IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Tuesday, 13 June 2017

13-6-17 MONTHLY MEETING REPORT:
                                         

இந்த மாதாந்திரக் கூட்டத்திற்கு தோழர் A. சுகுமாரன் தலைமை வகித்தார். தோழர் N. மோகன் சென்ற கூட்ட அறிக்கையை அவையில் வாசித்து அதன் ஒப்புதலைப் பெற்றார். தோழர் நரசிம்மன் இந்த மாதம் பிறந்தநாள் வரும் உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நமது கிளையில் புதிதாக இணைந்துள்ள 15 உறுப்பினர்களை அவையில் அறிமுகம் செய்து வைத்தார். பின் 78.2% பென்ஷன் ரிவிஷன் உத்தரவுகள் வெளிவருவது குறித்து விரிவாக எடுத்து உரைத்தார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அரியர்ஸ் தாமதமாக கொடுத்து வருவது பற்றி நமது சங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார். இதுவரை 150 உறுப்பினர்கள் 78.2% பென்ஷன் ரிவிஷன் நன்கொடையாக சுமார் 1.5 லட்சம் கொடுத்திருப்பதாகவும் மீதமுள்ளவர்களும் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
 தோழர் ராமலிங்கம் 78.2 பென்ஷன் ரிவிஷன் விஷயமாக நமது கிளை CCA அலுவலகத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கினார். உத்தரவு வராதவர்கள் பென்ஷன் அதாலத்திற்கு மனு அனுப்புமாறுக் கேட்டுக்கொண்டார். BSNLMRS OPTION கடிதங்களை உடனடியாக அலுவலகங்களில் சமர்ப்பித்துவிடுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
தோழர் சுந்தரகிருஷ்ணன் பேசுகையில் தமிழ்நாடு CGM அலுவலகத்தில் 78.2% பென்ஷன் ரிவிஷன் முடிவுபெற்ற விவரங்களையும், 3% அரியர்ஸ் பெற்றுத்தந்த விவரங்களையும், 3%க்கு  LEAVE ENCASHMENT பெற்றுக்கொடுத்ததையும் விரிவாகக் கூறினார். GRATUITY CEILING 20 லட்சம் உயர்வு உரியவர்களுக்கு வழங்க வேலைகள் நடைபெற்று வருவதாக கூறினார். பின் கூட்டத்தில் கலந்துகொண்ட 133 உறுப்பினர்களுக்கும் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.  

No comments:

Post a Comment