IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 27 November 2019

வருந்துகிறோம்

நமது திருநெல்வேலி மாவட்ட சங்க செயலுரும், நமது அனைத்திந்திய சங்க உதவி செயலுருமான தோழர் S. அருணாசலம் 26-11-2019 அன்று அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அவர் ஒரு மூத்த தொழிற்சங்கவாதி. நமது சங்கம் வளர்வதற்காக அரும்பாடுபட்டு வந்தவர். இலாக்கா உத்தரவுகள் அத்தனையும் அவருக்கு அத்துபடி. சமீபத்தில் நமது  மாநில சங்கம் சார்பாக வெளிவந்த  CGHS  கையேடு புத்தகத்தை எழுதி, தொகுத்து, அச்சிட்டு வெளியிட்டவர் அவர். இந்த செய்தியை CGHS புத்தகம் பற்றி நாம் முன் வெளியிட்ட செய்தியிலும் குறிப்பிட்டிருந்தோம். 

CGHS கையேடு புத்தகத்தை நாம் நமது WEBSITE ல் வெளியிட அதன் SOFTWARE COPY ஐ இமெயிலில் நமக்கு அனுப்பி உதவியவரும் அவர்தான். 

நமக்கு CGHS பற்றி எழும் எல்லா சந்தேகங்களுக்கெல்லாம் அவரிடம் தொடர்புகொண்டு விளக்கங்கள் பெற்று வந்துள்ளோம். 26ந்தேதி அவர் மறந்த தினத்தன்றுகூட அன்று காலை திருச்சியிலிருந்த அவரிடம் தொடர்பு கொண்டு சில விளக்கங்களைக் கேட்டு பெற்றதை நம்மால் மறக்க முடியவில்லை. 

2012 FEBRAUARYல் நடந்த நமது AGB  MEETINGல் நமது சிறப்பு சொற்பொழிவு ஆற்ற அவரை வரவைத்து அவரை கௌரவித்தோம். 

அன்னாருக்கு நமது STR கோட்டத்தின் சார்பாக சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment