 31-08-2022 (status as on 26-08-2022)
Note 1 : Only on receipt of valid Life Certificate / Digital Life Certificate latest by 20.09.2022, Pension will be drawn from the month of SEPTEMBER 2022.
Note 2 : For submission of Digital Life Certificate through Jeevan Praman FOR SAMPANN PENSIONERS, the following parameters are to be selected and correct PPO & Aadhar number to be uploaded.
(i) Sanctioning Authority as "Telecom"
(ii) Disbursing Agency as "SAMPANN - Department of Telecommunications"
(iii) Agency as "Pr.CCA, Tamil Nadu
To view the list CLICK HERE