IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 15 April 2024

 மீண்டும் KYP படிவம்…


தமிழ்நாடு DOT மற்றும் BSNL ஓய்வூதியர்கள் மீண்டும் 

KYP படிவங்களை

17/05/2024க்குள் சென்னை CCA அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என CCA அலுவலகம் இன்று 15/04/2024 

அறிவிப்பு செய்துள்ளது.


CCA அலுவலக அறிவிப்பு

------------------------------------

வங்கி மற்றும் அஞ்சல்துறைகளின் மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த ஓய்வூதியர்கள் ஜுலை 2022 முதல் டிசம்பர் 2023வரையிலும் SAMPANN மென்பொருள் மூலம் இணையத்திற்கு மாற்றப்பட்டார்கள்.


வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாக பெறப்பட்ட விவரங்கள் SAMPANN இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.


ஆனாலும் பல ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும்


சரியான முகவரி…

அலைபேசி எண்

மின்னஞ்சல் முகவரி…

சரியான பிறந்த தேதி…

போன்ற விவரங்கள் SAMPANN இணையத்தில் பதிவேற்றம் ஆகவில்லை.


இதனால் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் SAMPANN இணையத்தில் தங்களது தனிவிவரங்களை LOGIN செய்து  உபயோகிப்பாளர் பயன்பாட்டை உருவாக்க முடியவில்லை.


இதனால் CCA அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் குறிப்பாக ஓய்வூதியப் பட்டுவாடா, வாழ்வு சான்றிதழ் புதுப்பிக்க வேண்டிய செய்தி, 80 வயது ஆகும்போது கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது போன்றவற்றை ஓய்வூதியர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.


இதுவரை சுமார் 8000 எட்டாயிரம் ஓய்வூதியர்கள் மட்டுமே KYP விவரங்களை CCA அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர்.


எனவே SAMPANN இணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரும் தங்களது KYP விவரங்களை அதற்குரிய படிவத்தில் நிரப்பி சென்னை CCA அலுவலகத்திற்கு 17/05/20204க்குள் அனுப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றது.





No comments:

Post a Comment