IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 5 September 2022

 சம்பண் பென்ஷன் மற்றும் வங்கி மாற்றங்கள் குறித்த சில விளக்கங்கள்:

தோழர்களே! சில உறுப்பினர்கள், சமீபத்தில் தங்களுக்கு CCA TN அலுவலகத்தில் இருந்து நீங்கள் CCA TN க்கு மைக்ரேட் ஆகி உள்ளீர்கள் என்ற SMS செய்தி வந்திருக்கிறது. அப்படி என்றால் என்ன? அதனால் எங்களுக்கு என்ன பாதிப்பு அல்லது நன்மை என்று தமிழில் விளக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால் அதற்கான விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம். 

அதற்குமுன் தற்போது நம்முடைய பென்ஷன் தொகை நமது கணக்கிற்கு எப்படி வந்து சேருகிறது என்று முதலில் பார்க்கவேண்டும். 

பென்ஷன் தொகை நமக்கு DOT யால் CCA TN வழியாக கிடைக்கிறது. தற்போது CCA TN, சம்பண் பென்ஷனர்களுக்கு மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் அவர்களே நேரிடையாக  வரவு வைக்கிறார்கள்.    

இதுவரை சம்பண் பென்ஷனர்களைத் தவிர வேறு யாருக்கும் CCA TN நேரிடையாக பென்ஷன் தொகையை நமது வங்கி கணக்கில் வரவு வைப்பது கிடையாது. அதற்கு பதிலாக SBI, IOB, IB, CANARA BANK, PNB, போன்ற வங்கிகளின் CPPC  (CENTRALIZED PENSION PROCESSING CENTRE) இடம் அந்த பொறுப்புகளை அல்லது வேலையை கமிஷன் அல்லது கான்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைத்து ஊள்ளார்கள். எனவே அந்த அந்த வங்கிகளின் CPPC தான் நமது பென்ஷன் தொகைகயை நம்முடைய வங்கி கணக்கில் வரவு செய்து வருகிறது. 

DOT  நிர்வாகம் தற்போது அந்த முறையை ஒழித்து, அனைவருக்கும் பென்ஷன் தொகையை அவர்களின் வங்கி கணக்கில் CCA TN மூலமாகவே வழங்கவேண்டும் என்று முடிவு செய்து கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அந்த வேலையை செய்து வருகிறார்கள். அதனால்தான் மாற்றப்படும் அந்த பென்ஷனர்களுக்கு CCA TN இடமிருந்து அந்த செய்திகள் வருகின்றன. இதனுடைய அர்த்தம் என்னவென்றால் இனி இவர்களுக்கு பென்ஷன் CCA TN மூலமாக நேரிடையாக வழங்கப்படுகிறது. அவர்களுடைய வங்கிகளின் CPPC மூலமாக அல்ல என்பதுதான். தற்போது BANK OF BARODA, CANARA BANK, INDIAN BANK மாற்றப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற வங்கிகளும் இந்த வருட இறுதிக்குள் மாற்றப்படும். இதனால் உள்ள சாதக பாதங்களை இப்போது பார்க்கலாம். 

1. இனி இவர்கள் சம்பண் பென்ஷனர்கள் என்று அழைக்கப்படுவார்கள். 

2. இதில் மிக முக்கியமானது இவர்கள் இனி இவர்கள் LIFE CERTICATE ஐ அவர்களது வங்கிகளில் கொடுக்க கூடாது. CCA TN அலுவலகத்திலோ, அல்லது ஜீவன் ப்ரமான் மூலமாகவோ, போஸ்ட் ஆபிஸ் மூலமாக டிஜிடல் லைஃப் சர்டிஃபிகேட் CCA TN அலுவகத்துக்குதான் கொடுக்கவேண்டும். அதை நவம்பரில் கொடுப்பதில் எந்த மாற்றமும் இல்லை.

3. இவர்களுடைய ஃபேமிலி பென்ஷன் பற்றிய கடிதங்களை CCA TN க்குத்தான் அனுப்பவேண்டும். வங்கிகளுக்கு அல்ல.

4. இவர்கள் சம்பண் போர்டல் உபயோகப்படுத்துவதற்காக, இவர்களது மெயில் IDக்கு, CCA TN அலுவலகத்திலிருந்து USER ID & PASSWARD அனுப்படும்.

5. CPPC வங்கியில் உள்ள PPO COPY, CCA TN அலுவலகத்தால் திரும்பி பெறப்படும். 

6. அதே வங்கியில் அதே கணக்கில், மாதத்தின் கடைசீ நாளில்தான் CCA TN  வினால் பென்ஷன் தொகை வரவு வைக்கப்படும். 

7. பழைய PPO புத்தகத்தை பென்ஷனர்களே வைத்துக் கொள்ளலாம். ஆனால் புதிய PPO SOFT COPY பென்ஷனர்களுக்கு கொடுக்கப்படும்.

8. புதிய PPO நம்பர் CCA TN ஆல் வழங்கப்படும். பழைய  PPO வின் கடைசீ 5 நம்பர்கள் மட்டும் மாற்றம் இல்லாமல் புதிய நம்பர் வழங்கப்படும். 

9. CCA கையெழுத்திட்ட புதிய PPO வழங்கப்படவேண்டும் என்று CCA விடம் கேட்டிருக்கிறோம். மறுபடியும் நிர்பந்திப்போம்.

10. POST OFFICE பென்ஷனர்களின் மாற்றம் பற்றி CCA அலுவலகத்தால் எந்த முடிவும் இதுவரை எடுக்கப் படவில்லை. முடிவு தெரிந்ததும் தெரிவிக்கிறோம். 

11. இதில் சந்தேகம் ஏதும் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

S. Narasimhan

ADS

STR DIVISION

9444415150

No comments:

Post a Comment