IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 7 September 2024

STR DN EXECUTIVE COMMITTE MEETING 4-9-24 MINUTES 



 தோழர்களே தோழியர்களே வணக்கம். 

கடந்த புதன்கிழமை 04-09-2024 காலை 11.15 மணி முதல் 01.30 மணி வரை பூக்கடை தொலைபேசி நிலையம் 5வது தளத்தில் நமது   STR Division செயற்குழுக் கூட்டம்    தோழர் N. K. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   


  நமது கௌரவ தலைவர் தோழர்.A.சுகுமாரன் 

அ. இ. து. தலைவர் தோழர் K.  முத்தியாலு, மா. செயலர் தோழர் S. சுந்தர கிருஷ்ணன், மா. பொருளாளர் தோழர் S.காளிதாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

25-10-2023 முதல் 31-8-2024 வரையில் உள்ள காலக்கட்டத்தில் மறைந்த  நம் தோழர்களுக்கும், மறைந்த மற்ற தலைவர்களுக்கும் கூட்டத்தில் முதலில் அஞ்சலி செலுத்தப்பட்டது

25-10-2023 முதல் 31-8-2024 வரையிலான காலக்கட்டத்திற்கான இடைக்கால செயல்பாட்டு அறிக்கையை மாவட்ட செயலர் தாக்கல் செய்து கூட்டத்தின் ஒப்புதலைப் பெற்றார்.  மாவட்ட பொருளாளர் 1-4-23 முதல் 23-8-24 காலக்கட்டத்திற்கான ஆடிட் செய்த வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்து அவையின் ஒப்புதலைப் பெற்றார். 

தற்போடைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 1736 என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சொசைட்டியில் உள்ள தோழர்களின் தொகையை தோழர்களுக்கு திரும்ப பெற்றுத்தருவது பற்றி விவாதம் நடைபெற்றது. தோழர் N.K., சுகுமாரன் ஆகியோர் போதுமான விளக்கங்களை அளித்தனர். முடிவில் அந்த தொகையை பெறுவதற்கு மாநில, மத்திய சங்கங்கள் தீவிரமாக முயற்சி செய்யும் என்று கூறப்பட்டது. 

அனைவரின் ஒருமித்த கருத்தாக  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நமது  STR DN  மாநாட்டை சிறந்த முறையில்  நடத்துவது,

 நமது செயற்குழு உறுப்பினரகள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் வகையில் முயற்சி மேற்கொள்வது, 

இந்த மாநாட்டிற்காக நமது உறுப்பினர்களிடம் நன்கொடை வசூல் பெறுவது இல்லை, நம்மிடம் உள்ள நிதியிலிருந்து சிறந்த முறையில் நடத்துவது, 

உறுப்பினர்கள் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடக்கும் இடம் அமைய முயற்சி மேற்கொள்வது, 

நீதி மன்ற வழக்கு நிதி 266425/- உறுப்பினர்களிடமிருந்து வசூலாகியது . 08-05-2024 அன்று அ. இ. சங்க வங்கி கணக்கில் 210000/- ரூபாய் செலுத்தப்பட்டது.  மீதமுள்ள பணம் 56425 ரூபாய் அ. இ. வங்கி கணக்கில் விரைவில் சேர்க்கப்படும். 

பஞ்சாப்  பாடியாலாவில் நடைபெறவுள்ள மத்திய செயற்குழுவில் நமது தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த செப்டம்பர் மாத கூட்டம் நடைபெறாது எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. 

Life Ceritificate, CGHS, Sampaan, Family Pension ஆகியவைகளில் உறுப்பினர்களுக்கு உள்ள சந்தேகங்களை போக்க சிறு சிறு குறும்படங்கள் மூலம் விளக்க GRP ADMIN S. நரசிம்மன் க்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

நிறைவாக மாவட்ட செயலாளர் செயற்குழுவில் கலந்து கொண்ட தோழர் தோழியர் அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.                   

 28 தோழர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 

தோழமையுடன்

உங்களின்

N. S. தீனதயாளன். 

D. S,, STR,  Chennai.

No comments:

Post a Comment