IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Saturday, 15 April 2023

 CGHS பெரம்பூர் ஆலோசனைக் குழுக்கூட்டம் 15-


CGHS பெரம்பூர் பகுதி ஆலோசனைக்குழுக் கூட்டம் 15-4-23 மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் CMO Dr. ரேவதி, RWA சார்பாக தோழியர் லதா, லோகல் கெமிஸ்ட் சார்பாக தோழர் அருண்குமார், பென்ஷனர்கள் சார்பாக தோழர் நரசிம்மன் கலந்து கொண்டார்கள். முதலில் CMO Dr. ரேவதி அவர்களுக்கு AIBSNLPWA பென்ஷனர் அசோஷியேஷன் சார்பாக பொன்னாடை அணிவித்தும், மெமெண்டோ அளித்தும் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.

தோழர் நரசிம்மன் கீழ்கண்ட பிரச்னைகளை அவர்களிடம் விவாதித்தார்.

1. பொதுவாக மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செயல்படுவதாக பென்ஷனர்கள் நம்மிடம் தெரிவித்த கருத்துக்களை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தோம்.

2. கூட்டம் அதிய அளவில் இருப்பதாகவும், காத்திருப்பு நேரம் அதிகமாக இருப்பதாகவும் ஒரு பென்ஷனர் தெரிவித்த கருத்தை தெரிவித்தோம்.  மூன்று மருத்துவர்கள் இருந்த இடத்தில் ஒரு மருத்துவர் அண்ணாநகருக்கு மாற்றப்பட்டதின் காரணத்தால் தற்போது இருவர் மட்டுமே இருப்பதாகவும் இதில் CMO அவர்கள் அலுவலக நிர்வாக வேலையையும் சேர்த்து கவனிக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. கூடுதலாக ஒரு மருத்துவர் வந்தால்தான் நிலைமை சரியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

3. ONLINE APPOINTMENT பெற்றவர்களை அந்த குறித்த நேரத்தில் அனுமதிப்பதில்லை. காக்க வைக்கப்படுகிறார்கள் என்ற பிரச்னையை கூறினோம். இனி டோக்கன் வழங்கும்போதே online appointment என்று குறிப்பிட்டு குறித்த நேரத்தில் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நேரடியாக மருத்துவர்களை பார்ப்பதற்கு டோக்கனில் குறிப்பிட்டு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

4. இடப் பற்றாக்குறையால் பென்ஷனர்கள் வெளியே அமர வைக்கப் படுகிறார்கள் என்று தெரிவித்தோம்.  பெரம்பூர் WELLNESS CENTRE ல் மொத்த பயணாளிகளின் எண்ணிக்கை 9978 என்றும் தினமும் சராசரியாக 140 உறுப்பினர்கள் மருத்துவ வசதி பெற வருவதாகவும். சனிக்கிழமைகளில் இது இரட்டிப்பாக இருப்பதாகவும் இதனால் இடப் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்தந்த மருத்துவர்களை பார்ப்பவர்களை தனித்தனியே பிரிப்பதும் கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பெரிய விசாலமான இடத்திற்கு பெரம்பூர் WELLNESS CENTRE ஐ மாற்றினால்தான் நிலைமை சரியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. காலை 8 மணி முதல் 10 மணி வரை கூட்டம் குறைவாக இருப்பதாகவும், உறுப்பினர்கள் அந்த நேரத்தில் வந்தால் தாமதம் இல்லாமல் செல்லலாம் என்று கேட்டுக் கொண்டார்கள். 

5. கடந்த 3 வாரங்களாக நீரழிவு நோய் டாக்டர் வரவில்லை என்று தெரிவித்தோம். அது அவர் சொந்த காரணங்களுக்காக விடுமுறையில் இருப்பதனால் வரவில்லை. வரும் வாரங்களிலிருந்து அவர் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது. 

6. EMPANALLED HOSPITAL SPECIALIST DOCTORS பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வழங்க வலியுறுத்தப்பட்டது. அதே கம்பனி மருந்துகள் வழங்கமுடியாவிட்டால் அதே components உள்ள வேறு மருந்து கம்பனி மாத்திரைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

7. 3 மாதங்களுக்கு பிறகு வரும் உறுப்பினர்கள் விருப்பப்ட்டால் BLOOD PRESSURE கண்டிப்பாக பார்த்து சொல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

8. பென்ஷனர்கள் காத்திருப்பு இடத்தில் ஒரு wall mounted fan ஓடவில்லை, இந்த வெயில் காலத்தில் பென்ஷனர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், அதை உடனே சரி செய்யவேண்டும் என்று உறுப்பினர் தோழியர் லதா கேட்டுக் கொண்டார். உடனே சரிசெய்து தருவதாக தெரிவித்தார்கள். 


பொதுவாக இந்தக் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. CMO மற்றும் அலுவலக ஊழியர்களும் குறைகளை பரிவுடன் கேட்டு அவர்களால் முடிந்த அனைத்தையும் நிவர்த்தி செய்து தருவதாக உறுதி கூறினர். அவர்களுக்கு நமது பென்ஷனர்கள் அமைப்பின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட நிழல்படங்களை இத்துடன் பதிவு செய்திருக்கிறோம். நன்றி. வணக்கம். 

தோழையுள்ள S. நரசிம்ஹன்

1 comment:

  1. Respected Sir.
    Sanction and disbursal of FMA to former STR and STP is pending since very long time with the PCCA, Chennai. It was learnt, off the records the since the process of migration to SAMPANN , the FMA case is kept aside.
    Sir, can you please help in this regard ?

    ReplyDelete