தோழர்களே வணக்கம்.
நமது STR Division கூட்டம் 15-11-2022 மாலை 3.15 மணிக்கு தலைவர் தோழர் N.K.அவர்கள் துவக்கி வைத்தார்.அவரே அஞ்சலி உறையும் நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் தோழர் தீனதயாளன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் நமது உறுப்பினர் தோழியர் R. பிருந்தா அவர்களின் மகள் திருமணம் 27-10-2022 அன்று T.Nagar ல் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் 26-10-2022 மாலை நமது தோழர்கள் மணமக்களை வாழ்த்தினர். மணமகன் செல்வன் ஹரீஷ் மணமகள் செல்வி லாவண்யா.
07-11-2022 அன்று நமது மாநில உதவி செயலாளர் தோழர் N.வீரபாண்டியன் அவர்களின் மகன் ஹரி ஓம் பிரகாஷ் திருமணம் செங்குன்றத்தில் (ரெட் ஹில்ஸ்) சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் மாலை நமது மாநில செயலாளர் தோழர் சுந்தர கிருஷ்ணன் அவர்களும் அ.இ. துணைப்பொது செயலாளர் தோழர் K. முத்தியாலு அவர்களும் மணமக்கள் ஹரி ஓம் பிரகாஷ் , மற்றும் பூஜா வை வாழ்த்தினர். என்று தெரிவித்தார்.
சென்ற மாத கூட்டத்திற்கு பிறகு இன்று வரையில் புதிதாக சேர்ந்துள்ள பத்து புதிய உறுப்பினர்களையும் சேர்த்து நம் STR உறுப்பினர் எண்ணிக்கை 1605.
அடுத்து தோழர்கள் L.கிருஷ்ணமூர்த்தி, S.ராமகிருஷ்ணன், சண்முக வடிவேல் மற்றும் P.V.கிரி ஆகியோரின் கேள்விகளுக்கு தலைவர் N.K மற்றும் மாநில செயலாளர் விளக்கமளித்தனர். தோழர் S.ராமகிருஷ்ணன் கூறிய மூன்று பிரச்சினைகளையும் மாவட்ட சங்கம் அ.இ.சங்கத்திற்கு தீர்மானம் அனுப்ப இசைவு தெரிவித்துள்ளது.
பொருளாளர் S.ராம்குமார் அவர்கள் அ.இ.மாநாட்டுக்கு நன்கொடையும், அ.இ.சங்கத்திற்கும், மாநிலச் சங்கத்திற்கும் பகுதிப் பணம் அனுப்பிய தகவலை தெரிவித்தார்.தோழியர் ஹேமலதா அவர்களின் கேள்விக்கும் கூட்டுறவு சங்கம் தொடர்பான கேள்விகளுக்கும் தலைவர் N.K மற்றும் மாநில செயலாளர் பதிலளித்தனர்.
மூத்த தோழர் கோவிந்தராஜன் அவர்கள் மற்றும் தோழர் விக்டர் ராஜ் ஆகியோர் கோட்ட செயலர் தீனதயாளனை பாராட்டி பேசினர்.
மாநிலச் செயலாளர் அவர்கள் வங்கிகளிலிருந்து சம்பானுக்கு மாற்றம் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் கொடுப்தில் நமது உறுப்பினர்களின் சிரமம். அதனைத்தொடர்ந்து CCA வுக்கு தெரிவித்ததன் பயனாக ஒரு 233 பக்கம் 6944 ஓய்வூதியர்கள் பட்டியல் Dy CCA வால் மாநில செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஓய்வூதியரின் பெயர் அவரது பழைய PPO, புதிய PPO, செல்போன் எண் வங்கியின் பெயர் மற்றும் வாழ்நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டிய மாதம் ஆகிய அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அதைப் பார்த்து வாழ்நாள் சான்றிதழ் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அடுத்தாக சென்னையிலுள்ள 14 CGHS wellness Centre களிலும் AIBSNLPWA தமிழ் மாநிலதின் சார்பாக நான்கு Wellness Centre களுக்கு Advisors.
மீனம்பாக்கம் தோழர் ராமா ராவ் அவர்களும்
கிண்டிக்கு தோழர் முத்தியாலு அவர்களும்
வேப்பேரிக்கு தோழியர் சுரமஞ்சரி அவர்களும்
மற்றும் அடையாறுக்கு தோழர் விக்டர் ராஜ் அவர்களும் தேர்வாகி உள்ளனர். இந்த பதவி ஓராண்டுக்கானது.
நமது கௌரவ த்தலைவர் சுகுமாரன் அவர்கள் ஓய்வூதிய மாற்றம் குறித்து விரிவாக பேசினார் மேலும் சிறப்பாக சொல்வதற்கேதுமில்லை என்றுகூறி நிறைவு சேர்ந்தார்.
இறுதியாக தலைவர் முத்தியாலு அவர்கள் BSNLலில் ஓய்வு பெற்ற நாம் அனைவரும் IDA Pensioners என்று கூறினார். மேலும் Amendments to Constitution to be Presented in the AIC Visakhapatnam.
அஇமாநாட்டிற்கு ஐம்பது உறுப்பினர்களுக்கு ஒரு சார்பாளர் மற்றும் மாநில மாநாட்டிற்கு 25 உறுப்பினர்களுக்கு ஒரு சார்பாளர் என்ற நிலையே தொடர வேண்டும் என்றும் அ.இ.மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மாநில மற்றும் மாவட்ட மாநாடுகள் இரண்டாண்டிற்கு ஒரு முறையும் நடைபெற வேண்டும்.தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதனை நமது மாநில பொருளாளர் தோழர் காளிதாசன் அவர்கள் வழிமொழிந்தார். இந்த தீர்மானம் கரவொலியோடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டத. அஇமாநாட்டில் பங்கு கொள்ளும் சார்பாளர்கள் அனைவரும் Pensioner Pathrika November December 2022 இதழை படித்து வரவேண்டும்.
நமது அடுத்த டிசம்பர் மாதக்கூட்டம் Pensioners Day கூட்டம். சிறப்பாக அமைய அதிக எண்ணிக்கையில் தோழர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறினார்.
தலைவர் N.K அவர்கள் கூட்டம் நிறைவடைந்தது என்று கூறினார். 05.30மணிக்கு கூட்டம் முடிந்தது. 87 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்
உங்கள்
N.S.தீனதயாளன்
மாவட்ட செயலாளர்
STR Division,Chennai
94449 79576.
No comments:
Post a Comment