LIFE CERTIFICATE கொடுப்பது
எப்படி ?
நவம்பர் மாதம் பிறந்துவிட்டது. LIFE CERTIFICATE கொடுக்கவேண்டிய
நேரமும் வந்துவிட்டது. இந்தமுறை, BSNL பென்ஷனர்களிடையே, 1. ஆரம்பம் முதல் உள்ள சம்பண்
பென்ஷனர்கள், 2. சம்பண்
பென்ஷனர்கள் அல்லாதவர்கள் அதாவது வங்கி மாற்றம் செய்யப்படாத பென்ஷனர்கள், 3. வங்கி
மாற்றம் செய்யப்பட்ட பென்ஷனர்கள். 4. POST OFFICE பென்ஷனர்கள் என நான்கு பிரிவுகள்
ஏற்பட்டிருப்பதால் நம் தோழர்கள் பலருக்கு அவர்கள் LIFE CERTIFICATE கொடுப்பது எப்படி
என சந்தேகங்கள் எழுந்துள்ளது. பலர் இதுபற்றி தமிழில் விளக்கி எழுத வேண்டும் என வேண்டுகோள்
விடுத்ததால் அது பற்றி இங்கு விளக்கமாக எழுதியுள்ளோம்.
1. வங்கி
மாற்றம் செய்யப்படாத பென்ஷனர்கள் அல்லது சம்பண் பென்ஷனர்கள் அல்லாதவர்கள்:
இவர்கள் வழக்கம்போல் நவம்பர் மாதம்
வங்கிகளுக்கு சென்று ஆயுள் சான்றிதழ் கொடுத்துக் கொள்ளலாம். வங்கிகளுக்கு செல்லாமல்
வேறு எவ்வாறெல்லாம் ஆயுள் சான்றிதழ் கொடுக்கலாம் என்பது பற்றி கடைசீ பாராவில் கூறி
இருக்கிறோம்.
2. பழைய சம்பண் பென்ஷனர்கள்:
அதாவது சம்பண் பென்ஷன் துவக்கப்பட்ட
காலத்திலிருந்து அதில் இருந்து வருகிறவர்கள். அதாவது 2019 பிப்ரவரிக்குப்பின் சம்பண்
பென்ஷன் திட்டத்தில் இணைந்தவர்கள். இவர்களும், VRS திட்டத்தில் வந்தவர்களும் அவர்கள்
எந்த மாதத்தில் ஓய்வுபெற்றார்களோ அந்த மாதத்தில்
ஆயுள் சான்றிதழ் CCA TN அலுவலகத்திற்கு சமர்பிக்கவேண்டும். எந்தெந்த வழிமுறைகளில் அதை
கொடுப்பது என்பது பற்றி கடைசீ பாராவில் எழுதியுள்ளோம்.
3. வங்கி
மாற்றம் செய்யப்பட்ட பென்ஷனர்கள் அல்லது புதிய சம்பண் பென்ஷனர்கள்:
SBI, IB, IOB போன்ற அனைத்து வங்கிகளின்
CPPC மூலம் பென்ஷன் பெற்றுவரும் அனைத்து பென்ஷனர்களுக்கும் CCA TN அலுவலகம் அவர்களே
நேரிடையாக பென்ஷன் வழங்கும் திட்டத்திற்கு பெயர்தான் சம்பண் என்பது இப்போது நாம் அனைவரும்
அறிந்ததே. இந்த வேலையை கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வங்கியாக அவர்கள் மாற்றிக் கொண்டு
வருகிறார்கள். இதுவரை SBI வங்கி தவிர மற்ற வங்கிகளின் பெரும்பாலான பென்ஷனர்களை மாற்றம்
செய்து விட்டார்கள். SBI வங்கி பென்ஷனர்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாற்ற வேண்டும்
என்பது அவர்களது இலக்கு.
ஒரு பென்ஷனரை வங்கி மாற்றம் செய்யும்போது
அந்த பென்ஷனர்களின் மொபைல் நம்பருக்கு அதுபற்றி CCA TN அலுவலகம் SMS தகவல் அனுப்புகிறார்கள்.
அவர்கள் வங்கி மாற்றம் செய்யப்பட்ட புதிய சம்பண் பென்ஷர்கள் ஆவார்கள். அவர்கள் இனிமேல்
அவர்களுடைய ஆயுள் சான்றிதை வங்கிகளிடம் கொடுக்கக் கூடாது. அதை CCA TN அலுவலகத்திற்குத்தான்
கொடுக்க வேண்டும். அவர்கள் எப்போது அந்த சான்றிதழை கொடுக்க வேண்டும் என்பது பற்றியும்
அந்த SMS ல் தெரிவிக்கிறார்கள். அதாவது அந்த SMS கிடைத்த மூன்று மாதங்களுக்குள் எப்போது
வேண்டுமானாலும் கொடுக்கலாம். அடுத்த வருடம் இப்போது எந்த மாதத்தில் கொடுக்கிறோமோ அதே
மாதத்தில் கொடுக்கவேண்டும் CCA TN ல் கொடுத்துக் கொள்ளலாம். சம்பண்ணுக்கு மாற்றம் செய்யப்படாதவர்கள்
வழக்கம்போல் இந்த வருடம் நவம்பருக்குள் வங்கிகளில் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க
வேண்டும்.
4. போஸ்ட்
ஆபீஸில் பென்ஷன் வாங்குபவர்களுக்கு தற்போது எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம்போல்
நவம்பரில் போஸ்ட் ஆபிஸில் ஆயுள் சான்றிதழ் கொடுக்கவேண்டும்.
சரி இப்போது எப்படியெல்லாம் ஆயுள்
சான்றிதழ் கொடுக்கலாம் என்று பார்க்கலாம்:
1. சம்பண்
பென்ஷனர்கள் CCA TN அலுவலகத்திற்கு சென்று நேரிடையாக கொடுக்கலாம்.
2. அல்லது
ஜீவன் ப்ரமான் மூலம் டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் CCA TN க்கு அனுப்பலாம்.
3. போஸ்ட்
ஆபீஸ் போஸ்ட்மேன் மூலமாக டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் பெற்று CCA TN க்கு அனுப்பலாம்.
4. POSTMASTER
இடம் லைஃப் சர்டிஃபிகேட் வாங்கி அனுப்பலாம்.
5. BROWSING
CENTRE மூலம் அல்லது ESEVA மூலம் டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் பெற்று அனுப்பலாம்.
6. சொந்தமாக
FINGER PRINT SCANNER வைத்திருப்பவர்கள் வீட்டிலிருந்தே அதை மொபைல் ஃபோன் மூலமாகவோ
அல்லது லாப்டாப் அல்லது டெஸ்க்டாப் மூலமாக அனுப்பலாம்.
7. ஃபேஸ்
ரிகக்னிஷன் டெக்னாலஜி மூலம் அனுப்பும் வசதி CCA TN அலுவலகத்திற்கு இன்னும் வரவில்லை.
8. இப்படி
எதாவது ஒரு வழியில் CCATN க்கு கொடுக்கும்போது அவை கேட்கும் கேள்விகளுக்கு கீழே குறிப்பிட்டுள்ளபடி கொடுக்கவேண்டும்.
1. PENSIONERS
NAME : (NAME)
2. TYPE
OF PENSION : SERVICE
3. SANCTIONING
AUTHORITY : TELECOM
4. DISURSING
AGENCY : SAMPANN DEPARTMENT OF TELECOM
5. AGENCY : PR.CCA. TN
6. PPO
NUMBER : YOUR PPO NUMBER
7. ACCOUNT
NUMBER (PENSION): BANK SB PENSION
ACCOUNT NUMBER
குறிப்பு: சம்பண்
பென்ஷனர்கள் அல்லாத பழைய பென்ஷனர்கள் வங்கிகளுக்கு டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் மூலம்
கொடுக்க விரும்பினால் கீழ்கண்டவாறு கொடுக்கவேண்டும்.
1. REGISTERED
PPO NUMBER : YOUR PPO NUMBER
2. PENSIONER
NAME : YOUR NAME
3. TYPE
OF PENSION : SERVICE
4. ORGANISATION
TYPE : CENTRAL GOVERNMENT
5. SANCTIONING
AUTHORITY : TELECOM
6. DISBURSING
AGENCY : BANK
7. AGENCY : STATE BANK OF INDIA (OR YOUR BANK NAME)
8. PPO
NUMBER : YOUR PPO NUMBER
9. ACCOUNT
NUMBER (PENSION): YOUR BANK ACCOUNT
NUMBER FOR PENSION
கூடுதல் தகவல்:
வங்கி மாற்றம் செய்யப்படும் பென்ஷனர்களுக்கு
அவர்களுடைய பழைய PPO NUMBER 2100 என்று தொடங்கியிருந்தால் அவர்களுக்கு புதிய PPO எண்
கொடுக்கப்படும். அந்த புதிய எண் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். டிஜிட்டல் லைஃப்
சர்டிஃபிகேட் கொடுக்கும்போது அந்த புதிய நம்பரைத்தான் கொடுக்க வேண்டும். அதை எப்படி
தெரிந்து கொள்வது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
https://www.dotpension.gov.in/Login/Index
என்கிற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும். அதில் “KNOW YOUR PPO No.” என்பதில் க்ளிக்
செய்யவேண்டும். அதில் உள்ள ACCOUNT NO என்பதில் உங்களுடைய வங்கி பென்ஷன் அக்கவுண்ட்
நம்பரை கொடுக்க வேண்டும். அடுத்து உங்களுடைய பிறந்த தேதி, மற்றும் கேப்ச்சாவை பூர்த்தி
செய்து submit பட்டனை அழுத்தினால் உங்களுடைய புதிய PPO நம்பரும், உங்களுடை அதிகாரபூர்வமான்
மொபைல் நம்பரும் வரும். அவைகளை வைத்து நீங்கள் புதிய login creation செய்து கொள்ளலாம்.
இதுபற்றி மேலும்
ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களை கீழ்க்கண்ட நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
S. நரசிம்ஹன்
ASST. DN.
SECY
STR DN.
CHENNAI
ஒரு சிறிய திருத்தம்:
ஃபேஸ் ரிகக்னிஷன்
மூலம் டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் கொடுக்கும் வசதி CCA TN அலுவலகத்திற்கு இன்னும்
வரவில்லை என்று எழுதியிருப்பது தவறு. அதை திருத்தி மாற்றி CCA TN அலுவலகத்திற்கும்
ஃபேஸ் ரிகக்னிஷன் மூலம் டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட்
கொடுக்கும் வசதி உண்டு என்று வாசிக்கவும். அதே போல வங்கிகளுக்கும் கூட அந்த வசதியை
உபயோகித்து டிஜிட்டல் லைஃப் சர்டிஃபிகேட் கொடுக்கலாம். தவறை சுட்டிக்காட்டிய தோழர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment