IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 18 August 2023

 இன்று (18.08.2023) CCA அலுவலக அதிகாரிகளுடன் சந்திப்பு

**********

சென்னை தொலைபேசி AIBSNLPWA மாநில சங்க  நிர்வாகிகள் இன்று CCA அலுவலக அதிகாரிகளைச் சந்தித்து பல பிரச்சினைகள் குறித்துப் பேசினார்கள்.

அவற்றின் முக்கிய பொது பிரச்னைகளின் தகவல்களின் விவரம் கீழே கொடுத்துள்ளோம்.


(4) பென்சன் கணக்கு வங்கி மாற்றம் : பென்சன் பெறும் வசதியை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றுவது குறித்து சில விளக்கங்களை கேட்டோம்.

(a) ஒரே வங்கியின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற புதிய கிளை விவரங்களுடன் Dy.CCA-வுக்கு கடிதம் கொடுத்தால் போதும்.


(b) ஒரு வங்கியிலிருந்து வேறு வங்கிக்கு மாறினால் இப்போது பென்சன் பெறும் வங்கியிலிருந்து 'No due certificate' வாங்கி Dy.CCA-க்கு கொடுக்கும் கடிதத்துடன் இணைக்க வேண்டும்.


(5)  ஆகஸ்டு & செப்டம்பர் மாதத்தில் லைஃப் சர்டிபிகேட் கொடுக்க வேண்டியவர்கள் ஆகஸ்டு-21 &22ல் எத்திராஜ் சாலை CCA அலுவலகத்தில் நடைபெறும் மேளாவை பயன்படுத்திக் கொண்டு LC கொடுக்கலாம்.


(6) லைஃப்  சர்டிபிகேட்டை (a) CCA அலுவலகத்தில் கொடுக்கலாம். 

(b) தபால் அலுவலகம் - தபால்காரர் மூலம் கொடுக்கலாம்-  ரூ.70/- கட்டணம்

(c) ஈசேவை செய்யும் நெட் சென்டர்கள் மூலமாக கொடுக்கலாம்.

(b) & (c) மூலம் கொடுக்கும்போது TELECOM என்பதை தவறாமல் குறிப்பிட வேண்டும்.


(7) அஞ்சல் துறையில் பென்சன் வாங்கும் மொத்தம் 14,000 பேரில் இன்னும் 150 பேர் மட்டுமே SAMPANN-க்கு மாற்றப்படவில்லை. அடுத்த மாதம் அவர்களும் மாற்றப்படுவார்கள்.


(8) வங்கியிலிருந்து SAMPANN-க்கு மாற்றப் படாதவர்கள் 3500 பேர். அஞ்சல்துறை மூலம்  பென்சன் பெறுவோர் முழுவதும் மாற்றப்பட்ட உடன் இந்த 'வங்கி' பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


நன்றி:

S.தங்கராஜ்,

மாநிலச் செயலாளர், 

AIBSNLPWA 

சென்னை தொலைபேசி

No comments:

Post a Comment