19-9-1968
CENTRAL GOVT EMPLOYEES STRIKE
அருமைத் தோழர்களே, மத்திய அரசு ஊழியர்கள் 19-9-1968 அன்று நடத்திய மாபெரும் வேலைநிறுத்தின் நினைவுநாள் இன்று. இந்த வேலைநிறுத்த நாள் பற்றி நமது தலைவர்கள் தோழர்கள் முத்தியாலுவும், தோழர் ராமன்குட்டியும் விடுத்த செய்திகளை இங்கு பதிவிட்டு இருந்தோம். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்ட நான் என்னுடைய மறக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றினை இங்கு பதிவிடலாம் என நினைக்கிறேன். நான் DOTல் மெக்கானிக்காக பண்ருடியில் பணியில் சேர்ந்தது ஜூன் மாதம் 1968. வேலை நிறுத்தம் செப்டம்பர் 19. மூன்று மாதமே பணியில் இருந்த நான் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வதென்று முடிவெடுத்தேன். அதிகாரிகளும், ஏன் சில தொழிற்சங்க தலைவர்கள் கூட, என்னை வேலைநிறுத்ததில் கலந்து கொள்ளவேண்டாம் அல்லது விடுமுறையிலாவது சென்று விடுங்கள் என்று அறிவுறித்தினார்கள். நான் வேலைநிறுத்தித்தில்தான் கலந்து கொள்வேன் என்று அனைவரிடமும் உறுதியாக தெரிவித்து அதன்படி அந்த மகத்தான வேலை நிறுத்தத்தில் வெற்றிகரமாக கலந்து கொண்டேன் என்று இன்றும் பெருமையுடன் கூறிவருகிறேன். அந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக வேலை நீக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டேன் என்பதும், நமது மாபெரும் தலைவர்கள் ஞானையா, குப்தா, ஜெகன் முயற்சியால் அது விலக்கப்பட்டு பணியில் மீண்டும் சேர்ந்தேன் என்பதும் என் மனதில் இன்றளவும் நீங்கா நினைவுகளாக இருக்கின்றது. அந்த வேலை நிறுத்தத்தின்போது பண்ருட்டியில் என்னுடன் இருந்த நமது தோழர் D.S. ராமலிங்கமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று எனக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய செய்தி. அந்த நேரத்தில் தோழர் ஜெகன் சொன்ன ஒரு உத்தரவாதம் இன்றும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. "வேலை நீக்கப்பட்ட கடைசி தோழர் மீண்டும் பணியில் சேரும்வரை நாங்கள் யாரும் பணிக்கு செல்ல மாட்டோம்" என்பதே அந்த உத்தரவாதம். அதன்படி அவரும் செய்து காட்டினார். அதன்பிறகு பிற்காலங்களில் நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்த போராட்டங்களிலும், 20 நாள் வேலை நிறுத்தம் உட்பட பல போராட்டங்களில் பங்கு கொண்ட போதிலும் எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கள் தலைவர்கள் எங்களை பாதுகாத்தது மட்டுமில்லாமல் பதவி உயர்வும் பெற்றுத் தந்தார்கள். எனக்கு வழங்கப்பட்ட அந்த டெர்மினேஷன் நொட்டீசை இன்றும் என் நினைவு பொக்கிஷமாக பத்திரமாக பாதுகாத்து வைத்து இருக்கிறேன். இந்த செய்தியின இங்கு பதிவு செய்ய எனக்கு வாய்ப்பளித்த நமது STR DIVISION தலைவர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-----நரசிம்மன்
No comments:
Post a Comment