IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Monday, 23 September 2019

CGHS மெடிகல் கார்ட்  வாங்குவதற்கான வழிமுறைகள்

1. உங்களது BSNLMRS ஒரிஜினல் கார்டினை  உங்களது AGM, BSNL OFFICEல் சரண்டர் செய்துவிட்டு, அவர்களிடம் சரண்டர் சர்டிஃபிகேட் பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்கான மாதிரி கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்: BSNL லிருந்து  கொடுக்கப்படும் கடிதத்தில் உங்களுக்கு FIXED MEDICAL ALLOWANCE இனிமேல் இல்லை என்ற வார்த்தைகள் இடம் பெற்று இருக்கவேண்டும்.)
BSNL CHTD லிருந்து கொடுக்கப்பட்ட மாதிரி கடிதம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.    

2. BSNL லிருந்து கொடுக்கப்படும் சரண்டர் சர்டிஃபிகேட்டை கடிதத்தை  CCA TN, ETHIRAJ  SALAI ல் கொடுத்து,  நமது IDA LAST PAY DRAWNக்கு இணையான CDA PAYSCALEக்கான சம்பள விகிதத்தை மாற்றி அமைத்து  கடிதம்  கொடுக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.   (இதற்கான மாதிரி கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

3. CCA TN கொடுக்கும் கடிதத்தை பெசன்ட்நகரிலிருக்கும் RAJAJI BHAVANல் உள்ள CGHS அலுவலத்தில் ஒரு விண்ணப்ப படிவத்தில் CGHS CARD வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம்  கொடுக்கவேண்டும்.  (அந்த விண்ணப்ப மாதிரி கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் எந்த CGHS DISPENSARY வேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த DISPENSARYன் பெயரை அந்த கடிதத்தில்  குறித்து கடிதம் கொடுக்கவேண்டும்).

4. CGHS அலுவலத்தில் நீங்கள் கட்ட வேண்டிய தொகையை குறித்துக் கொடுப்பார்கள். கட்டணத்தொகையை வருடாந்திர அல்லது ஆயுள் கட்டணமாக செலுத்தலாம். கட்டணத்தொகையை DD ஆக மட்டுமே செலுத்தவேண்டும். 

5. CGHS ல் கட்டணத்தொகை செலுத்தியவுடன் தற்காலிக அடையாள கடிதம் INDEX CARD நமக்கு அளிக்கப்படும். 3 மாதங்களுக்குள் plastic அட்டை கிடைக்கும். 

6. INDEX CARDன் காப்பியுடன், BSNLMRS CARD SURRENDER CERTIFICATE காப்பியையும் இணைத்து BSNL அலுவலத்தில் சமர்ப்பித்து, நாம் கட்டிய தொகையை திருப்பி தருமாறு விண்ணப்பிக்க வேண்டும். 

7. இதில் சந்தேகம் எதுவும் இருந்தால் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.





No comments:

Post a Comment