IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Friday, 27 August 2021

 MEETING WITH AD CGHS CHENNAI BY OUR CIRCLE OFFICE LEADERS

14.08.2021 அன்று நடை பெற்ற மாநில செயலக கூட்ட முடிவின் படி, இன்று (27.08.2021) CGHS Additional Director திரு சண்முகநாதன் அவர்களை மாநில தலைவர் தோழர் V.ராமராவ், மாநில செயலாளர் R. வெங்கடாசலம், மாநில துணை செயலாளர் தோழர் S.சுந்தரகிருஷ்ணன் மூவரும் சந்தித்து, நமது ஓய்வூதியர்கள் சென்னையில் உள்ள MIOT, BILLROTH  மற்றும் பிற மருத்துவ மனைகளில் உள் நோயாளியாக சேர்ந்து Treatment பார்த்து கொள்ள இயலாத சூழ்நிலை குறித்து விளக்கமாக கடிதம் கொடுத்து விவாதித்தோம். MIOT-ஐ பொறுத்த வரை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய Bill கள் அனைத்திற்கும் காசோலை அனுப்பி விட்ட தாகவும், அவர்களுக்கு payment சென்று விட்டதற்கான தகவலை எதிர் பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும் Billroth மருத்துவ மனையில் Beds availability இல்லாத காரணத்தினால் தான் admission இல்லை என்றும் தெரிவித்தார். பெங்களூருவில் அப்போல்லோ நமது ஓய்வூதியர்களுக்கு Empanel லில்  உள்ளது போல் சென்னை யிலும் இருந்தால் கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று கேட்டதற்கு, சென்னை அப்பல்லோ, அவர்களாக வரவில்லை . நாங்களாக 

( CGHS நிர்வாகம் ) அப்பல்லோவை அணுகுகிறோம் என்று தெரிவித்தார்.  இன்றைக்கு CGHS கொடுக்கும் rates 2014 ம் ஆண்டு நிர்ணயிக்க பட்டது என்றும் அதை மாற்றினால் தான் பல மருத்துவ மனைகள் தானாக வருவார்கள். இதை உங்கள் போன்ற ஓய்வூதியர்கள் அமைப்பு தான் டெல்லி மட்டத்தில் முயற்சி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நெல்லை ஐ போன்று திருச்சி யிலும் ஒரு மருத்துவ மனை empanel  செய்ய வேண்டும் என்று கோரிய தற்கு, SRM Institute முன் வந்து இருப்பதாகவும் விரைவில் இறுதி செய்ய படும் என்றார்.

Addl Director அவர்கள் மிகவும் பரிவுடனும், அக்கறையுடனும் அவருக்கு இருக்கும் பணிகளுக்கு  இடையில் நம்முடைய கடிதத்தை பார்த்து வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்தார். நமது மாநில சங்கம் வெளியிட்ட CGHS Guide அவருக்கு கொடுத்தோம். அதை பெற்று கொண்டு நம்முடைய முயற்சியை பாராட்டினார்.

இந்த சந்திப்பு தற்போது உள்ள தேக்க நிலையை போக்கி முன்பு போல் தடை இல்லாமல் MIOT, மற்ற மருத்துவ மனைகளில் treatment எடுத்து கொள்ள வழி வகுத்துள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.



No comments:

Post a Comment