IDA INCREASE FROM 1-7-2026

IDA FROM 1-7-2026 - 241.8%

Thursday, 16 July 2026

 MINUTES OF STR DN MTG 

HELD ON 14-7-26

தோழர்களே தோழியர்களே வணக்கம். 

நமது STR Division ஜூலை மாத கூட்டம் கிண்டியில்  IEMA  R V Tower,

K V K A/C ஹாலில், இரண்டாவது தளத்தில், 

தோழர் 

N. K. அவர்கள் தலைமையில்

 3.25 மணிக்கு துவங்கி ஆறு பதினைந்து மணி வரையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் தோழர்

 N. S. தீனதயாளன்

அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து சென்ற மாத நிகழ்வுகளை வாசித்தார் இடைப்பட்ட காலத்தில் மேலும் இரண்டு புதிய உறுப்பினர்கள் சேர்ந்து இன்றளவில் நமது உறுப்பினர் எண்ணிக்கை 1846 என்று கூறினார். 01-07-2026 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஓய்வூதிய மாற்றத்திற்கான தீர்ப்பினை வழங்கியது.

அது நம் அனைவருக்குமே ஒரு பாதகமான தீர்ப்பாக அமைந்தது அதன்மேல் அகில இந்திய சங்கம் மேல்முறையீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார் அடுத்து தோழர் D.விட்டராஜ் அவர்கள் நமது மாநில துணைச் செயலாளர்

 டெல்லி உயர் நீதிமன்றத்தில் BSNLலில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள் மத்திய அரசு ஓய்வூதியர்கள்  அல்ல என்றும் அவர்கள் CPC அடிப்படையில் ஓய்வூதியம் கோர முடியாது என்றும் 01-07- 2026 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே நமது மத்திய சங்கம் இந்த நிலையில், BSNL, MTNL  ஓய்வூதியர் சங்கங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சேவையில் உள்ள சங்கங்களையும் இணைத்து IDA வுக்காக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டதைப்போல ஓய்வூதிய மாற்றத்திற்கான ஒரு அகில இந்திய போராட்டத்திற்கு நமது அகில இந்திய சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Third PRC அடிப்படையில்  ஓய்வூதிய மாற்றம் பெரும் ஒரே வழி. இதற்கான  முயற்சியில் நமது அகில இந்திய சங்கம் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார் அடுத்ததாக தோழர் சிவகுமார் அவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார் 

மேலும் அகில இந்திய மாநாட்டிலும் 

Third PRC  அடிப்படையில் ஓய்வூதிய மாற்றத்தை பெற்றுத்தர அகில இந்திய சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் கொடுத்து உள்ளதையும் நினைவு கூர்ந்தார் அடுத்ததாக தோழர் மந்திரமூர்த்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தனது கருத்தை தெரிவித்தார் அதன் பிறகு பேசிய தோழர்

சிவ சங்கரன் அவர்கள் சமீபத்தில் இந்து பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியை நம்மிடமே பகிர்ந்து கொண்டார் 

அதில் ஆயிரக்கணக்கான வழக்குகள் 

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு

 14 ஆண்டுகள் ஆகும், அது வரை காத்திருக்க போகிறோமா,? என்று வினவினார் அடுத்து நமது பொருளாளர்

தோழர் சுந்தரபாபு அவர்கள் ஓய்வூதிய மாற்றத்திற்கு நாம்  Third PRC வழியில் முயற்சிக்க வேண்டும் என்றும் அதுபோலவே சொசைட்டி பிரச்சையை தீர்த்து வைப்பதற்கு குழு ஒன்றை மாநில சங்கம் விரைவில் அமைத்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார் 

அடுத்து மாநில செயலாளர் அவர்கள் மாநில செயற்குழுவை பற்றியும் அதன் முடிவுகளை பற்றியும் பேசினார் குறிப்பாக சொசைட்டி விசயத்தில் பழைய குழு கலைக்கப்பட்டதையும் புதிய குழு அமைக்கப்பட்டு நமது உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையினை விரைவில் பெற்று தர மாநில சங்கம் முயற்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார் அதனை அடுத்து நமது அகில இந்திய துணைத் தலைவர் தோழர் முத்தியாலு அவர்கள் 2013இல் ஏழாவது ஊதிய கமிஷன் அமைக்கப்பட்டது அன்று பிரதம மந்திரியின் உதவியாளரா க இருந்த அமைச்சர் திரு.நாராயணசாமி அவர்களை புதுச்சேரியில் சந்தித்து நமது BSNL ஓய்வு ஊதியர்களுக்கு ஏழாவது சம்பளக் குழு அடிப்படையில்ஓய்வூதிய மாற்றம் வேண்டும் என்று மகஜர் வழங்கியதை நினைவு கூர்ந்தார்.

மேலும் தாம் கோர்ட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அது காலதாமதம் ஆகும் என்றும் குறைந்தது நீதி கிடைக்க பத்தாண்டுகள் ஆகும் என்றும் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் மேலும் இன்று டெல்லி உயர் நீதிமன்றம் BSNL ஓய்வூதியர்கள் மத்திய அரசு ஓய்வூதியர்கள் அல்ல என்ற தீர்ப்பு, தான் அன்றே சொன்னது இன்று நீதிமன்றம் கூறியுள்ளது என்பதை வலியுறுத்தினார். ஆக நாம் Third PRC  அடிப்படையில்ஓய்வூதிய மாற்றம் பெற, BSNL ஊழியர் சங்கங்களையும் அணுகி ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தி  Affordability Class ஐ நீக்க நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தன் கருத்தை வலியுறுத்தினார் அதன் பிறகு மாவட்ட செயலாளர் செயற்குழுவில்

 12 ஓய்வூதியர் சங்கங்களுடன் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி IDA உத்திரவினை பெற்றது போல, ஓய்வூதிய மாற்றத்தையும்,

அ. இ. சங்கம் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதைத் தவிர்த்து, Third PRC அடிப்படையில்  பெற்றுத்தர முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார் 

அகில இந்திய   மாநாட்டிலும் 

STR Division 

Third PRC அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் பெற்றுத்தர அ. இ. சங்கம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுருத்தியதையும் நினைவு கூர்ந்தார்.  தோழர்

K ஆறுமுகம் அவர்கள் மாநில துணைச் செயலாளராக தமிழ் மாநில செயற்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மாநிலச் செயலாளரும் அகில இந்திய  துணை தலைவர்  அவர்களும் மாவட்ட செயலாளரும் வாழ்த்தி சிறப்பித்தனர். பொருளாளர் தோழர் சுந்தரபாபு அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார் கூட்டத்தில் 46 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் தோழமையுடன் உங்களின் 

N. S. தீனதயாளன் 

D S STR Chennai.

1 comment:

  1. Sir, An important item like meeting details, why cannot you publish in english also... Many times i requested, str pensioners not only in Tamilnadu.str pensioners are there in all four ztates it will be much usefull to all.... If u publish in english also.....

    ReplyDelete