IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 12 July 2017

STR DIVISION 11-7-17 MONTHLY MEETING

தோழர் A. சுகுமாரன் அவர்கள் இந்த மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தினார். மறைந்த தோழர் D. ஞானையா, EX. GENERAL SECRETARY, NFPTE அவர்களுக்கும், மற்றும் நமது உறுப்பினர் தோழர் C.V. வாதிராஜனுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தோழர் N. மோகன் சென்றக் கூட்ட அறிக்கையை அவையில் வாசித்து உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றார்.
தோழர் S. நரசிம்மன் இந்த மாதம் பிறந்தநாள் வரும் உறுப்பினர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறினார். STR DIVISION குடும்பநல நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். புதிதாக சேர்ந்துள்ள 17 பென்ஷனர்களை அவையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் பேசுகையில் ஜூலையிலிருந்து IDA 1.9% உயர்ந்திருப்பதாகக் கூறினார். 78.2% பென்ஷன் ரிவிஷன் அரியர்ஸ் பற்றிய தற்போதைய நிலைப்பற்றியும் கூறினார். ஆகஸ்டுக்குப் பிறகு நடைபெற உள்ள பென்ஷன் அதாலத்தில் STR DIVISION பிரச்னகள் பற்றி விவாதிக்கப்படும் என்றார். நமது மத்திய சங்கம் 78.2 பென்ஷன் ரிவிஷன் அரியர்ஸ் 1-1-2007 லிருந்து பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக தெரிவித்தார். அனைவரும் ஆயுள் சந்தா உறுப்பினராக வேண்டும், 78.2% பென்ஷன் ரிவிஷன் நன்கொடை அளிக்க வேண்டும் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். இந்தக்கூட்டத்திற்கு சேலத்திலிருந்து வந்துள்ள தோழர் செல்லப்பன் அவர்களையும், நமது உறுப்பினர் தோழர் செல்வம், பொதுமேலாளர், சென்னை தொலைபேசி அவர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகக் கூறினார்.
தோழர் சுகுமாரன் பேசுகையில் CCA அலுவலகத்தில் வேலைகள் மோசமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். அதன் தாமதப் போக்கைக் கண்டித்து நமது சங்கங்கள் வரும் 19ந்தேதி காலை 10 மணிக்கு எதிராஜ் சாலையில் உள்ள CCA அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறி நமது உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் பேசுகையில் தமிழ் மாநில சங்கம் DOT யின் “EXTRA INCREMENT” RECOVERY சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகக் கூறினார். இதனால் பாதிக்கப்பட்ட தோழர்கள் மாநிலச்சங்கம் கேட்கும் தகவல்களை உடனடியாக தருமாறுக் கேட்டுக்கொண்டார். 
தோழர் D.S. ராமலிங்கம் பேசுகையில் CCA அலுவலகத்தில் 15700 PPOக்கள் வெளியிடப்பட்டு விட்டதாகவும், 579 பேர்களுக்கு இன்னும் வெளியிட வேண்டியிருப்பதாகவும் கூறினார். அவர்கள் PPOக்களை பழைய விலாசத்திற்கே அனுப்புவதாகவும் கூறினார். நமது CHQ 78.2% பென்ஷன் ரிவிஷன் அரியர்ஸ் 1.1.2007 முதல் கிடைக்க நீதிமன்றம் செல்ல இருப்பதாகக் கூறினார். நீதிமன்ற செலவுகள் அனைத்தையும் CHQ வே ஏற்றுக்கொள்ள இருப்பதாக கூறினார்.

தோழர் முத்தியாலு பேசுகையில் BSNL ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படவேண்டும். லாபமில்லை என்று கூறி அதை மறுப்பது ஞாயமில்லை என்று கூறினார்.  7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி BSNL பென்ஷனர்களுக்கு பென்ஷன் ரிவிஷன் வேண்டும் என்று நாம் கோரி வருகிறோம் என்றார். CCA அலுவலகத்தில் பென்ஷனர்களை மதிப்பதில்லை என்றும், சரியான முறையில் தகவல்களைத் தருவதில்லை என்றும் கூறினார். மாநில நிர்வாகிகளுக்குக் கூட நல்ல முறையில் பதில் தருவதில்லை என்றும் கூறினார். ஆகையால் இதை கண்டித்து வருகிற 19ந்தேதி எதிராஜ் சாலையில் உள்ள CCA அலுவலகம் முன்பாக தமிழ் மாநில சங்கமும், சென்னைத் தொலைபேசி மாநில சங்கமும் இணைந்து மாபெரும் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறினார். இதற்கு நமது STR  கிளையிலிருந்து 200 தோழர்கள் வரவேண்டும் என்று கூறினார்.
தோழர் S. ராமநாராயணன் பேசுகையில் AIFPA வின் அனைத்திந்திய மாநாடு வரும் 21 & 22 தேதிகளில், T. NAGAR ல் நடக்க இருப்பதாகக் கூறி, நமது தோழர்கள் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தோழர் L. கிருஷணமூர்த்தி பேசுகையில் பென்ஷனர் பிரச்னைகளை சரியாக தீர்க்காத CCA அலுவகத்தை எதிர்த்து கடுமையாக் போராட வேண்டும் என்றார்.
தோழர் சேலம் செல்லப்பன் பேசுகையில் அவரது பழைய தோழர்களை இங்கு இப்பொது சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக் இருப்பதாகக் கூறினார். STR DN தலைவர்கள் முத்தியாலு, சுகுமாரன், நரசிம்மன், சீதரன் ஆகியோர்களின் தந்நலமற்ற சேவைகள் பாராட்டுக்குறியது என்றார். பென்ஷர்களுக்கு பென்ஷனர் அசோசியன் சேவைகள் மிகவும் தேவை என்றார்.
தோழர் செல்வம் பேசுகையில் STR DIVISION செயல்பாடுகளைப் பற்றிப் பாராட்டிப் பேசினார். பென்ஷர்கள் அதிக அளவில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பது பென்ஷனர்களுக்கு அதிக அளவில் பிரச்னைகள் இருப்பதால்தான் என்றார். அதவைகள் அனைத்தையும் நாம் வென்று எடுப்போம் என்றார். 
தோழர் சுந்தரகிருஷ்ணன் பேசுகையில் தமிழ் மாநில சங்கத்திலிருந்து 58 பென்ஷனர்களுக்கு GRATUITY REVISION PAPERS, CCA அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டு விட்டதாகக் கூறினார். மெடிகல் அலவன்ஸ் வேலைகள் CGM அலுவலகம் வரை முடிந்து விட்டதாகவும், மற்ற SSA க்களிடமிருந்து தகவல்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட 140 உறுப்பினர்களுக்கும், தோழர்கள்  சேலம் செல்லப்பனுக்கும், தோழர் செல்வத்திற்கும் நன்றி கூறினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட  தோழர்களுக்கு இனிப்பு வழங்கிய தோழர் A.L. வெங்கட்ரமணாவுக்கு நமது நன்றியைத் தெரிவித்த பின்னர் கூட்டத்தை இனிதே முடித்து வைத்தார். இந்தக் கூட்டத்தில் நமது கிளைக்கு மேலும் 20 நாற்காலிகள் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment