IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Sunday, 26 April 2020

OUR CIRCLE ASSOCIATION'S MESSAGE

STR சென்னையின் பாராட்டத்தக்க 
செயல்பாடு

CORONA நோய் தொற்று ஏற்பட்டதன் விளைவாக, நாடு முழுவதும் அதனால் பாதிக்க பட்டோருக்கு உதவும் பொருட்டு, நிவாரண நிதி திரட்ட நமது அகில இந்திய சங்கம் 29.03.2020 அன்று வேண்டுகோள் விடுத்தது.

ஒரு மாதத்திற்குள்ளாகவே ஊரடங்கு காரணமாக வெளியில் செல்ல இயலாத நிலையிலும், on line மூலமாகவே அனுப்ப உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு பிரதமர், தமிழ் நாடு முதலமைச்சர் ஆகியோரின் சிறப்பு நிதிக்கு இன்றைய தேதி வரை ரூபாய் ஆறு லட்சத்திற்கும் மேல் அனுப்ப பட்டுள்ளது. இது நாம் திரட்டியதில் மாநில அளவில் 54%, அகில இந்திய அளவில் 16% ஒரு மாவட்டம் மட்டுமே இவ்வளவு அதிகமான நிதியை திரட்டி உள்ளது என்பது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இதற்கு அயராமல் பணியாற்றிய மாவட்ட செயலரும் மாநில துணை செயலரும் ஆன தோழர் சுந்தரகிருஷ்ணனுக்கு மாநில சங்கத்தின் பாராட்டுக்கள். மேலும் மாவட்ட தலைவரும் அகில இந்திய சங்கத்தின் துணை தலைவருமான தோழர் சுகுமாரன், பொருளாளர் தோழர் மோகன் ஆகியோரும் இனைந்து செயல்பட்டதின் மூலமாக இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அள்ளி தந்த உறுப்பினர்களுக்கும் இதில் மகத்தான பங்கு உள்ளது.

இப்போது மட்டுமல்ல எந்த ஒரு இயற்கை பேரிடர்க்கும் முன்னணியில் இருந்து செயல்படுவது STR ன் தனி சிறப்பு.

தொடரட்டும் இந்த புனித பணி 
           
V.ராமராவ், மாநில தலைவர்
R.வெங்கடாச்சலம், மாநில செயலாளர்
S.காளிதாசன், மாநில பொருளாளர்
25.04.2020

No comments:

Post a Comment