IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 14 September 2024

 CGHS PERAMBUR LOCAL ADVISORY COMMITTEE MEETING 14-9-2024


           

            


பெரம்பூர் CGHS லோகல் அட்வைஸரி கமிட்டியின் மாதாந்திரக் கூட்டம் இன்று சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. சென்னை தொலைபேசி பொருளாளர் கண்ணப்பனும் நரசிம்ஹனும் கலந்து கொண்டார்கள். சீஃப் மெடிகல் ஆபிசர் ரேவதி அவர்கள் ஒரு முக்கிய நல்ல தகவலை நம்மிடம் தெரிவித்தார். அதாவது கிண்டியில் உள்ள டாக்டர் கலைஞர் சென்டினரி மல்டி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரியை CGHS எம்பானல்மென்ட் லிஸ்டில் சேர்த்துக் கொள்ள CGHS டெல்லி டைரக்டர் CGHS, அனுமதி அளித்த கடிதம் சென்னை AD CGHS அலுவலகத்திற்கு நேற்று வந்து விட்டதாகவும், மற்ற ஃபார்மாலிட்டிகள் முடிந்தவுடன் விரைவில் அதற்கான அதிகாரபூர்வ உத்தரவு வெளியிடப்படும் என்று கூறினார். அப்படி அந்த உத்தரவு வெளியிடப்பட்டால் நமது தோழர்கள் அந்த மருத்துவமனையில் உள் நோயாளி மருத்துவ வசதிகளை கேஷ்லஸ் ட்ரீட்மென்ட் மூலம் எடுத்துக் கொள்ளமுடியும். சென்னையில் உள்ள அந்த மருத்துவமனை ஆசியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவமனையாக அதி நவீன மருத்துவ வசதிகளுடன் இன்று இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மருத்துவமனையை CGHS EMPANELMENT LIST ல் கொண்டுவருவதற்காக நம் தமிழ்நாடு மாநிலத் தோழர்கள் ராமாராவ், அனுராதா, வி. லதா மற்றும் சென்னை தொலைபேசி தோழர்கள் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளர் கண்ணப்பன் ஆகியோர்கள் பெரும் முயற்சிகள் மேற்கொண்டார்கள்.  இந்த நேரத்தில் அவர்களுக்கு நம் நன்றிகளை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்


No comments:

Post a Comment