IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 15 April 2023

 CGHS Vepery பகுதி ஆலோசனைக்குழுக் கூட்டம் 15-4-23 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. 

இதில் CMO Dr. கீதா,   லோகல் கெமிஸ்ட் சார்பாக தோழர் மணிவண்ணன், பென்ஷனர்கள் சார்பாக சுரமஞ்சரியும், working staff சார்பாக தோழர் பாலாஜி from postal side கலந்து கொண்டனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் ,CMO அவர்களுக்கு நன்றி கூறி, பிரச்னைகளை  விவாதிக்க தொடங்கினர்.

1. பொதுவாக மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதாக   அவர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தோம்.

1.. Complaint box open செய்து ,அதில் எந்த complaintம் இல்லை ,எனவே விவாதம் தொடர்ந்தது.

2. complaint and suggestion box என அதில் எழுதி வைக்கலாம் என எடுத்துரைத்தோம் அதை CMO acknowledge செய்து மாற்றுவதாக கூறினார்

3. CMO அவர்கள் ,பொதுவாக அவர்களிடம் இருப்பு இல்லாத மருந்துகள் ஏன் இரண்டு நாட்களும் ,அதற்கு பிறகும் தரப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை  விவரித்தார்.  மருந்துகள் procure செய்யும் முறைகள் பற்றி பின்வருமாறு கூறினார்...

* CGHS central store depot 

* generic medicine from Jan aushadhi store

* indenting to authorised medical shop thro local purchase 

 * அதிக விலையுள்ள life saving medicines முதலில்   formalities (obtaining approval from CGHS approved specialist Doctor) முடித்த பிறகு, நிர்ணயம் செய்யப்பட்ட  மருந்தின் தொகையின் அளவின்படி , Director office ,Chennai and Delhi வரை அனுப்பி approval செய்யப்பட்டு பிறகு வாங்கப்படுகிறது .

மேற்கண்ட விவரத்தை தெரிவித்த அவர்கள், இதன்படி medicine supply செய்வதில் உள்ள தாமதம் குறித்து தெளிவுபடுத்தினார்.

  எந்த complaint/problem இருந்தாலும் உடனுக்குடன் (even after working hours) அவர்களுக்கு தெரியப்படுத்துமாறும் ,அதற்கான முழு ஒத்துழைப்பு அவர்கள் நல்குவதாக  கூறினார்.


கூட்டத்தின் போது எடுப்பட்ட  photoவை இதனுடன் இணைத்துள்ளேன் ,

நன்றி .N.Suramanjari.



No comments:

Post a Comment