IDA INCREASE FROM 1-1-2023

IDA INCREASED 1.0% FROM 1-7-2024 - TOTAL 217.8%

Monday 16 September 2024


 

STR DN ன் "ஊங்களுக்குத் தெரியுமா" பகுதி 2 காணொளிக் காட்சி:

Saturday 14 September 2024

 தோழர்களே தோழியர்களே வணக்கம்

 ஸம்பன்னில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால்

வரும் திங்கட்கிழமை 16-09-2024 முதல் 30-09-2024 வரையில் நடைபெரும் முகாமில்  CCA அலுவலகத்தில் No. 60 எதிராஜ் சாலை  சென்னை 600008 ல்     KYP Form சமர்ப்பிக்க வேண்டுகிறோம். 

நமது கிரீம்ஸ் ரோடு தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் இந்த மாதம் 18 மற்றும் 19 தேதிகளில் சமர்ப்பிக்கலாம் அதுபோலவே    கிண்டி  STR CGM   அலுவலகத்தில் இந்த மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் சமர்ப்பிக்க லாம். 

இந்த வாய்ப்பை பயன்படுத்தி க் கொள்ள வேண்டுகிறோம். 

   தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன்

மாவட்ட செயலாளர்     STR Division Chennai.

 கிண்டி டாக்டர் கலைஞர் மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையை CGHS EMPANELLED LIST ல் கொண்டுவருவதற்கு, சென்னையிலுள்ள அனைத்து LAC உறுப்பினர்களும் தங்கள் தங்கள் LAC  மீட்டிங்களில் அவர்களது ஒவ்வொரு மீட்டிங்களிலும் கோரிக்கை வைத்து வற்புறுத்தி அதை கொண்டுவர பெரு முயற்சி எடுத்து வந்துள்ளார்கள் என்பதும், அவர்களுடைய பங்கும் இதில் பெருமளவில் இருந்தது என்பதும் குறிப்படத்தக்கது. மிக முக்கியமானது. அவர்களுக்கும் நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுடைய பங்கு பற்றி முதல் பதிவில் விடுபட்டுவிட்டமைக்கு வருந்துகிறோம்

 CGHS PERAMBUR LOCAL ADVISORY COMMITTEE MEETING 14-9-2024


           

            


பெரம்பூர் CGHS லோகல் அட்வைஸரி கமிட்டியின் மாதாந்திரக் கூட்டம் இன்று சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. சென்னை தொலைபேசி பொருளாளர் கண்ணப்பனும் நரசிம்ஹனும் கலந்து கொண்டார்கள். சீஃப் மெடிகல் ஆபிசர் ரேவதி அவர்கள் ஒரு முக்கிய நல்ல தகவலை நம்மிடம் தெரிவித்தார். அதாவது கிண்டியில் உள்ள டாக்டர் கலைஞர் சென்டினரி மல்டி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரியை CGHS எம்பானல்மென்ட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ள CGHS டெல்லி டைரக்டர் CGHS, அனுமதி அளித்த கடிதம் சென்னை AD CGHS அலுவலகத்திற்கு நேற்று வந்து விட்டதாகவும், மற்ற ஃபார்மாலிட்டிகள் முடிந்தவுடன் விரைவில் அதற்கான அதிகாரபூர்வ உத்தரவு வெளியிடப்படும் என்று கூறினார். அப்படி அந்த உத்தரவு வெளியிடப்பட்டால் நமது தோழர்கள் அந்த மருத்துவமனையில் உள் நோயாளி மருத்துவ வசதிகளை கேஷ்லஸ் ட்ரீட்மென்ட் மூலம் எடுத்துக் கொள்ளமுடியும். சென்னையில் உள்ள அந்த மருத்துவமனை ஆசியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவமனையாக அதி நவீன மருத்துவ வசதிகளுடன் இன்று இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மருத்துவமனையை CGHS EMPANELMENT LIST ல் கொண்டுவருவதற்காக நம் தமிழ்நாடு மாநிலத் தோழர்கள் ராமாராவ், அனுராதா, வி. லதா மற்றும் சென்னை தொலைபேசி தோழர்கள் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.  இந்த நேரத்தில் அவர்களுக்கு நம் நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்


Friday 13 September 2024

 Com. Sitaram Yechury, General Secretary of the Communist Party of India (Marxist) and an outstanding leader of the Indian working class movement, passed away on 12-9-24. We pay our respectful homage to the leader.


Monday 9 September 2024

 STR DN ன் "உங்களுக்குத் தெரியுமா" பகுதி - 2 ன் காணொளிக் காட்சியின் பதிவு கீழே கொடுத்துள்ளோம்.


              

Saturday 7 September 2024


 

STR DN EXECUTIVE COMMITTE MEETING 4-9-24 MINUTES 



 தோழர்களே தோழியர்களே வணக்கம். 

கடந்த புதன்கிழமை 04-09-2024 காலை 11.15 மணி முதல் 01.30 மணி வரை பூக்கடை தொலைபேசி நிலையம் 5வது தளத்தில் நமது   STR Division செயற்குழுக் கூட்டம்    தோழர் N. K. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   


  நமது கௌரவ தலைவர் தோழர்.A.சுகுமாரன் 

அ. இ. து. தலைவர் தோழர் K.  முத்தியாலு, மா. செயலர் தோழர் S. சுந்தர கிருஷ்ணன், மா. பொருளாளர் தோழர் S.காளிதாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

25-10-2023 முதல் 31-8-2024 வரையில் உள்ள காலக்கட்டத்தில் மறைந்த  நம் தோழர்களுக்கும், மறைந்த மற்ற தலைவர்களுக்கும் கூட்டத்தில் முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது

25-10-2023 முதல் 31-8-2024 வரையிலான காலக்கட்டத்திற்கான இடைக்கால செயல்பாட்டு அறிக்கையை மாவட்ட செயலர் தாக்கல் செய்து கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.  மாவட்ட பொருளாளர் 1-4-23 முதல் 23-8-24 காலக்கட்டத்திற்கான ஆடிட் செய்த வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்து அவையின் ஒப்புதலைப் பெற்றார். 

தற்போடைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1736 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சொசைட்டியில் உள்ள தோழர்களின் தொகையை தோழர்களுக்கு திரும்ப பெற்றுத்தருவது பற்றி விவாதம் நடைபெற்றது. தோழர் N.K., சுகுமாரன் ஆகியோர் போதுமான விளக்கங்களை அளித்தனர். முடிவில் அந்த தொகையை பெறுவதற்கு மாநில, மத்திய சங்கங்கள் தீவிரமாக முயற்சி செய்யும் என்று கூறப்பட்டது. 

அனைவரின் ஒருமித்த கருத்தாக  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நமது  STR DN  மாநாட்டை சிறந்த முறையில்  நடத்துவது,

 நமது செயற்குழு உறுப்பினரகள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வகையில் முயற்சி மேற்கொள்வது, 

இந்த மாநாட்டிற்காக நமது உறுப்பினர்களிடம் நன்கொடை வசூல் பெறுவது இல்லை, நம்மிடம் உள்ள நிதியிலிருந்து சிறந்த முறையில் நடத்துவது, 

உறுப்பினர்கள் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடக்கும் இடம் அமைய முயற்சி மேற்கொள்வது, 

நீதி மன்ற வழக்கு நிதி 266425/- உறுப்பினர்களிடமிருந்து வசூலாகியது . 08-05-2024 அன்று அ. இ. சங்க வங்கி கணக்கில் 210000/- ரூபாய் செலுத்தப்பட்டது.  மீதமுள்ள பணம் 56425 ரூபாய் அ. இ. வங்கி கணக்கில் விரைவில் சேர்க்கப்படும். 

பஞ்சாப்  பாடியாலாவில் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுவில் நமது தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த செப்டம்பர் மாத கூட்டம் நடைபெறாது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. 

Life Ceritificate, CGHS, Sampaan, Family Pension ஆகியவைகளில் உறுப்பினர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க சிறு சிறு குறும்படங்கள் மூலம் விளக்க GRP ADMIN S. நரசிம்மன் க்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

நிறைவாக மாவட்ட செயலாளர் செயற்குழுவில் கலந்து கொண்ட தோழர் தோழியர் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.                   

 28 தோழர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன். 

D. S,, STR,  Chennai.

Thursday 5 September 2024

STR DN. ல் புதிதாகத் தொடங்கப்பட உள்ள  "STR DN ன் உங்களுக்குத் தெரியுமா" என்கிற புதிய காணொளிக் காட்சியிக்கான ஒரு அறிமுக செய்தி. 

Wednesday 4 September 2024

 Pension Revision Case today in Hon'ble  High Court Delhi 


As you are aware, the matters were listed today as Items 54 to 56 before Court 34. 


Due to another part-heard matter, our matters were not taken up and adjourned to 23.09.2024 at 3:30 pm.


Since the proceedings in High Court on writ petition are continuing, hearing on Contempt petition in CAT is likely to be adjourned to a date later than 23-9-2024.  


Com Anupam Kaul Dy. GS, 

Com K M Mishra DS Gorakhpur  attended the court today. 


V Vara Prasad // GS

 PENSION REVISION CASE


DOT's appeal against Principal CAT DELHI Court's judgement hearing is coming today at 3.30 P.M. in High Court New Delhi.


பிரின்சிபல் CAT டெல்லியின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் DOT தொடர்ந்த அப்பீல் இன்று மதியம் 3.30 P.M. விசாரணைக்கு வருகிறது