IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 29 April 2023

மாநில செயலருக்கு பாராட்டு  

சம்பண் பென்ஷனர்களுக்கு நேற்றே (28-4-23 – வெள்ளிக்கிமை அன்றே) பென்ஷன் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. பொதுவாக சம்பண் பென்ஷன் தொகை வங்கியில்,  கடைசீ வங்கி வேலைநாளில்தான் வரவு வைக்கப்படும். இதுவரை அப்படித்தான் நடந்து வந்துள்ளது. ஆனால் வங்கிகளுக்கு இன்று வேலைநாளாக இருக்கும்போது சம்பண் பென்ஷன் தொகை நேற்றே (வெள்ளி - 28-4-23) வரவு வைக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுகிறது அல்லவா.  இதற்கான காரணம் ஒன்று உள்ளது. நமது மாநில செயலர் தோழர் சுந்தரகிருஷ்ணன் CCA TN அதிகாரிகளிடம் உங்கள் அலுவலகத்திற்கு கடைசீ வேலை நாளில் ஊதியம் பெற்றுக் கொள்கிறீர்கள் அதே போல் உங்கள் பென்ஷனர்களுக்கும் உங்கள் கடைசீ வேலை நாளில் பென்ஷன் கொடுக்கப் படவெண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் நியாயத்தை உணர்ந்த CCA TN அதிகாரிகள் இனி CCA TN ஊழியர்கள் ஊதியம் பெறும் அன்றே சம்பண் பென்ஷனர்களுக்கும் பென்ஷனை வரவு செய்துவிடுங்கள் என்று வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால்தான் சம்பண் பென்ஷனர்களுக்கு வெள்ளிக்கிழமை பென்ஷன் வரவு வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என்று கூறப்பட்டது.  இந்த பிரச்னையை கையில் எடுத்து CCA TN அதிகாரிகளிடம் வாதிட்டு வெற்றிபெற்ற நமது மாநில செயலர் தோழர் சுந்தரகிருஷ்ணனுக்கு STR DIVISION சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

1 comment:

  1. கடைசீ என்பதற்கு பதிலாக கடைசி என்று இருக்கலாம்.

    ReplyDelete