IDA INCREASE FROM 1-1-2025

IDA INCREASED 4.3% FROM 1-1-2025 - TOTAL 228.5%

Wednesday, 14 March 2018


எங்கும் புதுமை !, எதிலும் புதுமை !!, இதுவே நம் STR கோட்ட சங்கத்தின் செயல்பாடு . நேற்று நடைபெற்ற மகளிர் தின விழா அன்று கடவுள் வாழ்த்துப்பாடல் கூட BSNL பெருமையினை பறை சாற்றும் பாடலாக எல்லோர் மனத்திலும் நீக்கமற நிறைந்து நின்றது. நாம் ஓய்வுபெற்று விட்டாலும் நம் ஓய்வூதியர் மனங்களில் BSNL நின்று நிலவுகிறது என்பதற்கு இப்பாடலே சாட்சி . 
பாடலை எழுதி இசை நயத்தோடு பாடிய தோழியர் ஓ எஸ் .அன்னபூரணி அவர்களை பாராட்டுகிறோம்.
அந்த வாழ்த்துப்பாடல் இதுதான் 

திருவடி தொழுகின்றோம் ஆண்டவன்
திருவடி தொழுகின்றோம்.

தருமம் தழைத்திடவே        
சத்தியம் ஓங்கிடவே
பருவமழை பொழிந்து
பயிர்கள் செழித்திடவே !

தகவல் தொடர்பினிலே
தன்நிகர் இன்றியே
அகிலத்தில் அரும்பணி
ஆற்றும் நம்நிறுவனம்
பற்பல சேவைகள்
பாங்குடன் அளித்திடும்
சீர்மிகு             BSNL  
சிறப்புடன் வாழ்கவே !
Com.O.S.Annapurani



No comments:

Post a Comment