IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Thursday, 25 August 2022

PENSION REVISION LATEST NEWS FROM OUR CHQ



வெற்றியை நோக்கி நாம் !

 ஏற்கனவே அறிவித்தபடி,  28/7/2022 அன்று  நமது துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து பென்சன் ரிவிஷன் செய்ய வேண்டிய நியாயத்தை எடுத்துரைத்தோம். நமது கோரிக்கையை பரிசீலிக்க அமைச்சர் ஒப்புக் கொண்டார். அதன் அடிப்படையில் ஒரே வாரத்தில் DOT (Establishment) நாம் முன்மொழிந்த  திட்டத்தை  Financeக்கு அனுப்பி Member,  Finance அதற்கு ஒப்பதல் வழங்கி, DOT செயலருக்கு 22/8/2022 அன்று  அனுப்பினார். DOT செயலர் இன்று (25/8/2022) அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து  பென்சன் அமைச்சகத்திற்கு (DOP & PW) அனுப்பிவிட்டார் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.

 DPO & PW ஏற்கனவே நம்மிடம் உறுதி அளித்தபடி,  இந்த முன்மொழிவை  ஏற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு (Cabinet note) சமர்பிப்பார்கள் என்று  எதிர்பார்க்கிறோம். 

பென்சன் ரிவிஷன் File, DOT செயலரின்  ஒப்புதலோடு சஞ்சார் பவனிலிருந்து மேல் மட்டத்திற்கு செல்லும் வரை நாம் ரகசியம் காத்தோம். 

வெற்றிக்கு எப்போதும் பல தந்தையர்கள் உண்டு; ஆனால் உண்மையே வெல்லும்.


 

No comments:

Post a Comment