IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 8 September 2022

 CGHS க்கு மாறலாமா? வேண்டாமா??

தற்போது சென்னை, பாண்டி, திருநெல்வேலி, திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான பென்ஷனர்கள் CGHS க்கு மாறிவிட்டனர். எனினும் இன்னும் சிலர் இதற்கு மாறலாமா வேண்டாமா என்கிற தயக்கத்தில் இன்னும்  உள்ளனர். சமீபத்தில் சம்பண் பென்ஷனர்கள், மற்றும் வங்கி மாற்றங்கள் (BANK MIGRATION) பற்றி ஒரு கட்டுரை தமிழில் வெளியிட்டு இருந்தோம். அதை பாராட்டிய தோழர்கள், அதே போல ஒரு தெளிவான விளக்கத்தை CGHS பற்றியும் ஒரு கட்டுரையை தமிழில் எழுதி தங்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கோவையில் விரைவில் CGHS ன் புதிய வெல்னஸ் சென்டர் துவக்க இருக்கிறார்கள். கோவையில் உள்ள சில பென்ஷனர்களும், குறிப்பாக அங்கு உள்ள சில முன்னனி தொழிற்சங்க தலைவர்களும் நம்மிடம் இது பற்றி ஒரு விரிவான விளக்க கட்டுரை உடனே வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எனவே CGHS பற்றிய விளக்கத்தை இங்கே கூறியுள்ளோம். 

CGHS க்கு நாம் ஏன் மாறவேண்டும், அதனால் என்ன என்ன பலன்கள் என்பதை முதலில் பார்க்கலாம். 

1. CGHS ஐ பொருத்தவரை புறநோயாளிகள் பிரிவு மிக சிறப்பாக செயல்படுகிறது. பென்ஷனர்களில் சிலர் சர்க்கரை வியாதி, கொலஸ்ட்ரால், BP போன்ற நோய்களுக்காக மாதம் ரூ.2000/- முதல் ரூ 3000/- வரை மாத்திரைகள் வாங்க செலவு செய்கிறார்கள். CGHS ல் இவைகளை ஒரு செலவும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். வேறு நோய்களுக்கான மருந்துகளையும் பெற்றுக் கொள்ளலாம். அவர்களிடம் இல்லை என்றாலும் வாங்கித் தருவார்கள். மூன்று மாத மாத்திரைகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். சுகர் ப்ளட் டெஸ்ட், X RAY, MRI SCAN போன்றவைகளையும் அங்கீகரிக்கப்பட்ட LAB களில் சென்று செலவு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். (ஒரு SCAN எடுப்பதற்கு தற்போது ரூ 5000/- ரூ 10000/- வரை கூட செலவு ஆகும்.)

2. உள்நோயாளி பிரிவைப் பொருத்தவரை CGHS மூலமாக கடிதம் பெற்றுக் கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் சேர்ந்து கொள்ளலாம். 

3. கேடராக்ட் கண் அறுவை சிகிச்சைக்கு அனுமதி உண்டு. 

4. புற்றுநோய் மற்றும் டையலிஸிஸ் வைத்தியத்திற்கும் அனுமதி உண்டு. அதற்கான மருந்து மாத்திரைகளும் தொடர்ச்சியாக வாங்கிக் கொள்ளலாம். இன்சுலின் கூட தருகிறார்கள்.  

5. முன்கூட்டியே திட்டமிடப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு CGHS இடம் இருந்து அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட மருத்துமனைகளில் அறுவை சிகிச்சைகளை செல்வு இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

6. HEART ATTACK, ROAD ACCIDENT போன்ற EMERGENCY நேரங்களில், நேரிடையாகஅங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்ளலாம். EMERGENCY காரணமாக மட்டும் மற்ற மருத்துவ மனைகளில் சேர்ந்து TREATMENT எடுத்தால் பணம் கட்டிவிட்டு பிறகு CLAIM செய்து கொள்ளலாம். 

7. சில அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் CGHS RATE ல் பணம் கட்டி வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள், பில் தருகிறோம், நீங்களே CLAIM செய்து கொள்ளுங்கள்  என்று சொல்கிறார்கள். அப்படி பணம் கட்டி வைத்தியம் பார்த்துவிட்டு CGHS க்கு CLAIM பண்ணினால் பணம் கண்டிப்பாக திரும்ப பெற்றுக்  கொள்ள முடியும். 

8. இந்தியாவில் உள்ள எந்த CGHS லும் சென்று காண்பித்துக் கொள்ளலாம். 

9. ஊரு விட்டு ஊர் மாறி சென்றால் அந்த ஊருக்கு கார்டை மாற்றிக் கொள்ளலாம்.   

10. கணவன், மனைவி, அம்மா, அப்பா மற்றும் DEPENDENT சகோதரிக்கும் இதில் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். 

11. FAMILY PENSIONER களும் CGHS ல் சேரலாம்.

12. எந்த ஊரிலிருப்பவர்களும் எந்த ஊரிலுள்ள CGHS WELNESS CENTRE ல் சேரலாம். உதாரணமாக மதுரையில் உள்ளவர்கள் திருச்சி CGHSக்கோ, அல்லது திருநெல்வேலி  CGHS  க்கோ,  ஈரோடு, திருப்பூரில் உள்ளவர்கள் கோவை CGHS லோ சேரலாம். 

13. ஒரே ஒரு முறை ஆயுட்கால உறுப்பினர்களுக்கான சந்தாவைக் கட்டிவிட்டு அதையும் BSNL ல் திருப்பி பெற்றுக் கொள்ளலாம். 

14. CGHS ஆயுட்கால சந்தா கீழ்வருமாறு:

    LEVEL 1 TO 5       Rs.30,000/-

    LEVEL 6 Rs.54,000/-

    LEVEL 7 TO 11     Rs. 78,000/-

    LEVEL 12 & ABOVE Rs. 1,20,000/-

15. BSNL மருத்துவக் திட்டத்தில் காசு கொடுத்து மருந்து மாத்திரைகள் வாங்கி பில்களை கொடுத்தால் பணம் எப்போது வரும், வருமா, வராதா என்று ஏங்கி காத்திருக்க வேண்டியிருக்கிறது. CGHS ல் நிலைமை அப்படி அல்ல. மருந்து மாத்திரைகளை காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 

16. FMA வாங்கிக் கொள்ளலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அவசர ஆபத்து காலங்களில் குடும்ப மருத்துவக் திட்டம் போல் இருக்கும் CGHS உதவுவது போல FMA பலன் தராது. நாம் தற்போது இருக்கும் ஆரோக்கியாமான நிலைமையை கருத்தில் கொண்டு எனக்கு  CGHS தேவையில்லை என்று முடிவு எடுக்கக் கூடாது. 70 அல்லது 80 வயதுகளில் வரப்போகும் முதுமை நோய்களையும் மனதில் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். 

17. ஒரு ஆபத்து என்று வரும்போது CGHS கைகொடுப்பது போல் வேறு எதுவும் கைகொடுக்காது. 

18. ஆகையால் BSNL பென்ஷனர்கள் அனைவரும் CGHS ல் சேர்ந்து பலனடைய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

19. மதுரை, மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள், திநெல்வேலி CGHS அல்லது திருச்சி CGHS அல்லது சென்னைய CGHSல் கூட சேர்ந்து கொள்ளலாம். அதே போல கோவையில் வரவிருக்கும் CGHS ல் கோவையில் உள்ள அனைத்து பென்ஷனர்களும், மற்றும் ஈரோடு, திருப்பூர் பென்ஷனர்களும் சேர்ந்து கொள்ள வேண்டும். சென்ற மாத STR கிளைக் கூட்டத்தில் இதுபற்றி நாம் ஒரு விரிவான விளக்கம் அளித்திருந்தோம். அதன்பிறகு நமது கிளையை சேர்ந்த நிறைய தோழர்கள் CGHS ல் சேர்ந்து உள்ளார்கள். இது மிகவும் வரவேற்புக் குறிய விஷயம். சென்னையில் இன்னும் CGHS ல் சேராதவர்கள் உடனடியாக அதில் சேரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் மிக சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறி இந்த கட்டுரையை முடிக்கிறோம்.

20. இடம், நேரம் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு CGHS சேருவதற்கு வழிமுறைகள் எப்படி என்பதைப் பற்றி நமது அடுத்த கட்டுரையில் தெரிவிக்கிறோம்.  21. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.  


S. நரசிம்மன், 

ADS,  

STR DIVISION  

MOB: 9444415150

No comments:

Post a Comment