IDA INCREASE FROM 1-10-2025

IDA INCREASED 3.6% FROM 1-1-2026 - TOTAL 236.8%

Thursday, 12 February 2026

 

*10-2-26 அன்று நடைபெற்ற STR DN. ன் மாதாந்திர கூட்ட அறிக்கை*

தோழர்களே!

STR DN.ன் பிப்ரவரி மாதக் கூட்டம் 10ந்தேதி சென்னை பூக்கடை தொலைபேசி வளாகத்தில் மாலை 3.15 மணிக்கு தோழர் N. கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

தலைவர் தன் தலைமை உரையில் செயலாளர் N.S. தீனதயாளன் முக்கியமான  ஒரு காரணத்தால் இன்று வரமுடியவில்லை என்றும் உதவி செயலர் நரசிம்ஹன் கூட்டத்தை நடத்துவார் என்றும் மற்றும் அன்றைய கூட்டத்தின் AGENDA க்களாக அஞ்சலி, STR DN. கோட்ட செயல்பாடுகள், போராட்ட அறிவிப்புகள், மகளிர்தின கொண்டாட்டம், KYP, EPPO பற்றிய விளக்கங்கள் மற்றும் பல இருக்கும் என்று தெரித்தார். பின்னர் நரசிம்ஹனை பேச அழைத்தார்.

தோழர் நரசிம்ஹன், அஞ்சலி நிகழ்ச்சியில் நமது உறுப்பினர் திரு J.K. விவேகானந்தன், SDE, STR, மதுரை அவர்கள் 3-2-26 அன்று இயற்கை எய்தினார் என்பதை தெரிவித்து ஒரு நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். அனைவரும் அன்னாருக்கு ஒரு நமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தோழர் நரசிம்ஹன் அவருடைய பாணியில் ஒரு சில நகைச்சுவை ஜோக்குகளை கூறி, உறுப்பினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். அதன்பின் சென்ற கூட்ட அறிக்கையினை அவையில் வாசித்து அவையின் ஒப்புதைலைப் பெற்றார். பின் சென்ற மாதம் 29-1-2026 அன்று மாலை ராஜ்ரத்னம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற தொலைதொடர்புதுறை கூட்டடுறவு சங்கம் சென்னை, ஒய்வுபெற்ற நமது உருப்பினர்களுக்கு சேரவேண்டிய நிலுவைத் தொகையினை உடனே வழங்கவேண்டி தமிழ் மாநிலச் சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநிலம் கூட்டுத்தலைமையில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்பாட்டம் மிக மிக சிறப்பாக நடைபெற்றதைப் பற்றி விளக்கி கூறினார்.

பின் இந்தமாதம் பிறந்தநாள் கொண்டாடும் தோழர்கள் T.R. குப்பன், அலெக்சாண்டர் ஆகியோர்களை மேடைக்கு அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறினார். உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.   

பின்னர் CCA தமிழ்நாடு அவர்களால் பென்ஷன் அதாலத் 26-2-26 அன்று திருச்சி, வேலூர் கோட்டங்களுக்காகவும், 10-3-26 அன்று கடலூர் பாண்டி கோட்டங்களுக்காகவும் நடக்க உள்ள செய்தியினை வெளியிட்டார். KYP, EPPO பற்றி இறுதியில் விளக்கமாக பேசுவதாகக் கூறிவிட்டு தன் உரையினை முடித்துக் கொண்டார்.

தலைவர் அடுத்த மாதம் மகளிர் தின சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்றும், தோழர்கள் அதுபற்றி அவர்களது ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.  தோழர் சுந்தரபாபு, மற்றும் தோழர் சேகர், அந்த கூட்டத்தை கிண்டியில் நடத்தலாம், சிறப்பாக நடத்தலாம், மகளிர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கலாம், சிறப்பு பேச்சாளர்கள், அதிகாரிகளை அழைக்கலாம் என்று தெரிவித்தார்கள்.

அடுத்து தலைவர்,  தோழர் நரசிம்ஹனை வர இருக்கும் இரண்டு ஆர்பாட்டங்களுக்கான அறிவுப்புகளை அறிவிக்குமாறு கூறினார்.

நரசிம்ஹன்,  மத்திய அரசின் தொழிலாளர் நல விரோதப் போக்கினை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு அண்ணாசாலை தபால் அலுவலகம் ஒரு ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். நமது அனைத்து இந்திய சங்க அறைகூவலுக்கு ஏற்ப நாமும் அதில் பங்கு கொள்ளவேண்டும் என்று கூறினார்.

அடுத்து வரும் 13-ந்தேதி அன்று ராஜரத்னம் ஸ்டேடியம் அருகில் மதியம் 2 மணிமுதல் 5 மணிவரை, மத்திய அரசின் வேலிடேஷன் சட்டத்தை எதிர்த்து FCPA கூட்டு சங்கங்களின் சார்பாக நடக்க உள்ள ஆர்பாட்டத்திலும் நாம் பங்கேற்கவேண்டும் என்று நமது மத்திய சங்கம் விடுத்த அறைகூடலின்படி நமது உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.

தோழர் விகடர் ராஜ் பேசுகையில் நமது AIBSNLPWA அமைப்பிற்கு FCPA ல்  சரியான மரியாதைகள் கொடுப்பதில்லை, நமது பென்ஷன் ரிவிஷன் பிர்ச்னைகளைக்கூட எடுப்பதில்லை என்றும் மேலும் பல குற்றச்சாட்டுக்களைக் கூறினார்.

தோழர் S. ராமகிருஷ்ணன் பேசுகையில் இந்தமாதம் 12 நடைபெறும் வேலைநிறுத்தம், 13 ந்தேதி நடைபெறும் போராட்டம் பற்றி பேசினார். நமக்கு பென்ஷன் ரிவிஷன் மிகவும் தாமதம் ஆகுவதாக குறிப்பிட்டு பேசினார். BSNL பென்ஷனர்களின் மினிமம் பென்ஷன் Rs.3500/-ஐ உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை நமது சங்கம் தீவிரமாக எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாநிலச் செயலர் S. சுந்தரகிருஷ்ணன் பேசுகையில் சொசைட்டி பிரச்னை பற்றி மிக விரிவாக விளக்கனார். KYP, EPPO பற்றியும் விளக்கிக் கூறினார். One Increment பிரச்னை, 78.2% fixation பிரச்னைகள் பற்றி எடுத்துரைத்தார். FCPA ல் நமக்கு உள்ள பிரச்னைகள் பற்றி எடுத்துக் கூறினார்.

தலைவர் தோழர் நரசிம்ஹனை KYP, EPPO பற்றி விளக்கம் அளிக்கும்படி கூறினார்.

தோழர் நரசிம்ஹன், KYP பாரத்தை யார் யாரெல்லாம் கொடுக்கவேண்டும், அதை எப்படி பூர்த்தி செய்யவேண்டும் என்று விரிவாக விளக்கம் அளித்தார். EPPO என்றால் என்ன, அதன் பலன் என்ன அது அவசியமா என்று பல சந்தேகங்களுக்கு விடை அளித்தார்.  EPPO பற்றி நாம் வெளியிட்ட வீடியோ இதுவரை 4500 பார்வையாளர்களைத் தாண்டி உள்ளது என்று கூறினார்.

தோழர் முத்தியாலு பேசுகையில் சொசைட்டி சம்பந்தமாக சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் வெளியூர் தோழர்கள் பங்களிப்புதான் அதிகம் என்றும், சென்னை தோழர்கள் அதிகம் கலந்து கொண்டிருக்கவேண்டும் என்றும் கூறினார். மத்திய அரசின் பட்ஜெட், அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஆகியவைகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் 64 தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழர் சுந்தரபாபு அனைவருக்கும் நன்றி கூறும்போது 29-1-26 ல் நடைபெற்ற சொசைட்டி சம்பந்தமான ஆர்பாட்டத்தில், சொசைட்டியினால் பாதிக்கப்படாத  நமது கோட்டத்தைச் சேர்ந்த பல தோழர்கள் கலந்து கொண்டார்கள், அவர்களுக்கு சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மற்றும்  இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும்,  நன்றிகளைக் கூறிக் கூட்டத்தை முடித்து வைத்தார்.    

1 comment:

  1. Many times i requested you to publish the news in english, since str pensioners are in tamilnadu, kerala, andraprdesh karnataka etc..All Southetn states pensioners may not be knowing tamil.. So i request to publish the news and all matters in english also.. Tamil nadu circle and Chennai are publishing in tamil all details.. Please piblish in english also... It is arquest... Ramakrishnan nair bsnl pensioner calicut.. Kerala are

    ReplyDelete